Swathanthra school of yoga

  • Home
  • Swathanthra school of yoga

Swathanthra school of yoga SWATHANTHRA SCHOOL OF YOGA

Spreading Vibrant Health through Yoga
regular Intense Training Courses

24/12/2025

திருப்பாவை -9

ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே போற்றி
ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

பொருள்:

பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்!

அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:

உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

#தூமணிமாடத்து
#திருப்பாவை
#ஆண்டாள்
#யாவைநோன்பு #

ஓம் நமோ நாராயணாய

21/12/2025

#திருப்பாவை6

II ஶ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய I I

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும்,

சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றை எல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

விளக்கம்:

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண

20/12/2025

ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
II திருப்பாவை மார்கழி 5 II

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். (5)

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.

அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:

உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை.

தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

*ஓம் நமோ நாராயணாய..!*

19/12/2025

திருப்பாவை முழுவதும் கேட்க
எமது வீடியோ லிங்க்--
https://youtu.be/seDxQVZyS_o?si=Duo_zPw1InH8V9YR

ஸ்ரீ ஆண்டாள்தாயார் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
திருப்பாவை -4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை4
ஆண்டாள்பாசுரங்கள்
#மார்கழி2025


👆🏼இது எமது புதிய வீடியோ (லிங்க் கமெண்டட் பகுதியில்  உள்ளது)🩷 மருதமலை முருகன் கோயிலில் கடந்த  இருபது வருடங்களாக அன்னதானம்...
12/12/2025

👆🏼இது எமது புதிய வீடியோ

(லிங்க் கமெண்டட் பகுதியில் உள்ளது)

🩷 மருதமலை முருகன் கோயிலில்
கடந்த இருபது வருடங்களாக அன்னதானம் வழங்கி வரும்
ப்ரணவம் அறக்கட்டளையின் மேலான சேவைகள், அவர்களது அனுபவங்கள் குறித்த நேர்காணல் இது.

🩷 அறக்கட்டளையை நிறுவிய சகோதரர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் மனப்பாங்குகள், அனுபவங்கள் நமக்கு பெரும் ஊக்கத்தை வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துகிறது.

🩷. சபரிமலை யாத்திரீகர்களைக்கும் இந்த அறக்கட்டளை தனது சேவைகளை விரிவாக்கி உள்ளது.

🩷. அவர்களது சேவைகளின் சில படங்கள், வீடியோக்களுடன் கூடிய இந்தப் பதிவை பிறருடன் பகிர்ந்து நன்மை வளர உதவுங்கள்.

#அன்தானசேவைகள்
#மருதமலைமுருகன்
#ப்ரணவம்ஃபெடரேசன்
#சபரகமலைஅன்னதானக்குழுக்கள்

Address


Opening Hours

Monday 06:30 - 09:00
Tuesday 06:30 - 09:00
Wednesday 06:30 - 09:00
Thursday 06:30 - 09:00
Friday 06:30 - 09:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swathanthra school of yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Swathanthra school of yoga:

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share