18/08/2026
💧 ஒரு துளி அக்கறை…
ஆயிரம் மாணவர்களின் தாகம் தீர்க்கும் நம்பிக்கை! 🌿
14.08.2026 அன்று, கோயம்புத்தூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தியாகி N.G. இராமசாமி நினைவு அரசு உதவி பெறும் பள்ளிக்கு, சுமார் ₹27,600 மதிப்பிலான புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தாய்மை அறக்கட்டளை சார்பில் அமைத்து கொடுத்து மகிழ்ந்தோம்.
🏫 பள்ளியின் மாண்புமிகு தலைமை ஆசிரியர் திரு. சதாசிவன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, பள்ளியின் குடிநீர் தேவையை தாய்மை அறக்கட்டளை நேரில் அறிந்து கொண்டது.
ஆய்வு செய்தபோது, இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் தினமும் சுமார் 1,000 மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறும் வாய்ப்பு இருப்பதை அறிந்து, இச்சேவைத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்தோம். மேலும் பள்ளி இடைவேளைகளின் போது அனைத்து சிறுவர் சிறுமியர்களும் குடிக்க போதுமான நேரமும், சுத்தமான குடிநீர் மற்றும் குழாய்களும் இல்லாமல் இருப்பதை அறிந்தோம்.
அவர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு கருவிகளுடன் கூடிய டேங்க் அமைத்து கொடுத்தும், டேங்க் தாங்கியுள்ள இரும்பு கம்பிகளுக்கு பெயிண்ட் அடித்து, வடியும் குடிநீரை வீணாக்காமல் அதை wash basin போன்ற அமைப்பு ஏற்படுத்தி நீரை மரத்திற்கு பாசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
💧💚
இது ஒரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கிய நிகழ்வு மட்டுமல்ல…
நம் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலுக்கான ஒரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள முன்னெடுப்பு! 🌱
🤝 சேவையில் இணைந்த உள்ளங்கள்…
இந்த மகிழ்ச்சியான சேவை நிகழ்வில், தாய்மை அறக்கட்டளை ஆலோசகர்கள் திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. மகேஸ்வரன், அறங்காவலர்கள் திருமதி சாரதா, திரு. கோவை சதீஸ், திருமதி மகேஸ்வரி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்.. முத்துக்குமார், சூலூர் மகேஸ்வரி, சூர்யா, VR மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், PKPI சமூக ஆர்வலர் திரு. சந்திரசேகர் அவர்களும் இச்சேவை நிகழ்வில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். 🙏🏻
இந்த அர்த்தமிக்க சேவை முயற்சிக்கு ஒத்துழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சதாசிவன் அவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் தாய்மை அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றிகள்! 🙏🏻💚
“நாம் வழங்குவது வெறும் குடிநீர் அல்ல…
அது தாகத்தைத் தீர்ப்பதோடு,
ஆயிரம் உயிர்களின் நலனையும் வளர்க்கும் அன்பின் துளி!” 💧🌿
🌱 தாய்மை அறக்கட்டளை
அன்பு • சேவை • அர்ப்பணிப்பு
தாய்மை அறக்கட்டளை — சேவை உளமாற… ❤️
Thaimai Trust — Service Soulfully…
#தாய்மைஅறக்கட்டளை #குடிநீர்சுத்திகரிப்பு #பாதுகாப்பானகுடிநீர் #மாணவர்நலன் #கல்விசேவை #சமூகசேவை #கோயம்புத்தூர் #அன்புசேவை #சேவைஉளமாற