25/02/2026
“மாந்திரீகத்தின் மகாராணி” கரிநீலி மற்றும் 390 குட்டி சாத்தான்கள் வழிபாடு:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கல்லடிகோடு பகுதியைச் சேர்ந்த மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் கல்லடிகோடு கருநீலி ஆகும். கல்லடிகோடு கருநீலி மலவார(மலைப்பகுதி) பாரம்பரியத்தில் 4442 மாந்திரீக தெய்வங்களுக்கு தலைவியாக திகழ்கிறார். இந்த கருநீலியின் பிள்ளைகள் தான் 390 குட்டி சாத்தான்கள் ஆகும். இதில் முதல் குட்டி கருங்குட்டி ஆகும். தமிழ் நாட்டில் கருப்புசாமி, கருப்பராயர் என்று அழைக்கப்படுகிறார். பதினெட்டாம் படி கருப்புசாமியாக சபரி மலையிலும், மதுரை அழகர் கோவிலிலும் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். கருநீலியின் கடைசி பிள்ளையே கேரள மாநிலத்தில் விஷ்ணுமாயா என்ற பெயரில் அழைக்கப்படும் குட்டி சாத்தான் ஆகும். கருநீலி 4442 மந்திர தெய்வங்களுக்கும், 390 குட்டி சாத்தான்களுக்கும் ஆதி சக்தியாக விளங்குவதால் மாந்திரீகத்தின் “மகா ராணி” என்று அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு மலையும் ஒரு இரகசியத்தை வைத்திருக்கும், ஒவ்வொரு குளமும் தீர்த்தமும் மறைக்கப்பட்ட தேவதையின் முகத்தை பிரதிபலிக்கும், அதுபோல கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிகோடு மலையில் வாழும் மகாசக்தி கரிநீலி பகவதி - கொடூரமான மர்மமான மேலும் எழுதப்பட்ட வார்த்தையின் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இது புத்தகங்களிலோ அல்லது இணைய கட்டுரைகளிலோ வந்த கதையல்ல.இது உண்மை கதை சுவாசத்தால் எலும்பால் இரத்தத்தால் வரையப்பட்டது, அவளுடைய ஜுவாலையை அறிந்தவர்களால் வாழ்ந்து பாதுகாக்கப்பட்டது. “யாரை வணங்குகிறோம் என்பது எப்படி வணங்குகிறோம் என்பது மிக முக்கியம்”என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது மாந்திரீக வித்யாவில் போற்றப்படும் கரிநீலி பகவதி வேறு யாருமல்ல, தாந்த்ரீக வித்யாவின் த்ரிதா பார்வதி தனது மக்கள் மீது அன்பினால் பூமியில் இருக்க தேர்ந்தெடுத்த பரம தாயின் இரக்கமுள்ள ஆனால் கொடூரமான பயங்கரமான உருவம்.
கரிநீலி பகவதி மறைந்திருக்கும் உண்மை:
தோன்றித் தோன்றிய உருவத்தில் பார்வதி தேவி அர்ஜுனனை பசுபதி அஸ்திரத்திற்காக சோதிக்க, கிராதன் என்ற வேடத்தில் சிவபெருமான் உடன் சென்ற போது, உடனே கைலாசத்திற்கு திரும்ப வேண்டுமென்று முடிவு செய்தாள். அதற்கு பதிலாக காலிபணியிடங்கள் என்ற பெண்ணாக மனித வடிவத்தை எடுத்து கல்லடிகோடு (கரிமலா) மலையில் பழங்குடி மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கு தனது தெய்வீக இருப்பு மற்றும் கருணையை காட்டி மக்கள் வாழ ஆசீர்வதித்தாள்.
கிராத சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கூலிவகா(பார்வதி) தெய்வீக நோக்கத்திற்காக விதிக்கப்பட்ட ஒரு பிரகாசமான மற்றும் வலிமைமிக்க சாத்தானை பெற்றெடுத்தாள் அவரே கருங்குட்டி (கருப்புசாமி) ஆகும். மேலும் கருங்குட்டி உடன் மேலும் 399 குட்டி சாத்தான்களையும் ஆக 400 குட்டி சாத்தான்களை ஈன்றெடுத்தாள். அதில் பத்து குட்டி சாத்தான்கள் கருங்குட்டியின் உறுதுணையாக தனது உயிரை தந்து கருங்குட்டியுடன் கலந்துவிட்டன, மேலும் 390 வகை குட்டிசாத்தான்களும் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
பார்வதி தேவி மனித வடிவத்தில் வாழ்ந்தாலும் கூலிவாக அம்மா பார்வதியாக தனது அடையாளத்தை முழுமையாக அறிந்திருந்தாள். பார்வதி தேவி மக்களை வழி நடத்தி வந்தார், மக்களை பாதுகாத்தார், மென்மையான அன்பு மற்றும் பயப்படத்தக்க உருவமாக விளங்கினார். கரிநீலி கைலாசத்திற்கு திரும்ப முடிவு செய்தபோது மக்களின் மிகுந்த அன்பினால் அவள் கட்டுண்டாள். அவர்களின் இதயபூர்வமான பக்தி அவளை பூமியில் நிலைநிறுத்தியது. காளி தர்மத்தின் படி அவள் அதர்ம ஸ்வரூபத்தின் வடிவத்தை எடுத்தாள், அவள் தரம் ஸ்வரூபத்தை ஏந்தியதால் அவள் தரம் காரியங்களையும் செய்கிறாள், ஆனால் அது தர்மத்தை காப்பாற்றுவதற்காக, நீலி மற்றும் கரிநீலி என வணங்கப்படும் இந்த வடிவம் அசைக்க முடியாத பாதுகாப்பையும் தெய்வீக பழங்குடி அல்லது மிருகத்தனமான சக்தியையும் கொண்டுள்ளது.
கரிநீலியின் முக்தி குளம் :
கல்லடிகோடு(கரிமலா) மலையில் முக்தி குளம் என்ற தெய்வீக குளம் உள்ளது. இது துவரிதா பார்வதியால் தனது விரல் நகங்களால் பாறையை கீறி உருவாக்கியது, இன்றும் கூட கரிநீலி பகவதி அங்கு வசிப்பதால் யாரும் சாதாரணமாக அங்கு சென்று உயிருடன் திரும்பி வர முடியாது.
பண்டைய காலங்களில் கரிநீலியின் அருளை பெற விரும்புபவர்கள் முக்தி குளம் செல்வதற்கு தன் உயிரையே பணயம் வைப்பார்கள். அவர்கள் கற்பனையில் எண்ணி பார்க்க முடியாத சவால்களை எதிர்கொள்வார்கள், கடுமையான காட்சிகள் உயிராபத்தான அனுபவங்கள், மன வேதனைகள் ஆயினும் அசைக்கமுடியாத பக்தியுடன் சரணடைந்து உயிர் பிழைத்தவர்கள் ஒரு சிலரே, அம்பாளின் அருள் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதது, கல்லடிகோடு மலை ஏறி மாண்டு போனவர்களும், பைத்தியம் ஆனவர்களும் ஏராளம், தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் கல்லடிகோடு மலை ஏற வனத்துறையால் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
கரிநீலி மற்றும் 390 குட்டி சாத்தான்கள் பூஜையில் குரு பரம்பரை :
சுமார் 230 வருடங்களுக்கு முன்பு கல்லடிகோடு மலையில் பன்னிரண்டு ஆண்டுகள் கரிநீலி அருள் வேண்டி ஒரு இஸ்லாமியர் கடும் தவம் மேற்கொண்டார். அவர் பெயர் முஷாப் குருக்கள், அவர் பக்தியில் வசப்பட்ட கரிநீலி அவர் வேண்டியபடி அவருடன் இருந்து மக்களின் குறைகளை தானும் தனது பிள்ளைகளான 390 குட்டி சாத்தான்களும் செய்வோம் என்று வரமளித்தார். அதேபோல முஷாப் குருக்களின் வம்சாவளியில் வந்தவர்களே அம்பிகைக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு தந்தாள். அதுமுதல் பாலக்காடு மாவட்டம் களிப்போடு என்ற ஊரில் கரிநீலி அம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். தொடர்ந்து அவரது பரம்பரையில் வாவன் குருக்கள், கருமன் குருக்கள், வாவன் குருக்கள், சையது குருக்கள் என பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து தற்போது எனது குருநாதர் சமீர் சுவாமிகள் கரிநீலி சேவையாற்றி வருகிறார்கள். கல்லடிக்கோடு மலையில் அடிவாரத்தில் உள்ள கரிநீலி கோவிலில் மானுப் சுவாமிகள் சேவையாற்றி வருகிறார். மலையாள மாதத்தில் வரும் முதல் நாளில் மலை உச்சியில் உள்ள கரிநீலி கோயிலுக்கு தனி ஒருவராக சென்று பூஜை செய்து வருகிறார்கள். தொடர்ந்து பன்னிரெண்டு வருடமாக இந்த சேவையை மானுப் சுவாமிகள் செய்து வருகிறார்.
பாலக்காடு கரைப்பேடு முஷாப் குருக்களின் ஆறாவது பரம்பரையான சமீர் சுவாமிகள் பண்டிதர் லட்சுமி தாசகள் ஆன எனக்கு இந்த கரிநீலி தேவி மற்றும் 390 கருங்குட்டிகளின் சித்தியையும், மாந்திரீக வித்தைகளையும் கற்றுத்தந்த குருதீட்சையும், கரிநீலி மற்றும் குட்டி சாத்தான்கள் பூஜை முறைகளையும் உபதேசித்து தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டத்தில் சிறுமுகை- கிச்சகத்தியூரில், அருள்மிகு தன்னாசியப்பர் திருக்கோயிலில்- மாந்திரீகா மகாராணி கரிநீலி மற்றும் குட்டி சாத்தான்கள் சக்தியை நிலைபெற செய்துள்ளனர்.
மந்திரம் தந்திரம் யந்திரம் கண்திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வினை காற்று கருப்பு பேய் பிசாசு மற்றும் மாந்திரீக செயல்கள் யார் 4442 மந்திர தெய்வங்களில் எந்த தெய்வத்தை வைத்து செய்திருந்தாலும் 390 குட்டி சாத்தான்கள் யாரை வைத்து செய்திருந்தாலும், இவர்களுக்கெல்லாம் ஆதியாகிய கரிநீலியை வழிபட்டால் எல்லாம் வினைகளும் ஓடி விடும். கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை ஆக, குடும்ப நபர்கள் சண்டை சச்சரவு தீர,f தொழில் வியாபாரத்தில் உயர, பதவி உயர்வு, வெளிநாடு செல்ல, கடன் கோர்ட் வழக்கு தீர, உடல் உபாதைகள் நோய்கள் தீர, போன்ற உங்களின் நியாயமான கோரிக்கைகளை கரிநீலி அம்மன் குறிபிட்ட சில நாட்களில் நிறைவேற்றி தருகிறார். உங்கள் பிரச்சனைகள் எதுவானாலும் கரிநீலி அம்மனை வணங்கி அருள் பெறலாம்.
முகவரி:
அருள்மிகு தன்னாசியப்பர் திருக்கோயில்,
கிச்சகத்தியூர் பஸ் ஸ்டாப்,
சிறுமுகை வழி,
மேட்டுப்பாளையம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
செல் : 7397290727,
9944099980.
குறிப்பு: மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 1A,1B,1C பஸ் ஏறி கிச்சகத்தியூர் ஸ்டாப் கேட்டு இறங்கவும்.
இந்த அற்புத கரிநீலி பதிவை முடிந்தவரை பகிர்ந்து கரிநீலியின் அருளை பெறுவோம்.