18/06/2026
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr. V.K. ராஜீவ், அரசுப் பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 20 பேரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற நோயாளிகளின் உடல்நிலை மற்றும் நலன்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் நேரில் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டறிந்தார்.