16/01/2023
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
Dr.Thayahlini Sasikumar அவர்கள்
MD in Medical Administration கற்கை நெறியை தொடர்வதற்காக செல்லவுள்ளதையிட்டு இன்று எமது வைத்திய சாலையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால்
வைத்திய அத்தியட்சகர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2021 ஏப்ரல் 05 ம் திகதி எமது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்று,
கொவிட் பெருந்தொற்று உட்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வைத்திய சாலையை சிறப்பாக நிர்வகித்து வந்த வைத்திய அத்தியட்சகர்
Dr.Thayahlini Sasikumar அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி உத்தியோகத்தர்கள் பலரும் உரையாற்றினர்.
அத்துடன் இந்நிகழ்வில்
வைத்திய அத்தியட்சகர் அவர்கள்
ஊழியர் நலன்புரிச்சங்கம் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டமை சிறப்பம்சமாகும்.
வைத்திய அத்தியட்சகர்
Dr.Thayahlini Sasikumar அவர்கள்
MD in Medical Administration கற்கை நெறியில் சிறப்புத்தேர்ச்சி பெற்று நாட்டிற்கு சிறந்த சேவையாற்ற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!