BADUR NISHA Health Care

BADUR NISHA Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BADUR NISHA Health Care, Medical and health, 119 , Palliyadi Road, Eravur.

Specialized Siddha & Integrative Care for Chronic Diseases

CKD | Diabetes | Heart Disease | Asthma
| Paralysis | Arthritis | Infertility | Cancer

Evidence-based traditional healing with modern understanding

📍 Eravur
📞 Online Consultation Available

12/09/2026

**3 வருடங்களாக சிகிச்சை…
பல மருந்துகள்…
ஆனால் தொடர்ந்து வேதனை.**
**2 மாதங்களுக்குப் பிறகு…
ஒரு பெரிய புன்னகை.
“சுமார் 75% நோயறிகுறிகள் குறைந்துவிட்டது.”**

இது ஒரு உண்மையான நோயாளியின் அனுபவம்.

───

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு Kurunegala-வில் இருந்து ஒரு patient எங்களை அணுகினார்.

அவருக்கு:
🔹 Chronic Liver Disease (CLCD) - நாற்பட்ட கல்லீரல் செயலிழப்பு
🔹 Early Portal Hypertension
🔹 Diabetes
ஆகிய medical conditions இருந்தன.

முன்னர் blood vomiting ஏற்பட்ட history-உம் இருந்தது.

சுமார் 3 வருடங்களாக treatment பெற்று வந்திருந்தாலும், வலியும் வேதனை யும் தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன.

அவருடைய previous treatment book-ஐ பார்த்தபோது, பல medications(ஏறத்தாழ 14-15 மருந்துகள்) prescribed செய்யப்பட்டிருந்தன.

───

🩺 எங்களை சந்தித்தபோது…
அவர் மிகவும் வேதனையோடு இருந்தார்.
Dyspnoea(மூச்சுத்திணறல்)
Upper abdominal colicky pain(மேற்பக்க வயிற்றில் கொழுவல் வலி)
Left lower limb pain(இடது கால் வலி)
Chest pain(நெஞ்சு வலி)
Itching (கடி)
போன்ற complaints இருந்தன.

Clinical examination-ல்:
SLRT — Positive
அவருடைய medical history, previous treatment மற்றும் clinical findings ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்து, எங்கள் treatment approach-ஐ ஆரம்பித்தோம்.

தொலைவில் இருந்து வர வேண்டியிருந்ததால், 2 மாதங்களுக்கு தேவையான medicines வழங்கப்பட்டு follow-up தொடரப்பட்டது.

───

❤️ 12 SEPTEMBER 2026
இன்று அவர் மீண்டும் எங்களை சந்தித்தார்.
ஆனால் இந்த முறை…
அவர் வந்த விதமே எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான surprise.
அவருடைய முகத்தில் ஒரு பெரிய smile.
அவர் கூறியது:
“என்னுடைய symptoms சுமார் 75% குறைந்துவிட்டது.”
மேலும் அவர் தெரிவித்த மாற்றங்கள்:
✅ Dyspnoea — gone
✅ Left leg pain — gone
✅ சில symptoms — completely gone
✅ Overall symptoms — சுமார் 75% reduced
மீண்டும் clinical examination செய்தபோது:
SLRT — Negative

───

🎥 பின்னர் நடந்தது…
தன்னுடைய treatment experience-ஐ அவர் testimonial video-வாக எங்களுடன் பகிர்ந்தார்.
மீண்டும் மீண்டும் “jazakallahu haira Dr” என்று கூறிய அந்த தருணம்…
ஒரு நோயாளியின் நம்பிக்கை திரும்பிய தருணம்.**

───

🤲 இதேபோன்ற நிலையில் suffering செய்பவர்களுக்காக இந்த experience-ஐ பகிர்கிறோம்.

பல வருடங்களாக treatment எடுத்தும் symptoms தொடர்கிறதா?
பல medicines இருந்தும் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லையா?

Chronic Liver Disease?
Portal Hypertension?
Diabetes?
நீண்டகால symptoms?

அப்படியானால் உங்கள் case-ஐ மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.

chronic disease cases-ஐ தொடர்ந்து கவனித்து வரும் எங்கள் clinical practice-ல், patients-ன் symptoms, clinical findings மற்றும் laboratory changes ஆகியவற்றை documented follow-up மூலம் பதிவு செய்து வருகிறோம்.

இந்த patient-ன் experience அதில் ஒரு real-life documented example.
**3 வருடங்கள் suffering செய்த ஒரு patient…
2 மாதங்களுக்குப் பிறகு 75% symptom reduction-ஐ தெரிவித்து,
Dyspnoea மற்றும் leg pain இல்லாமல்,
SLRT negative-ஆக மீண்டும் வந்தார்.**
இந்த மாற்றத்தை அவர் தானே எங்களிடம் பகிர்ந்த testimonial-ல் கூறியுள்ளார்.
**உங்கள் health journey எவ்வளவு நீண்டதாக இருந்தாலும்,
சரியான மதிப்பீடும் தொடர்ந்து கவனிப்பும் முக்கியம்.**

BADUR NISHA HEALTH CARE
Integrative Siddha Chronic Care Centre

Dr. M. R. M. Rauhfee
BSMS (Hons), UoJ (SL) | PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician
Patient testimonial shared with consent. Treatment and follow-up ongoing.
📍 Eravur, Sri Lanka

07/09/2026

“ … #வெறும் 3!” 😢
2½ #வயது_குழந்தை…

பிறந்தது முதல் Chronic Kidney Disease (CKD).
ஒரு கட்டத்தில்…
🩺 Serum Creatinine — சுமார் 900 µmol/L
🩺 eGFR — சுமார் 3 mL/min/1.73m²

அதாவது, குழந்தையின் சிறுநீரக செயல்பாடு மிகவும் கடுமையாகக் குறைந்திருந்தது.

முன்பு நடந்து, cycle ஓட்டி விளையாடிய குழந்தை…
பின்னர்…
❌ நிற்க முடியவில்லை
❌ உட்காருவதற்கும் உதவி தேவைப்பட்டது
❌ Tail-bone பகுதியில் கடுமையான வலி
❌ இரு முழங்கால்கள் மற்றும் joints மிகவும் stiff
❌ கை, கால்களை அசைக்கக்கூட வலி
❌ தொடர்ந்து அழுகை
❌ உணவு சாப்பிட முடியாமை
❌ அடிக்கடி காய்ச்சல்
❌ A**l/perianal பகுதியில் கடுமையான itching & irritation
❌ Urinary problems
குழந்தையை தூக்கினால்கூட வலியால் அழும் நிலை… 💔

───

💔 Treatment தொடங்குவதற்கு முன்பு…
05 August 2026
குழந்தையின் அம்மா எங்கள் Clinic WhatsApp-ல் அனுப்பிய message:
“உடம்பெல்லாம் வலிக்குது என்று அழுகிறார்…
முன்பு இருந்தது போல் active இல்லை…
குழந்தையைத் தூக்கவும் விடவில்லை; அவ்வளவு அழுகிறார்…”
ஒரு தாயின் அந்த சில வார்த்தைகள்…
அந்த நேரத்தில் அந்தக் குழந்தை அனுபவித்திருந்த கஷ்டத்தை வெளிப்படுத்தின. 💔

───

🏥 Dialysis குறித்து…
Nephrologists dialysis செய்யுமாறு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
குடும்பத்தினர் Kandy Hospital-ல் சுமார் 2½ ஆண்டுகளாக follow-up செய்து வந்ததாகவும், dialysis செய்து கொண்டிருந்த குழந்தைகளை நேரில் பார்த்த அனுபவம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அந்த அனுபவங்களின் காரணமாக, தங்கள் குழந்தைக்கு dialysis செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

📌 இது பெற்றோரின் தனிப்பட்ட முடிவு மட்டுமே — dialysis தேவையில்லை என்பதற்கான மருத்துவ ஆலோசனை அல்ல.

Kidney transplant குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

🩸 இன்னொரு கவலை — Hb மிகவும் குறைவு
குழந்தையின் Hb மிகவும் குறைந்திருந்ததால் blood transfusion செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் Erythropoietin injection வாரத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வந்தது.

எங்கள் treatment தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர், blood transfusion தொடர்பான தேவையும் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

பின்னர் Hb normal range-க்கு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

───

🌿 Treatment-க்குப் பின்னர்…
மாற்றங்கள் மெதுவாகத் தென்பட ஆரம்பித்தன.
✔️ Creatinine அதிகரிக்கும் வேகம் குறைந்தது
✔️ Blood Urea அதிகரிக்கும் வேகம் குறைந்தது
✔️ குழந்தையின் activity அதிகரித்தது
✔️ A**l itching & irritation குறைந்து மறைந்தது
✔️ காய்ச்சல் இல்லாமல் இருந்தது
✔️ வலி இல்லாமல் குழந்தையை தூக்க முடிந்தது
✔️ உதவியுடன் உட்கார ஆரம்பித்தது
✔️ நிற்க முயற்சி செய்ய ஆரம்பித்தது
✔️ மீண்டும் சிரித்து, பேசி, விளையாட ஆரம்பித்தது ❤️

ஒரு குழந்தையின் laboratory values-ல் ஏற்பட்ட மாற்றத்தை விட…
அந்தக் குழந்தையின் முகத்தில் மீண்டும் வந்த சிரிப்புதான் எங்களுக்கு மிகப் பெரிய மாற்றம். ❤️

───

📱 நேற்று வந்த Mother’s Follow-up Message…

சில நாட்களுக்கு முன்பு:
“தூக்கக்கூட விடாமல் வலியால் அழுகிறார்…”

நேற்று:
“Alhamdhulillah… இப்போது பழைய மாதிரி நன்றாக சிரித்து, பேசி, விளையாடுகிறார்… active-ஆ இருக்கிறார்.”
இந்த இரண்டு messages-க்கும் நடுவில் இருக்கும் மாற்றம்…
ஒரு மருத்துவராக எங்களை மிகவும் நெகிழச் செய்தது. ❤️

📌 Mother’s WhatsApp messages — personal details masked for the child’s privacy.

───

🤲 Alhamdulillah…
இந்தக் குழந்தை CKD-யிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டது என்று நாம் கூறவில்லை.
இது ஒரு மிகவும் தீவிரமான chronic kidney disease case.
தொடர்ந்த Nephrology follow-up, Serum Creatinine, Urea, eGFR, Hb மற்றும் தேவையான investigations தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

ஆனால்…
வலியால் அழுத குழந்தை — இன்று வலி இல்லாமல் தூக்கப்பட முடிகிறது.
நிற்க முடியாத குழந்தை — இன்று நிற்க முயற்சி செய்கிறது.
சிரிக்க முடியாத குழந்தை — இன்று மீண்டும் சிரிக்கிறது.

பேச முடியாத அளவுக்கு சோர்ந்த குழந்தை — இன்று மீண்டும் பேசுகிறது.
விளையாட முடியாத குழந்தை — இன்று மீண்டும் விளையாடுகிறது. ❤️

ஒரு மருத்துவராக…
ஒரு குழந்தை மீண்டும் சிரிப்பதைப் பார்ப்பதைவிட பெரிய வெற்றி வேறு என்ன இருக்க முடியும்? ❤️

Alhamdulillahi Rabbil Aalameen. 🤲

Patient/family-reported history and treatment response are presented as reported observations. Individual results may vary. This case does not imply that CKD has been cured, and ongoing specialist monitoring remains essential.

🏥 BADUR NISHA HEALTH CARE
Healing with Care, Rooted in Trust.
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments: 076 743 9512

Dr. M. R. Mohamed Rauhfee
BSMS (Hons), UoJ (SL) | PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician

21/08/2026

🌿 #இரண்டு_வாரங்களுக்கும்_மேலாக_நீடித்த_முகவீக்கம்… #பெற்றோரின்_பயம்_எப்படி_நம்பிக்கையாக_மாறியது?

காதுக்குக் கீழே திடீரென வீக்கம்…
ஒரு பக்கமோ அல்லது இருபுறமோ முகம் வீங்குதல்,
வீங்கிய பகுதியில் வலி அல்லது அசௌகரியம்,
சாப்பிடும்போது அல்லது மெல்வதில் வலி,
காய்ச்சல், தலைவலி,
உடல் சோர்வு, பசியின்மை…

இவை கூகைக்கட்டு (Mumps) போன்ற உமிழ்நீர் சுரப்பி தொற்றுகளில் காணப்படக்கூடிய அறிகுறிகள்.

⚠️ ஆனால் ஒவ்வொரு முகவீக்கமும் Mumps அல்ல.
வீக்கத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிவதே முதல் முக்கியமான படி.
இந்தச் சிறுவனின் நிலை…
வீக்கம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்ததால், பெற்றோர் மிகவும் கவலையடைந்திருந்தனர்.

“இது குறையுமா?”
“அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வருமா?”
என்ற அச்சம் அவர்களைத் தொடர்ந்து வாட்டியது.

சுற்றத்தாரிடமிருந்தும் அறுவை சிகிச்சை பற்றிய பயமுறுத்தும் கருத்துகள் வந்ததால், பெற்றோரின் கவலை மேலும் அதிகரித்தது.
📸 ஆனால்… மாற்றத்தை நீங்களே பாருங்கள்.
சிகிச்சைக்கு முன் → சிகிச்சைக்குப் பின்
படங்களில் காணப்படும் வீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த case-ன் follow-up பதிவுகளின் ஒரு பகுதியாகும்.

நாங்கள் பகிரும் சிகிச்சை அனுபவங்களை வெறும் வார்த்தைகளாக மட்டும் அல்லாமல்,
📋 கிடைக்கப்பெறும் மருத்துவப் பதிவுகள்
📸 முன்–பின் பதிவுகள்
📈 Follow-up தகவல்கள்
ஆகியவற்றுடன் வெளிப்படையாகப் பகிர்வதே எங்கள் அணுகுமுறை.

நம்பிக்கை என்பது “நம்புங்கள்” என்று சொல்வதால் மட்டும் உருவாகாது…
பார்க்கக்கூடிய பதிவுகளும், வெளிப்படைத்தன்மையும் அதை வலுப்படுத்துகின்றன.

🌿 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நம்பிக்கையுடன் அணுகும் இலங்கையின் முன்னணி சித்த மருத்துவ சிகிச்சை நிலையமாக — BADUR NISHA HEALTH CARE வளர்ந்து வருகிறது.

அல்ஹம்துலில்லா

BADUR NISHA HEALTH CARE
Dispensary & Surgery
📍 119, Palliyadi Road, Eravur-02A
📞 076 743 9512

🌿 உங்கள் ஆரோக்கியம்… எங்கள் பொறுப்பு.

#கூகைக்கட்டு

27/07/2026

🌿 "ஒரு நோயாளி மீண்டும் வருவது சாதாரணம்... ஆனால், ஒரு குடும்பம் ஆண்டுகள் கடந்தும், மற்றொரு நாட்டிலிருந்து மீண்டும் வந்து நம்பிக்கையுடன் சிகிச்சை பெறுவது... ஒரு மருத்துவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டு."

அல்ஹம்துலில்லாஹ்... அனைத்துப் புகழும் இறைவனுக்கே.

நேற்றைய OP-யில் நடந்த சில சந்திப்புகள், மருத்துவராக எங்கள் பொறுப்பையும், நோயாளிகள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் ஆழமாக உணர வைத்தன.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, லண்டனில் குடியுரிமையுடன் வாழும், வவுனியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களை நாடி வந்திருந்தார்கள்.

அப்போது தந்தை, தாய், மகள் ஆகியோருக்கு இருந்த பல்வேறு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றனர்.

பின்னர் அவர்கள் நல்ல முன்னேற்றத்துடன் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பினர்.

நேற்று...
அதே குடும்பம் மீண்டும் எங்களை நாடி வந்திருந்தது.
இந்த முறை தந்தை, தாய் மற்றும் 23 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள்.

அவர்கள் கூறிய ஒரு வார்த்தை மனதை மிகவும் தொட்டது...

"கடந்த முறை நீங்கள் அளித்த சிகிச்சையில் எங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்தது. அதனால்தான் மீண்டும் உங்களைத்தான் தேடி வந்திருக்கிறோம்."

ஒன்றரை வருடங்கள் கடந்தும்... வேறொரு நாட்டிலிருந்து மீண்டும் எங்களை நினைத்து வந்திருப்பது... எங்கள் சிகிச்சையை விட, அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றி அதிகமாகப் பேசுகிறது.

───

அதேபோல்...
கடந்த ஆண்டு அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி காரணமாக வந்திருந்த 17 வயது இளைஞன், ஒரு சிகிச்சைக்குப் பிறகு அறிகுறிகள் குறைந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெறவில்லை.

ஒரு வருடம் கழித்து அதே பிரச்சினையுடன் மீண்டும் வந்தபோது நான் அவரிடம் கூறியது:
"அறிகுறிகள் குறைந்துவிட்டதாலே சிகிச்சை முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை.
உடலின் சமநிலையும், நரம்புகளின் வலிமையும் முழுமையாக மீள சிறிது காலம் தேவை.
அதனால் சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக முடிக்க வேண்டும்."
நேற்று அவர் மீண்டும் வந்து,
"அடிக்கடி சிறுநீர் கழித்தல் முழுமையாக இல்லை.
மூட்டு வலி மிகவும் குறைந்துள்ளது." என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

───

நேற்றைய OP-யில் இன்னும் பல மகிழ்ச்சியான சந்திப்புகள்...

🌿 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை (Kidney Transplant) பரிந்துரைக்கப்பட்டிருந்த ஒரு ESRD நோயாளி, கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று, சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றத்துடன், பல அறிகுறிகள் கட்டுப்பாட்டில் இருந்து, தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்.
பல மாதங்களாக இருந்த வயிற்றுப்போக்கும் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

🌿 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயுடன் வாழ்ந்து, பல சிக்கல்களை எதிர்கொண்டிருந்த மற்றொரு நோயாளி, முன்பு இருந்த பல தொந்தரவுகள் குறைந்து, தற்போது ஒரு சிறிய புதிய பிரச்சினைக்காக மட்டும் வந்திருந்தார்.

🌿முடக்குவாதம் (Rheumatoid Arthritis), மூட்டுதேய்மானம்(Osteoarthritis),உள்மூலம் (Internal Piles),கொழுப்புகட்டி (Lipoma), சிறுநீரக அழற்சி(Nephritis), கல்லீரல் கொழுப்பு படிவு மற்றும் கல்லீரல் செயல்இழப்பு(Fatty Liver and liver cirrhosis), வயிற்று உப்புசம்(Bloating stomach), தூக்கமின்மை(insomnia), மார்பு படபடப்பு(Palpitations) போன்ற பல்வேறு நீண்டகால பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தங்களின் முன்னேற்றத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

🌿 ஒட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், கொழும்பு, வவுனியா... ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட மக்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் எங்களை நாடி வருவது, எங்கள் பொறுப்பை இன்னும் அதிகரிக்கிறது.

───

🌸 இந்த அனுபவங்கள் எங்களுக்கு கற்றுத் தந்த மிகப் பெரிய பாடம்...
மக்கள் மருந்தை மட்டும் தேடி வருவதில்லை.

அவர்கள் தங்களை கவனமாகக் கேட்கும் ஒருவரையும்... நம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்கும் ஒரு இடத்தையும் தேடி வருகிறார்கள்.

அதனால்தான்...
ஒரு வருடம் கடந்தும்...
ஒன்றரை வருடம் கடந்தும்...
மீண்டும் அதே கதவைத் தட்டுகிறார்கள்.

ஒரு நோயாளி மீண்டும் வருவது மகிழ்ச்சி.
ஆனால், தனது குடும்பத்தினரையும், உறவினர்களையும், நண்பர்களையும் நம்பிக்கையுடன் அழைத்து வருவது... அதைவிட பெரிய பாராட்டு.

───

🤍 நாங்கள் யாருக்கும் அற்புதங்களை வாக்குறுதி அளிப்பதில்லை.

ஆனால்...
ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாகக் கேட்டு, அவரவர் உடல்நிலையைப் புரிந்து, அதற்கேற்ற சிகிச்சையை பொறுப்புடனும் அக்கறையுடனும் வழங்க வேண்டும் என்பதையே எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.

அந்த நம்பிக்கையை ஆண்டுகள் கடந்தும் காப்பாற்ற முடிவதே, ஒரு மருத்துவராக எங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய நிறைவு.

இறைவனின் அருளால், எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

🌿 நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தால், நம்பிக்கையை இழக்காதீர்கள்.

சரியான மதிப்பீடும், பொறுமையுடனான தொடர்ச்சியான சிகிச்சையும் பலருக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியுள்ளது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே

👨🏻‍⚕️ Dr. MRM Rauhfee (BSMS)(Hons)(UoJ), PGCSVT (MAHE, India)
Consultant Siddha Physician

🏥 BADUR NISHA HEALTH CARE
Healing with Care, Rooted in Trust.
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments: 076 743 9512















25/07/2026

🌿 #தனியாக_இருப்பது ( ) #வேறு... #தனிமை_உணர்வது ( ) #வேறு...

பலர் இந்த இரண்டையும் ஒன்றாக நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இவை முற்றிலும் வேறுபட்டவை.

தனியாக இருப்பது என்பது...
உடலளவில் ஒருவர் மட்டும் இருப்பது.

தனிமை உணர்வது என்பது...
சுற்றிலும் பலர் இருந்தாலும், மனதில் வெறுமையையும், புரிந்துகொள்ளப்படாத உணர்வையும் அனுபவிப்பது.

───

💙 சில நேரங்களில்...
தனியாக இருக்கும் மனிதர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
அதே நேரத்தில்...
நூற்றுக்கணக்கான மனிதர்களுடன் வாழும் ஒருவர் கூட ஆழ்ந்த தனிமையில் வாடிக்கொண்டிருக்கலாம்.
ஏனெனில்...
தனிமை என்பது மனிதர்கள் இல்லாததால் வருவதில்லை...
அர்த்தமுள்ள உறவுகள் இல்லாததால் வருகிறது.

───

🌿 ஆரோக்கியமான தனிமை...
✔️ மன அமைதியை வளர்க்கும்.
✔️ சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
✔️ படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
✔️ இறைநெருக்கத்தையும் சுய முன்னேற்றத்தையும் வளர்க்கும்.

───

⚠️ ஆனால் நீடித்த தனிமை உணர்வு...
🔸 மன அழுத்தம்
🔸 பதட்டம்
🔸 தூக்கமின்மை
🔸 மனச்சோர்வு
🔸 உடல் ஆரோக்கிய பாதிப்புகள்
போன்ற பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

───

❤️ நினைவில் கொள்ளுங்கள்...
தனியாக இருப்பது ஒரு தேர்வு.
தனிமை உணர்வது ஒரு மனநிலை.
உங்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒருவருடன் பேசுவதும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அர்த்தமுள்ள நேரத்தை செலவிடுவதும், தேவையானபோது மருத்துவ அல்லது உளவியல் ஆலோசனையைப் பெறுவதும் மனநலத்தைப் பாதுகாக்க உதவும்.

───

"அமைதியான தனிமை மனதை வளர்க்கும்;
நீடித்த தனிமை உணர்வு மனதை சோர்வடையச் செய்யும்."

🌿 உங்கள் மனநலமும், உடல் நலத்தைப் போலவே முக்கியமானது.

👨🏻‍⚕️ Dr. MRM Rauhfee (BSMS)(Hons)(UoJ), PGCSVT (MAHE, India)
Consultant Siddha Physician

🏥 BADUR NISHA HEALTH CARE
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments: 076 743 9512

13/07/2026

❤️ 41 வயதில்... இதயத்தின் மூன்று முக்கிய இரத்தக் குழாய்களில் கடுமையான அடைப்பு.

"உடனடியாக Open Heart Bypass Surgery (CABG) செய்ய வேண்டும்..." என்ற இதய நிபுணர்களின் ஆலோசனை.

2023-ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட Coronary Angiogram, Triple Vessel Coronary Artery Disease (TVD)-ஐ உறுதிப்படுத்தியது.

அதே காலகட்டத்தில் செய்யப்பட்ட 2D Echocardiography-யில்:
🫀 LVEF – 45%
➡️ இதயத்தின் Pumping Function குறைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து CABG பரிந்துரைக்கப்பட்டது.

பொருளாதார காரணங்களால் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியாமல், நோயாளர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்ததாக தெரிவித்தார்.

───

💔 எங்களிடம் வந்தபோது...
❌ சில அடிகள் நடந்தாலே கடுமையான மூச்சுத்திணறல்.
❌ அடிக்கடி நெஞ்சுவலி.
❌ இடது தோள்பட்டை வரை பரவும் வலி.
❌ தொடர்ந்து நெஞ்சு இறுக்கம்.
❌ ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு கூட நடந்து செல்ல முடியாத நிலை.
❌ அன்றாட வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

───

🌿 சிகிச்சை அணுகுமுறை
நோயாளியின் மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, தனிப்பட்ட சிகிச்சைத் திட்டம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டது.

நோயாளியின் தகவலின்படி, இந்தக் காலப்பகுதியில் அவர் எந்த Allopathic இதய மருந்துகளையும் பயன்படுத்தவில்லை.

───

❤️ மருத்துவ ஆதாரம் பேசுகிறது...
📄 2D Echocardiography
27.07.2023
🫀 LVEF : 45%
🫀 LVIDs : 41 mm
🫀 Anterior Hypokinesia
➡️ இதயத்தின் Pumping Function குறைவாக இருந்தது.
⬇️⬇️⬇️
📄 Repeat 2D Echocardiography
06.07.2026
✅ LVEF : 45% → 50%
➡️ Left Ventricular Pumping Function முன்னேற்றம்.
✅ LVIDs : 41 mm → 34 mm
➡️ Left Ventricular Systolic Function மேம்பட்டுள்ளது.
✅ Anterior Hypokinesia → Mild Anterolateral Hypokinesia
➡️ இதயத் தசை இயக்கக் குறைபாடு முன்பைவிட குறைந்துள்ளது.

மேலும்,
✅ Left Atrium normal
✅ Mitral Valve normal
✅ Aortic Valve normal
✅ Right Ventricular Function preserved
✅ Pericardial Effusion இல்லை.

───

🌿 மருத்துவப் பதிவுகளுடன் இணைந்த மருத்துவ முன்னேற்றம்
Echo Report-இல் பதிவான மாற்றங்களுடன்,
நோயாளியின் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று...
💚 நெஞ்சுவலி இல்லை.
💚 மூச்சுத்திணறல் இல்லை.
💚 இடது தோள்பட்டை வலி இல்லை.
💚 நெஞ்சு இறுக்கம் இல்லை.
💚 சிரமமின்றி நடக்கிறார்.
💚 அன்றாட பணிகளை சுயமாக மேற்கொள்கிறார்.
💚 வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

───

🤝 அடுத்த மருத்துவக் கட்டத்தை நோக்கி...
இந்த நோயாளியின்
✔ அறிகுறிகளில்,
✔ செயல்திறனில்,
✔ Echocardiography-யில்
முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
இந்த மாற்றங்களை Coronary Artery நிலையில் மேலும் மதிப்பிடுவதற்காக Repeat Coronary Angiogram அல்லது CT Coronary Angiogram மேற்கொள்ள விரும்புகிறோம்.

இதற்கு ஒத்துழைக்க விரும்பும் Cardiologists, Cardiac Centres, Hospitals அல்லது நன்கொடையாளர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

───

🏥 BADUR NISHA HEALTH CARE
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments:076 743 9512

👨🏻‍⚕️ Dr. MRM Rauhfee (BSMS)(Hons)(UoJ), PGCSVT (MAHE, India)
Consultant Siddha Physician

⚠️ முக்கிய குறிப்பு
இந்தப் பதிவு ஒரு தனிப்பட்ட நோயாளியின் மருத்துவ அனுபவத்தை பகிர்வதற்காக மட்டுமே.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் நோயாளியின் மருத்துவப் பதிவுகள், Echocardiography அறிக்கைகள் மற்றும் மருத்துவ முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை.























11/07/2026

🧠 " #மூளையில்_பெரிய_கட்டி... #அறுவைச்_சிகிச்சை_மட்டுமே_வழி!"

அந்த ஒரு வாக்கியம்...
கண்டி, கல்ஹின்னா பகுதியைச் சேர்ந்த 62 வயது பெண் நோயாளியின் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது.

ஏற்கனவே வாழ்க்கையின் மிகக் கடினமான ஒரு போராட்டத்தை அவர் வென்றிருந்தார்...
🎗️ 3 ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் காரணமாக இடது மார்பகம் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அதற்கு முன்பு,
🔹 10 ஆண்டுகளுக்கு முன்பு Tonsillitis காரணமாக அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவ்வளவு சோதனைகளைக் கடந்த பிறகும்...
மீண்டும் ஒரு புதிய சவால்.
MRI பரிசோதனையில், மூளையின் வலது பகுதியில் பெரிய Solid & Cystic Brain Tumor இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
பல இடங்களில் சிகிச்சை பெற்றும், பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

இறுதியாக நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரை (Neurosurgeon) சந்தித்தபோது,
"மூளைக்கு அறுவைச் சிகிச்சை அவசியம்" என்று ஆலோசனை வழங்கப்பட்டதாக நோயாளியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

💔 எங்களிடம் முதன்முதலாக வந்தபோது...
🔴 வலது கண்ணில் முற்றிலும் பார்வை இல்லை.
🔴 "கண் நரம்பு செயலிழந்துவிட்டது; பார்வை திரும்ப வாய்ப்பு மிகவும் குறைவு" என்று மருத்துவர்கள் கூறியதாக நோயாளி எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
🔴 வலது இமையைத் திறக்க முடியவில்லை (Ptosis).
🔴 வலது கண்ணிலிருந்து தலையின் பின்புறம் வரை பரவும் தாங்க முடியாத குத்தும் வலி.
🔴 கண்ணிலிருந்து தொடர்ந்து பீளை வடிதல்.
🔴 வலது காதில் கேட்கும் திறன் குறைவு.
🔴 வலது பக்கத் தலையில் உணர்வின்மை.
🔴 ஞாபக சக்தி குறைவு.

இந்த நிலையில் அவர்கள் BADUR NISHA HEALTH CARE-ஐ நம்பி வந்தனர்.

───

🌿 தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் பின்னர்...
✅ வலது கண்ணில் பார்வை மீண்டும் திரும்பியுள்ளது.
✅ Ptosis குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, இமையை முன்னைவிட நன்றாகத் திறக்க முடிகிறது.
✅ தலையின் கடுமையான வலி மறைந்துள்ளது.
✅ கண்ணிலிருந்து பீளை வடிதல் முற்றிலும் நின்றுள்ளது.
✅ வலது காதின் கேட்கும் திறன் மேம்பட்டுள்ளது.
✅ தலையின் உணர்வின்மை நீங்கியுள்ளது.
✅ ஞாபக சக்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

───

🌱 சில நேரங்களில்...
MRI Report-ஐ விட,
Scan-ஐ விட,
Lab Report-ஐ விட...
ஒரு நோயாளியின் முகத்தில் மீண்டும் மலரும் நம்பிக்கையே, சிகிச்சையின் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைக்கிறது.
அதுவே ஒவ்வொரு மருத்துவரின் பயணத்திற்கும் மிகப்பெரிய வெகுமதி.

───

🏥 BADUR NISHA HEALTH CARE
📍 119, Palliyadi Road, Eravur-02A, Sri Lanka
📞 Appointments:076 743 9512

👨🏻‍⚕️ Dr. MRM Rauhfee (BSMS)(Hons)(UoJ),
PGCSVT (MAHE, India)
Consultant Siddha Physician

───

09/07/2026

#அறுவைச்சிகிச்சை_இல்லாமல்_மிகப்பெரிய_பித்தப்பை_கல்_கரைந்தது

⚠️ "உடனடியாக பித்தப்பையை-ஐ அகற்றும் அறுவைச் சிகிச்சை (Cholecystectomy) செய்ய வேண்டும்..."
அந்த ஒரு வாக்கியம்...
ஒரு குடும்பத்தையே பதற வைத்திருந்தது.

35 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த பெண் நோயாளி ஒருவர் "அறுவைச்சிகிச்சை இல்லாமல் இதனை உங்களால் குணப்படுத்தமுடியுமா" என்ற கேள்வியுடன் எம்மை சந்தித்தார்.

நம்மை சந்திக்க முன்னர் அவர் பல hematologist and Gastroenterologist மருத்துவர்களை சந்தித்திருந்தார்.
எல்லோரும் ஒருமித்த கருத்தில் இது மிகப்பெரிய கல்லாக இருக்கிறது நோயறிகுறிகளும் தீவிரமாக இருக்கிறது ஆகையால் அவசரமாக பித்தப்பையை அறுவைச்சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
அதனால்தான் அவ்வாறு வினவினார்.

"அறுவைச்சிகிச்சை இல்லாமல் நிச்சயமாக பித்தப்பை கல்லை கரைத்து பித்தப்பையை அநியாயமாக இழந்துவிடகமல் காக்க முடியும்" என்று நம்பிக்கையூட்டி சிகிச்சை அளித்தோம்.

ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த Scan Report-ஐ பார்த்தபோது, எங்களுக்கே ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது...

───

📋 சிகிச்சைக்கு முன்
🔸 தாங்க முடியாத வலது மேல் வயிற்று வலி
🔸 முதுகு வரை பரவும் வேதனை
🔸 திரும்பிப் படுக்க முடியாத அளவிற்கு இறுக்கம்
🔸 குமட்டல், வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை, உடல் பலவீனம்

📄 Ultrasound Scan:
❌ 2.3 செ.மீ. அளவுள்ள மிகப் பெரிய பித்தப்பை கல்( Gallstone)
❌ பித்தப்பை சுவர் தடிப்பு(Gallbladder Wall Thickening )– 4 mm
❌ உடனடி Cholecystectomy பரிந்துரை

───

🌿 ஒரே ஒரு மாதம்...
📄 Follow-up Ultrasound Scan:
✅ மிகப் பெரிய (Very Large) Gallstone தற்போது Medium-sized (≈1 cm) Gallstone ஆக பதிவாகியுள்ளது.
✅ Gallbladder Wall Thickening முற்றிலும் மறைந்து, இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ளது.

───

❤️ அதைவிட மகிழ்ச்சி அளித்தது...
✔️ வலி இல்லை...
✔️ முதுகு இறுக்கம் இல்லை...
✔️ குமட்டல் இல்லை...
✔️ வியர்வை இல்லை...
✔️ அன்றாட வாழ்க்கை மீண்டும் இயல்பாக...

───

சில Scan Report-கள் வெறும் எண்ணிக்கைகளை மட்டும் மாற்றுவதில்லை...
ஒரு குடும்பத்தின் பயத்தை... நம்பிக்கையாக மாற்றுகின்றன.

Evidence Matters
📌 Largest Gallstone:2.3 → ~1 cm
📌 Gallbladder Wall:4 mm Thickened → Normal
📌 Clinical Status:Severe Symptoms → Symptom Free

───

📍 BADUR NISHA HEALTH CARE
119, Palliyadi Road,
Eravur-02A
📞 0767439512

👨🏻‍⚕️ Dr. MRM Rauhfee (BSMS)(Hons)(UOJ) PGCSVT, MAHE, INDIA
Consultant Siddha Physician

12/06/2026

🏥 BADUR NISHA HEALTH CARE
Advanced Siddha Care for Chronic & Complex Diseases

🩺 பல ஆண்டுகளாக அவதிப்பட்ட நாள்பட்ட நோய்களா?

⭐ நம்பிக்கையுடன் வாழ ஒரு புதிய தொடக்கம்

உடல்நலம், மனநலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் பல நாள்பட்ட நோய்களுக்கு, நோயாளி மையப்படுத்தப்பட்ட Siddha மருத்துவ பராமரிப்பு.

━━━━━━━━━━━━━━━━━━

❤️ இதயம் • சிறுநீரகம் • புற்றுநோய்
🫀 இதய நோய்கள் & இதய அடைப்பு பிரச்சினைகள்
(Heart Diseases & Heart Block)
🩺 நாள்பட்ட சிறுநீரக நோய்கள் (CKD)
🩺 சிறுநீரக கற்கள்
(Kidney Stones)
🎗️ புற்றுநோய் நோயாளிகளுக்கான ஆதரவு பராமரிப்பு
(Cancer Supportive Care)
👨‍👩‍👧‍👦 ஆண் & பெண் மலட்டுத்தன்மை
(Infertility Care)
🌬️ ஆஸ்துமா & சுவாசக் கோளாறுகள்

━━━━━━━━━━━━━━━━━━
🏥 தோல் மற்றும் நாள்பட்ட நோய்கள்
🔹 சொரியாசிஸ் (Psoriasis)
🔹 வெண்புள்ளி நோய் (Vitiligo)
🔹 உடல் முழுவதும் தடிப்புகள் மற்றும் நாள்பட்ட தோல் நோய்கள்
🔹 நாள்பட்ட அழற்சி நோய்கள்
━━━━━━━━━━━━━━━━━━
🏥 இரத்த ஓட்டம் மற்றும் கால்நோய்கள்
🔹 யானைக்கால் நோய் (Elephantiasis)
🔹 நரம்புச் சுருள் (Varicose Veins)
🔹 நாள்பட்ட கால் புண்கள் (Varicose Ulcers)
🔹 நீரிழிவு கால் புண்கள் (Diabetic Foot Ulcers)
━━━━━━━━━━━━━━━━━━
🏥 மூட்டு மற்றும் நரம்பியல் நோய்கள்
🔹 மூட்டு வலி மற்றும் மூட்டு நோய்கள்
🔹 நரம்பியல் நோய்கள்
🔹 பார்கின்சன் நோய் (Parkinson's Disease)
🔹 ஒற்றைத் தலைவலி மற்றும் நாள்பட்ட தலைவலி
━━━━━━━━━━━━━━━━━━
🏥 செரிமான மற்றும் உட்கூறு நோய்கள்
🔹 வயிற்றில் நீர் சேர்தல் (Ascites)
🔹 மூலநோய் (Piles)
🔹 ஆசனவாய் வெடிப்பு (Fissure)
🔹 ஆசனவாய் சீழ்ப்பாதை (Fistula)
🔹 குடல் புண் மற்றும் செரிமானக் கோளாறுகள்
🔹 தைராய்டு கோளாறுகள்
🔹 கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள்
━━━━━━━━━━━━━━━━━━
✅ எங்கள் மருத்துவ அணுகுமுறை
☑️ Comprehensive Patient Assessment
☑️ Evidence-Based Siddha Medical Care
☑️ Individualized Treatment Planning
☑️ Long-Term Health Management
☑️ Holistic & Patient-Centred Approach
☑️ Continuous Follow-Up & Monitoring
━━━━━━━━━━━━━━━━━━
👨‍⚕️ Dr. M. R. Mohamed Rauhfee
BSMS (Hons), University of Jaffna
PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician
📍 Eravur, Sri Lanka
☎️ 076 743 9512
━━━━━━━━━━━━━━━━━━
⭐ "Quality Care • Trusted Experience • Compassionate Healing"
Your Partner in Chronic Disease Management
🏥 BADUR NISHA HEALTH CARE
📞 Appointments : 076 743 9512

───

11/06/2026

✨ அல்ஹம்துலில்லாஹ் ✨

"Doctor… வெள்ளையாக இருக்கும் பொருட்களைக்கூட ஊத்தை நிறத்தில் மறைப்பது போலத் தெரிந்தது… ஒரு திரை போட்டது மாதிரி இருந்தது…"

இந்த வார்த்தைகளை மிகவும் கவலையுடன் பகிர்ந்துகொண்டார் 64 வயதுடைய நீண்டகால நீரிழிவு நோயால் (Diabetes Mellitus) பாதிக்கப்பட்ட பெண் நோயாளர் ஒருவர்.

கடந்த மாதம், மிகவும் மனவேதனையுடனும் நம்பிக்கையிழந்த நிலையிலும் அவர் 🏥 BADUR NISHA HEALTH CARE, Eravur-ஐ அணுகினார்.

━━━━━━━━━━━━━━━━
🔴 அவரை மிகவும் பாதித்த பிரச்சினை…
கண் பார்வை.
பலமுறை கண் நிபுணர்களை (Eye Specialists) சந்தித்திருந்தார்.
Diabetic Retinopathy எனக் கண்டறியப்பட்டு தேவையான சிகிச்சைகளையும் பெற்றிருந்தார்.

ஆனால், அவரது சொற்களில்…
"வெள்ளையாக இருக்கும் பொருட்களைக்கூட ஊத்தை நிறத்தில் மறைப்பது போலத் தெரிகிறது…"
அதனால்,
❌ அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம்
❌ பார்வை மங்கலால் மனஅழுத்தம்
❌ வாழ்க்கைத் தரம் கணிசமாக பாதிப்பு
இவை அனைத்தும் அவரை மிகவும் கவலையடையச் செய்திருந்தன.

━━━━━━━━━━━━━━━━
பின்னர் அவர் 🏥 BADUR NISHA HEALTH CARE-ஐ அணுகினார்.
நோயாளியின் முழுமையான உடல்நிலையை கருத்தில் கொண்டு, தனிப்பட்ட சித்த மருத்துவ அணுகுமுறையின் கீழ் உள்மருந்துகளும் தேவையான வெளிச்சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
━━━━━━━━━━━━━━━━
🟢 சிகிச்சையை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து, நேற்று மீண்டும் வந்தபோது அவர் மகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகள்…
"Doctor… முன்னாடி இருந்த மாதிரி ஊத்தை போல மறைக்கிறதில்லை…"
மேலும் கேட்டபோது,
"இப்போது சிறிய எழுத்துக்களை வாசிப்பதும், குர்ஆன் ஓதுவதும் மட்டும் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது…"
என்று தெரிவித்தார்.
✨ அல்ஹம்துலில்லாஹ் ✨
━━━━━━━━━━━━━━━━
❤️ பார்வை என்பது வெறும் கண்களின் செயல்பாடு மட்டுமல்ல…
அது ஒரு மனிதனின் சுதந்திரம்…
அவரது தன்னம்பிக்கை…
அன்றாட வாழ்க்கையை சுயமாக நடத்தும் திறன்…
மற்றும் அவரது வாழ்க்கைத் தரத்தின் பிரதிபலிப்பாகும்.
ஒரு மருத்துவராக, அந்த வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுக்க உதவுவது எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பொறுப்பும் திருப்தியும் ஆகும்.
━━━━━━━━━━━━━━━━
🎥 கண் பார்வையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக, நோயாளர் பகிர்ந்த உண்மை அனுபவத்தை Testimonial Video ஆக தொகுத்துள்ளோம்.
━━━━━━━━━━━━━━━━
🏥 BADUR NISHA HEALTH CARE
Prevent • Protect • Heal
👨🏻‍⚕️ Dr. M. R. Mohamed Rauhfee
BSMS (Hons), UoJ (SL)
PGCSVT, MAHE, India
Consultant Siddha Physician
📍 Eravur
📞 Appointments : 076 743 9512
━━━━━━━━━━━━━━━━
🌹
"நோயை மட்டுமல்ல…
நோயாளியின் வாழ்க்கைத் தரத்தையும் மீட்டெடுப்பதே…
எங்களின் மருத்துவ சேவையின் நோக்கம்."
───
⚠️ இது ஒரு தனிப்பட்ட நோயாளியின் அனுபவமாகும். சிகிச்சை விளைவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

Address

119 , Palliyadi Road
Eravur
30300

Telephone

+94767439512

Website

Alerts

Be the first to know and let us send you an email when BADUR NISHA Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BADUR NISHA Health Care:

Shortcuts

Share