05/03/2017
🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋
தகவல்: *பசுமைப்பாதை*
*பகுதி-2*
*மண்பாண்டங்களின் தொன்மையும், தன்மையும், நன்மையும்...*
*உலோகம் கண்டுபிடிப்பிற்கு முன்பே நாம் மண்ணால் செய்த பாண்டங்களை பயன்படுத்தி வருகிறோம்.*பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் உருவான மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான சாட்சியங்கள் உள்ளது. அக்காலத்தில் *வீடுகள்கூட களிமண்ணால் கட்டப்பட்டு அதில் வாழ்ந்தும் உள்ளனர்.*
களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் தனி சுவைதரும். மேலும் அவ்வாறு செய்யப்பட்ட உணவுகளில் மருத்துவகுணம் நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது *இரத்த அழுத்தம், நீரிழிவு வியாதி* போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். மண்பானைகளில் சேமித்து வைத்து உபயோகிக்கும் தண்ணீர் சுவையாகவும், குளிர்ந்தும் இயற்கை மாறாமலும் இருக்கும். இதனால்தான் *மண்பானைகளை ஏழைகளின் குளிர்சாதனப்பெட்டி* என்று சொல்கிறோம்.
*தோண்டி, குடம், தோசைக்கல், இட்லிப்பானை, குளிர் சாதனப்பெட்டி, சித்திரப்பானை, காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள்கூண்டு* என்று பலவகையான பொருட்களும் இந்த களிமண்ணால் உருவாக்கப்படுகிறது .
அக்காலத்தில் வீட்டில் அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரிய அளவில் *மண்தொட்டிகள் (குதிர்)* உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர். *வறட்சிக்காலங்களில் குதிர் மிகப்பெரிய பயனுடையதாக இருந்தது.*
வீட்டை அலங்கரிக்க *மண்ணால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள்* மற்றும் தெய்வ சிலைகளான அம்மன் காளி, அய்யனார் போன்ற சிலைகளும் செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவும் *மண் சிலை, குதிரை, கால் பாதம்* வடித்து குலதெய்வத்தை வழிபடுவது கிராமப்புற மக்களிடம் வழக்கமாக உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய வேண்டிக்கொண்டு *நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப் போன்று மண்ணால் செய்து,* அதனை தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.
*தாழி (பிணப் பானை) மண்ணால் செய்யப்பட்ட ஒருவகை பானைவடிவம்.* இதில் ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். *இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள்* தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன.அதுமட்டுமல்லாது *இசை வாத்தியங்களான கடம் , மத்தளம்* போன்றவைகளும் தயாரிக்கப்படுகிறது .
*இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்த மண்பாண்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?*
தொடரும்
🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋