Finance with DSK

Finance with DSK Helping people to save their lives and family through insurance

**LIC Jeevan Sathi – Single Premium Plan**Secure your future with **LIC Jeevan Sathi Single Premium**, a smart life insu...
28/05/2026

**LIC Jeevan Sathi – Single Premium Plan**

Secure your future with **LIC Jeevan Sathi Single Premium**, a smart life insurance plan designed to provide long-term financial protection with a one-time payment. Pay once and enjoy coverage for **10 years** without worrying about yearly premiums.

# # # Key Features

* **Single Premium Payment** – One-time investment for complete peace of mind.
* **10-Year Protection** – Financial security for you and your spouse.
* **Accidental Death & Disability Benefit** – Extra protection for unforeseen events.
* **High Coverage** – Protection for both lives under one plan.
* **Guaranteed Support** – Ensures financial stability for your loved ones.

# # # Premium Details

* **Single Premium:** ₹3,50,250
* **Total Benefit:** ₹5,10,000
* **Term:** 10 Years

# # # Why Choose Jeevan Sathi?

* Hassle-free one-time payment
* Dual life coverage for couples
* Long-term financial assurance
* Safe and trusted LIC protection

**“One Decision, A Lifetime of Protection.”**

26/03/2026

இன்சூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைந்திருங்கள்.

என்னிடம் Life insurance policy எடுத்த நண்பர் ஒருவருக்கு call செய்து இந்த வருடத்திற்கான renewal இருக்கிறது என்று நினைவு ப...
18/03/2026

என்னிடம் Life insurance policy எடுத்த நண்பர் ஒருவருக்கு call செய்து இந்த வருடத்திற்கான renewal இருக்கிறது என்று நினைவு படுத்தினேன். நண்பர் தனக்கு வேலை போய்விட்டது அதனால் premium கட்ட முடியாது என்றார். அவசரப்படாதீங்க, இப்ப உங்களுடைய வயசு 40. இன்னும் குறைந்தது 25 வருடத்திற்கு ஆவது பாலிசியை வைத்திருப்பது உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது. ஆகவே ஒரு வருடம் உங்களுக்கு premium break வாங்கி கொடுக்கிறேன். அடுத்த வருடம் சேர்த்து கட்டுங்கள். இதனால் பாலிசியும் liveவில் இருக்கும். என்றேன். நண்பருக்கு ஒரே மகிழ்ச்சி. பிறகு நண்பருக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் பேசினேன். நண்பரின் resumeமை வாங்கி எனது நண்பர்கள் வட்டாரத்தில் அனுப்பி வைத்திருக்கிறேன். நிச்சயம் அவருக்கு வேலை கிடைக்கும். வேலை கிடைக்காவிட்டாலும் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பற்றியும் பேசினோம். நண்பருக்கு நம்பிக்கை பிறந்தது. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கைதான் முதல் காப்பீடு. அதைக் கொடுப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி எப்பொழுதும் உண்டு.

Covidக்குப் பிறகு லைஃப் இன்சூரன்ஸ் துறையில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக பல மாற்றங்கள் நடந்துள்ளன. அதேபோல புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் ஒரு Term insurance எடுத்திருக்கிறீர்கள் உங்களுக்கு 60 வயதிற்கு பின்னால் அது தேவையில்லை என்று தோன்றுகிறது. உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக வளர்ந்ததும், உங்களை சார்ந்து இருப்பவர்கள் தனித்து இயங்கி சம்பாதிக்க தொடங்கிய பிறகு Term insurance தேவை குறைகிறது. அந்த இடத்தில் பாலிசியை ரத்து செய்து அதுவரை செலுத்திய அனைத்து பிரிமியம் தொகையையும் எந்தவித பிடித்தமும் இன்றி திரும்பப் பெறுவதற்கான வசதி அறிமுகமாகியுள்ளது. இதனை எந்த ஒரு முகவரும் கூற மாட்டார்கள், ரெனிவல் கமிஷன் கிடைக்காது என்று. ஆனால் நான் கூறுவேன். எனக்கு மக்களின் நலனே பிரதானம்.

பெண்களுக்கு பிரீமியத்தில் 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் முதல் வருடத்திற்கு கூடுதலாக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் 15 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இது பாலிசி எடுப்பவர் வயது, பணி பொறுத்து மாறுபடும். இதுவும் முகவர்கள் கேட்டு வாங்கித் தருவது.

பாலிசி எடுத்தவருக்கு ரிஸ்க் நடந்தால், அவரது குடும்பம் கிளைம் செய்தவுடன் அவசர தேவைக்காக இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள கிளைம்களை ஒரே நாளில் முடித்து முழு தொகையை வழங்கும் வசதியும் வந்துள்ளது.

முதல் பத்தியில் சொன்னது போல நிதி நெருக்கடி ஏற்படும் காலங்களில் ஒரு வருடத்திற்கான பிரிமியத்தை செலுத்தாமல் தள்ளி வைக்கும் பிரீமியம் பிரேக் வசதி வழங்கப்படுகிறது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த வசதி கிடைக்கும். ஒரு வருடம் பிரீமியம் பிரேக் எடுத்து விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த பிரீமியம் பிரேக் கிடைக்கும். பிரீமியம் பிரேக் எடுக்கிறீர்கள் என்றால் 30 நாள் முன்கூட்டியே முகவர்களிடம் அல்லது நிறுவனத்திடம் கூற வேண்டும்.

பலருக்கும் அறியாத சில wellness benefits உண்டு. நீங்கள் ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஆன்லைன் மருத்துவர் ஆலோசனை எப்பொழுதும் கிடைக்கும். இது முன்பு இருந்த வசதி தான். கூடுதலாக இதில் diet ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல ஆண்டுக்கு ஒரு முறை இலவச உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

பாலிசி 65 வயதில் முதிர்வடைகிறது நீங்கள் அதனை இன்னும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க விரும்புகிறீர்கள் என்றால் இப்பொழுது எளிதாக மருத்துவ பரிசோதனை இன்றி நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

தற்போது clime ratio 99.68% என்ற மிக உயர்ந்த விகிதத்தை பெற்றுள்ளது. இதன் பொருள் பாலிசி எடுத்தவர் தவறிடும்போது செட்டில்மெண்ட் நிச்சயம் உண்டு.

இவை எச்டிஎப்சி என்ற ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள். லைஃப் இன்சூரன்ஸ் துறை இப்பொழுது முன்பை காட்டிலும் இன்னும் பல வசதிகளை பல புதிய திட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதைப்பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

உங்களுக்கு ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் நேரடியாக எடுப்பதை விட தகுதியான முகவர் மூலம் எடுப்பது சிறந்தது.

காரணம் அவர் உங்கள் வருமானம், கடன் சுமை மற்றும் குடும்பத்தின் எதிர்கால தேவைகளை கணக்கிட்டு உங்களுக்கு எவ்வளவு காப்பீட்டுத் தொகை தேவை என்பதை துல்லியமாக கணித்து கொடுப்பார்.

இன்ஷூரன்ஸ் விண்ணப்பத்தில் கேட்கப்படும் மருத்துவ கேள்விகள் மற்றும் முக்கிய பாலிசி விவரங்களை சரியாக பூர்த்தி செய்வது அவசியம். இதில் தவறு நடந்தால் பிற்காலத்தில் கிளைம் மறுக்கப்படலாம் முகவர்கள் இதில் உங்களுக்கு சரியான வழி காட்டுவார்கள்.

விபத்து பாதுகாப்பு, உயிர் கொல்லி நோய் காப்பீடு அல்லது பிரீமியம் தள்ளுபடி போன்ற கூடுதல் பலன்களில் உங்களுக்கு எது அவசியம் என்பதை ஒரு முகவர்தான் விளக்குவார்

டெர்ம் இன்சூரன்ஸ்க்கு மருத்துவ பரிசோதனைகள் அவசியம். அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் ஒரு முகவரால் திறம்பட இணைக்க முடியும். சில சமயம் டெலிபோனிலேயே மருத்துவ குழு கேள்விகள் கேட்பதன் மூலம் எளிதாக முடிக்க வைக்கவும் முடியும். இதனை முகவர் எளிமையாக ஒருங்கிணைக்க கூடியவர்.

கிளைம் நேரத்தில் அதாவது பாலிசிதாரர் தவறிய நேரத்தில் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருப்பார்கள். அந்த சூழலில் நிறுவனத்திடம் பேசி, ஆவணங்களை சமர்ப்பித்து கிளைம் தொகையை விரைவாக பெற்று தருவதில் முகவரின் பங்கு மிக முக்கியமானது.

சுருக்கமாக சொன்னால் ஆன்லைனில் எடுப்பது பிரிமியத்தில் சிறு தள்ளுபடி தரலாம். கிளைம் நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு ஒரு உதவி கரம் தேவை என்பதை மனதில் வைத்து முகவர் மூலம் எடுப்பதே சிறந்தது.

நிதி துறையில் நீண்ட அனுபவம் மிக்க நானும் எனது குழுவினரும் உங்களுக்கு நல்லதொரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து தர வேண்டிய உதவிகளை செய்து தருகிறோம். செய்ய வேண்டியது எல்லாம் இந்த கூகுள் பாரத்தில் உங்களது அடிப்படை விவரங்களை அளித்தால் போதும். நாங்கள் உதவுகிறோம்.

Please share your basic information to find a better term policy and calculate your premium

உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்....அந்த சேமிப்பு பாதுகாப்பாகவும் வளமானதாகவும் மாற்ற எங்களை தொடர்ப...
13/03/2026

உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்....

அந்த சேமிப்பு பாதுகாப்பாகவும் வளமானதாகவும் மாற்ற எங்களை தொடர்பு கொள்ளுங்கள், இன்சூரன்ஸ் தொடர்பான மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் அரசின் காப்பீடு நிறுவனத்தில் மு...
10/03/2026

உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்

அரசின் காப்பீடு நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், நிலையான வருமானத்தை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பெற்று மகிழுங்கள்

One smart decision today can protect your family for a lifetime.Choose peace of mind with LIC Jeevan Utsav, a single pre...
10/03/2026

One smart decision today can protect your family for a lifetime.
Choose peace of mind with LIC Jeevan Utsav, a single premium plan that offers lifelong security.

10/03/2026

Finance with DSK

Address

Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when Finance with DSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share