23/06/2026
சென்னையில்
பிரம்மா குமாரிகளின் பிரம்மாண்ட ஆன்மிகத் திருவிழா!
பிரம்மா குமாரிகள் அமைப்பு கடந்த 90 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும் ஆன்மிக முன்னேற்றத்திற்காகவும் உலக அளவில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது. உலகிலேயே பெண்களால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய இந்த அமைப்பின் 90- வது ஆண்டு தொடக்க விழா மற்றும் சர்வதேச யோகா தின விழா பிரம்மாண்ட ஆன்மிகத் திருவிழாவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி
மாலையில் நடைபெற்றது
21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் முதலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பிரபல பாடகி ஜனனி இறை வணக்கம் பாடினார்.
அடையாறு பிரம்மா குமாரிகள் அமைப்பின் இயக்குனர் பி.கு. முத்துமணி வரவேற்றார்.
பிரம்மா குமாரிகள் அமைப்பின் தலைமையகமான ராஜஸ்தான் அபுராஜ் நகரில் இருந்து வந்துள்ள ராஜயோகினி பி.கு உஷா அவர்கள் ஆசிர்வாத உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மூத்த சகோதரிகள் மேடையில் அமர்ந்து உலக அமைதிக்காக கூட்டு தியானம் செய்தனர்.
90 வது ஆண்டு விழா துவக்கவிழா முன்னிட்டு சென்னை முக்கிய பிரமுகர்கள் நடிகர் செந்தில், நடிகை சச்சு, VGP சந்தோஷ், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் திரு ஹரிகரன், காஞ்சிபுரம் எஸ் எம் சில்க்ஸ் உரிமையாளர் திரு மனோகரன் உட்பட 90 பேர் ஒரே நேரத்தில் குத்து விளக்கு ஏற்றினர்.
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 90 ஆண்டு ஆன்மிக சேவை குறித்து தமிழ்நாடு மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜ யோகினி பி.கு பீனா விளக்க உரை ஆற்றினார்
தொடர்ந்து இந்த இயக்கத்தின் 90 ஆண்டு சேவை குறித்த காணொளியும் 90 ஆண்டு இலட்சினையும் வெளியிடப்பட்டது.
விழாவில் முக்கிய விருந்தினராக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே .சி. டி. பிரபாகர் பேசியபோது யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கொள்கையோடு சேவையாற்றி வரும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் 90 ஆண்டு கால சேவை மிகுந்த பாராட்டுதற்குரியது. பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். அதனுடைய அர்த்தம் நான் அமைதியான ஆத்மா என்று சொன்னார்கள். ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி என்ற கூற்றுக்கிணங்க தியானத்தின் மூலம் மனதிற்கு ஒளியும் அமைதியும் கிடைத்து விட்டால் அனைத்து தனி மனித பிரச்சினைகளும், பல சமூக பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். கூடவே இத்தருணத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நினைவு கூர்கின்றேன், தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பிரம்மா குமாரி சகோதரி கலந்துகொண்டு எங்கள் (த.வெ.க) தலைவர் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். சகோதரி வாழ்த்தியது போலவே இன்று எங்கள் தலைவர் வெற்றி பெற்று சிறப்பான ஆட்சி அமைத்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற மத்திய தீர்ப்பாயத்தின் உறுப்பினர் எம். சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கும்போது கடந்த 9 தசாப்தங்களாக பிரம்மா குமாரிகள் அமைப்பு அமைதி தூய்மை அன்பு மகிழ்ச்சி போன்ற பண்புகளை சமுதாயத்தில் கற்பித்து வருகிறது. இதுபோன்ற தியானத்தின் மூலமாக நம்முடைய இளைஞர்கள் சமுதாயம் ஆவேசத்திற்கு பதிலாக அமைதியையும் வேறுபாட்டிற்கு பதிலாக ஒற்றுமையையும் கற்றுக் கொள்கிறார்கள், இதன் மூலம் சமுதாயத்தில் நிலவிவரும் குற்றங்களை குறைக்க முடியும். பிரம்மா குமாரிகள் அமைப்பில் தன்னை அர்ப்பணித்து மனித குலத்திற்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்
நிகழ்ச்சியின்
இறுதியில் அனைவரும் போதை இல்லா பாரதம் உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்
விழாவையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் இலவச ராஜயோக தியான பயிற்சி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உள்பட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.