மனநல மருத்துவர் ஆனந்தன்

  • Home
  • India
  • Chennai
  • மனநல மருத்துவர் ஆனந்தன்

மனநல மருத்துவர் ஆனந்தன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மனநல மருத்துவர் ஆனந்தன், Mental Health Service, Dr Anandhan's MINDCARE, #118 VGP PUSHPA NAGAR, MEDAVAKKAM, Chennai.

டாக்டர் ஆனந்தன்
பள்ளிக்கல்வி: பட்டுக்கோட்டை
இளங்கலை மருத்துவப் படிப்பு (MBBS): தஞ்சை மருத்துவக் கல்லூரி.
மனநல மருத்துவப் படிப்பு: மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி.
2002 ஆம் ஆண்டு முதல் சென்னை மேடவாக்கத்தில் மனநல மருத்துவ தொழில் செய்து வருகிறார் .

ஒரே விதை   தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். அங்கே இருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்தொன்பது வயதே ஆன ஒரு இளம...
01/07/2026

ஒரே விதை


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம்.

அங்கே இருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்தொன்பது வயதே ஆன ஒரு இளம்தாய் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஆனால், பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், குழந்தைகளைப் பார்த்த சில நிமிடங்களிலேயே அவள் இறந்துவிட்டாள்.

குழந்தைகளின் தந்தை யார் என்று யாருக்கும் தெரியாது. ஆதரவற்ற அந்த இரண்டு பிஞ்சுகளும், ஒரே துணியில் சுற்றிவைக்கப்பட்டு, மருத்துவமனையின் தொட்டிலில் அருகருகே கிடந்தன.

கிராமத்தில் செய்தி பரவியது. அடுத்த ஒரு வாரத்திற்குள், அந்த குழந்தைகளைத் தத்தெடுக்க இரண்டு குடும்பங்கள் வந்தன.

முதல் நபர், மும்பையிலிருந்து வந்த ஒரு பணக்காரத் தொழிலதிபர். திருமணமாகி பதினோரு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், அவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டார். அவனுக்கு 'ரோகன்' என்று பெயர் வைத்தார்.

இரண்டாவது நபர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவருக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு ஜோடி மாடுகளும் இருந்தன. மற்றொரு குழந்தையைத் தத்தெடுத்து, அவனுக்கு 'செல்வம்' என்று பெயர் சூட்டினார்.

இப்படி, விவரம் புரியும் வயதுக்கு முன்பே அந்த இரட்டையர்கள் பிரிந்தார்கள். ஒருவன் பெருநகரமான மும்பைக்குப் போனான். மற்றொருவன் அதே சின்னஞ்சிறு கிராமத்தில் வளர்ந்தான். தங்களுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருக்கிறான் என்ற உண்மை இருவருக்குமே தெரியாது.

பணத்துக்கும் மனசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை காலம் நிரூபித்தது. இரண்டு வேறுபட்ட சூழலில் வளர்ந்தாலும், காலம் அவர்கள் இருவரையும் ஒரே மாதிரிதான் நடத்தியது.

#பதினைந்து_வயதில்: இரண்டு பேருக்கும் தூக்கம் தொலைந்தது. ரோகன் மும்பையில் ஏசி அறையில் தூக்கமில்லாமல் தவித்தான். செல்வம் கிராமத்தில் ஓலை கூரையின் கீழ் பாயில் விழித்துக் கிடந்தான். இருவருக்கும் காரணமில்லாத கோபம் வந்தது. இரண்டு பேரும் தங்கள் வளர்ப்புத் தந்தையிடம் அடிக்கடி சண்டை போட்டார்கள்.

#பத்தொன்பது_வயதில்: இருவருமே ஒரு பெரிய சோகத்திற்குள் மூழ்கினார்கள். எதற்காக இந்த சோகம் என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரத்தை மனசுக்குள் சுமந்துகொண்டே அலைந்தார்கள். சில மாதங்களில், அது தானாகவே குறைந்தது. இருவருக்கும் இது ஒரே மாதிரி நடந்தது.

#இருபத்திமூன்று_வயதில்: இருவருக்கும் திடீரென்று ஒரு அதீத ஆற்றலும், வேகமும் வந்தது. ரோகன் அவசரமாக மூன்று புதிய தொழில்களைத் தொடங்கி, மூன்றையும் பாதியிலேயே கைவிட்டான். செல்வம் அளவுக்கு அதிகமாக நிலங்களைக் குத்தகைக்கு எடுக்க ஆசைப்பட்டு, ஊரில் பலரிடம் சண்டை போட்டு, இருந்த சொந்த நிலத்தையும் இழக்கும் நிலைக்குப் போனான்.

#முப்பது_வயதில்: இருவரின் மனதும் மீண்டும் மந்தமானது. எதிலும் ஈடுபாடோ, நாட்டமோ இல்லை.

ரோகன் நெய்யும் பாதாமும் சாப்பிட்டு வளர்ந்தான்; செல்வம் கஞ்சியும் கூழும் குடித்து, வளர்ந்தான். இருந்தாலும் இருவரின் உடலமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தது. ரோகனின் தோல் வெயில் படாததால் சிவப்பாக இருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், மனப்போராட்டங்கள் மட்டும் ஒரே வயதில், ஒரே மாதிரி வந்தன.

அவர்கள் இருவரையும் தனித்தனியாக உட்கார வைத்துக் கேட்டிருந்தால், வாழ்க்கையைப் பற்றி ஏறக்குறைய ஒரே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள்.

★இருவருமே மனிதர்களை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள்.

★சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட எளிதில் காயப்படுவார்கள்.

★இருவரும் பண விஷயத்தில் சிக்கனம் என்பதை தாண்டி ஏறக்குறைய கஞ்சத்தனம் என்றே சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். வறுமையான சூழலில் வாழும் செல்வம் மட்டுமல்ல; சில நூறு கோடிகளை வைத்திருக்கும் ரோகனும் கஞ்சத்தனமாக தான் இருப்பான்.

வீடு, உணவு, படிப்பு, பணம், வளர்ப்பு என எல்லாமே வேறு வேறு. ஆனால், அவர்களை இணைக்கும் ஒரே ஒரு விஷயம் அவர்களின் மரபணு. அந்த மரபணுதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் தீர்மானித்தது.

#முப்பத்தைந்தாம்_வயது
அவர்களுக்கு முப்பத்தைந்து வயது ஆனபோது, அந்த விவரிக்க முடியாத சோகம் இருவரையும் மீண்டும் தாக்கியது. ஆனால், இந்த முறை அது அவர்களை விட்டுப் போகவில்லை. நெஞ்சின் மேல் ஒரு பாறை போல அழுத்தி உட்கார்ந்துகொண்டது.

இங்குதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியது. ஏனென்றால், அவர்களின் குடும்பங்கள் இந்த நோயை இரண்டு வெவ்வேறு விதமாகக் கையாண்டன.

செல்வத்தின் அப்பாவுக்கு 'மனச்சோர்வு' (Depression) என்றால் என்னவென்றே தெரியாது. தன் மகன் சரியாகச் சாப்பிடுவதில்லை, யாரிடமும் பேசுவதில்லை, பேயறஞ்ச மாதிரி வெறிச்சுப் பார்க்கிறான் என்பது மட்டுமே அவருக்குப் புரிந்தது. மகனின் அந்தப் பார்வை அவரைப் பயமுறுத்தியது.

பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்மணி, " அரசு மருத்துவமனையில் மனநோய் டாக்டர் இருக்கார், அங்கே கூட்டிட்டுப் போங்க" என்றார். முதலில் விவசாயிக்குச் சற்று தயக்கமாக இருந்தாலும், அவனுக்கு என்னவாகி விடுமோ என்ற பயம் அதிகமாக இருந்தது. அதனால், மகனை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினார்.

அந்த டாக்டர் எந்த மாயாஜாலமும் செய்யவில்லை. செல்வம் சொல்வதை அமைதியாகக் கேட்டார். பிறகு விவசாயியிடம், "ஐயா, இதுவும் ஒரு சாதாரண நோய்தான். மற்ற உடம்பு வலிகளைப் போலத்தான் இதுவும். இது எந்தக் கடவுளும் கொடுத்த தண்டனையும் இல்லை, உங்கள் மகனின் பலவீனமும் இல்லை," என்று தெளிவாகப் புரிய வைத்தார்.

சில மாத்திரைகளைக் கொடுத்து, "குணமாகக் கொஞ்சம் நாளாகும், தொடர்ந்து வாங்க" என்று அனுப்பி வைத்தார்.

விவசாயி அந்த மாத்திரைகளைச் சந்தேகமாகப் பார்த்தார். 'இது வெறும் தூக்க மாத்திரைதானே? இது எப்படி மனசுல இருக்கிற துக்கத்தைக் குணப்படுத்தும்?' என்று குழம்பினார்.

ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. பெரிய சாமியார்களிடம் சென்று பரிகாரம் செய்ய அவரிடம் பணமும் இல்லை. அதனால், டாக்டர் சொன்னபடியே மகனுக்குத் தவறாமல் மாத்திரை கொடுத்தார். உடனடியாக எந்த மாற்றமும் நிகழவில்லை.

ஆனால், சில வாரங்களில் செல்வத்தின் மனப்பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அவனுக்கு அவனது பழைய வாழ்க்கை திரும்பக் கிடைத்தது. ஊரிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். மீண்டும் விவசாயத்தைக் கவனிக்கத் தொடங்கினான். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அவன் சந்தோஷமாக வாழ்ந்தான்.

ரோகனின் அப்பாவுக்கு தன் மகனுக்கு 'மனநலப் பிரச்சினை' இருக்கிறது என்ற உண்மையை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஏன் அவராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை

"மனசுக்குத் ட்ரீட்மென்ட் எடுத்த பையன்னு தெரிஞ்சா, இந்த ஊர்ல எவன் பொண்ணு கொடுப்பான்? நம்ம கௌரவம் என்ன ஆவது?" என்று அவர் பயந்தார். அதனால், மகனின் பிரச்சினை வீட்டை விட்டு வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

முதலில் ஒரு பிரபல சாமியாரிடம் சென்றார்கள். அவர் திருநீறு, தாயத்து கொடுத்துப் பார்த்தார்; எதுவும் சரியாகவில்லை. தோஷம் கழிக்கிறோம் என்று நதிக்கரையில் பரிகார பூஜைகள் செய்தார்கள்; அப்போதும் சரியாகவில்லை.

இறுதியாக அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். "இது நோய் இல்லை, இவனோட குணத்தில்தான் பிரச்சினை" என்று நினைத்து, மகனை அமெரிக்காவிற்கு 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்' (ஆளுமைத் திறன் வளர்ப்பு) பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே தெம்பில்லாத ஒருவனுக்கு, தன்னம்பிக்கை வகுப்பு எப்படி உதவும்?

இந்த ஓட்டங்களுக்கு நடுவில், ரோகனைப் பார்த்த ஒரு டாக்டர் மனநல மாத்திரைகளைப் பரிந்துரை செய்தார். ஆனால் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். 'மாத்திரை சாப்பிடுவது பலவீனத்தின் அடையாளம்' என்று அவர்கள் நம்பினார்கள். அந்த மாத்திரைகள் பெட்டியிலேயே திறக்கப்படாமல் கிடந்தன. அதற்குப் பதிலாக, "பாசிட்டிவ்வா யோசி, சாமி கும்பிடு, தைரியமா இரு" என்று அவனுக்கு அறிவுரைகளை மட்டும் வாரி வழங்கினார்கள்.

#நாற்பத்தைந்து_வயதில், அவர்கள் இருவரையும் இப்போது பக்கத்துப் பக்கத்தில் வைத்துப் பாருங்கள். பிறந்தபோது ஒரே துணியில் அருகருகே கிடந்தார்களே, அதே போல.

செல்வம்: ஏழை விவசாயியின் மகன். பணமும் வசதியும் குறைவுதான். ஆனால், அவன் நன்றாக இருக்கிறான். இரவில் நிம்மதியாகத் தூங்குகிறான். வயலில் வேலை பார்க்கிறான். தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறான்.

ரோகன்: நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உடைந்து கொண்டிருக்கிறான். முக்கியமாக, அவனது உடல் முழுமையாகச் சிதைந்துவிட்டது.

பயம் காரணமாகவும், கௌரவம் காரணமாகவும் அவர்கள் மறைத்து வைத்த அந்த மனநோய், மறைத்ததால் மட்டும் காணாமல் போய்விடவில்லை. அது அவனுக்குள் ஆழமாக இறங்கி, வெளியேற வேறு வழி தேடியது.

முடிவில், அவனது உடம்பின் வழியாக நோய்களாக வெடித்துக் கிளம்பியது.

அவனுக்குச் சர்க்கரை நோய் வந்தது; எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குறையவில்லை.

கைகளில் சொரியாசிஸ் (தோல் நோய்) வந்தது; மன அழுத்தம் அதிகரிக்கும்போதெல்லாம் அது ரணமாக மாறியது.

வயிறு முழுமையாகக் கெட்டுப்போனது (IBS).

இரவில் தூக்கத்திலே பல வருடங்கள் பற்களை நரநரவென்று கடித்ததால், தாடை எலும்புகள் தேய்ந்து வலி எடுத்தது.

எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாததால் மூன்று தொழில்களும் நஷ்டத்தில் மூழ்கின. ஆடம்பரமாக நடந்த அவனது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

ரோகன் சென்ற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், அவனது சர்க்கரை நோயை, தோல் நோயை, வயிற்றுப் பிரச்சினையை என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்தார்களே தவிர, இவை அனைத்திற்கும் ஆணிவேராக இருக்கும் அவனது 'மனச்சோர்வை' யாரும் இணைத்துப் பார்க்கவில்லை.

அதற்குக் காரணம், அந்த உண்மை வெளியே தெரியாதபடி அவனது குடும்பம் முப்பது வருடங்களாக அதைச் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்ததுதான்.

செல்வம் தன் பிரச்சினைக்கு 'மனச்சோர்வு' என்று பெயர் சொல்லி, மருத்துவரிடம் சரியான சிகிச்சை எடுத்தான்.
ஆனால் ரோகனோ, அந்தப் பெயரைக் உச்சரிக்கக் கூச்சப்பட்டு, அதைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களாலும் அழைத்தான்.

அதற்கான விலையை அவனது உடல் செலுத்தியது. சர்க்கரையாக, தோல் நோயாக, குடல் புண்ணாக, வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை அடக்கி வைத்து இறுகிப்போன தாடையாக, தன் உடலையே உருக்கி அந்த வலியைச் சுமந்தான்.

எந்த வசதியும் இல்லாத ஒரு சாதாரண விவசாயியின் மகன், இன்று நோயின்றி நிம்மதியாக வாழ்கிறான்.
இருவருக்கும் ஓடுவது ஒரே ரத்தம். வந்தது ஒரே பிரச்சினை. அது தொடங்கிய வயதும் ஒன்றுதான்.

ஆனால், ஒரு குடும்பம் அதை 'நோய்' என்று ஏற்றுக்கொண்டு சாதாரண மருத்துவரிடம் காட்டியது. மற்றொரு குடும்பம் கௌரவம் பார்த்து அதை மறைத்தது.
நோயை எழுதியது அவர்களின் மரபணு. ஆனால், அவர்கள் இருவரின் முடிவையும் எழுதியது அவர்களின் அணுகுமுறை!

இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்ன தெரியுமா?

சர்க்கரை நோய் (type 2 diabetes),
சோரியாசிஸ்,
வயிற்றுப் பிரச்சனைகள் (irritable bowel) மற்றும்
தாடை எலும்புகள் தேய்மானம் (TMJ dysfunction) எதுவுமே செல்வத்துக்கு வரவில்லை.

டாக்டர் ஆனந்தன்
1/07/2026

#மனநலம் #மனநலவிழிப்புணர்வு #விதிவிதைவிஞ்ஞானம் #ஒரேவிதை #மரபியல் #மனச்சோர்வு #மனநோய்சிகிச்சை #களங்கம்வேண்டாம் #தமிழ்இலக்கியம் #சிறுகதை #தமிழ்எழுத்து #உளவியல் #மனநலமருத்துவம் #விஞ்ஞானம் #தமிழ்

28/06/2026

24/06/2026


2019-ல், 21-ம் நூற்றாண்டில்,இந்த மாதிரியான நிகழ்வு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே பிறந்த தமிழ் குடியில்,"தமிழ் குடிதாங்கி...
21/06/2026

2019-ல், 21-ம் நூற்றாண்டில்,
இந்த மாதிரியான நிகழ்வு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே பிறந்த தமிழ் குடியில்,
"தமிழ் குடிதாங்கிகள்" வாழும் பகுதியில் நிகழ்ந்திருப்பது,
தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை காட்டுகிறது.
உடனே நம் முன்னேற்றத்தை பீகார், உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு ஒப்பாரி வைக்காதீர்கள்.
வறுமையைப் போலவே, ஜாதியையும் மதத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த கடந்த அறுபது ஆண்டுகால தமிழக ஆட்சியாளர்களின் சாதனை இது.
இயக்குனர் சசி ஒரு சினிமாவை எடுப்பதற்கு எந்த அளவுக்கு மெனக்கெடுவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் இயக்கிய 555 திரைப்படத்தில் என் நண்பரும் மருத்துவருமான Dr Benny roger உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார்.
சசி அவர்களின் அதீத மெனக்கெடல் இதில் நன்றாகத் தெரிகிறது. அந்த மெனக்கடலே படத்தை கொஞ்சம் சொதப்பிவிட்டது.
உளவியலில் Law of Reversed Effect என்ற விஷயம் வேலை செய்திருக்கிறது போலும்.
ஆனால் சசி மாதிரியான இயக்குநர்கள் சினிமாவில் தொடர்ந்து இயங்க வேண்டும்.
ஆகையால் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்த்து, வெற்றியடையச் செய்ய வேண்டிக் கொள்கிறேன்.
Law of Reversed Effect: (The harder you consciously try to do something, the less successful you are likely to be.)
#தமிழ் #தமிழ்நாடு #சினிமா
Kamal Haasan

07/06/2026

இயந்திரப் புன்னகையும் மருத்துவ அறமும்:

'கைராசி' மருத்துவர்களின் மறுபக்கமும் தமிழகச் சூழலும்

தமிழகத்தின் எந்த ஒரு நடுத்தர நகரத்தின் வீதியிலும், மாலை நேரங்களில் நிரம்பி வழியும் ஒரு மருத்துவமனையை நாம் காண முடியும்.

உள்ளே காத்திருப்போர் அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள். அவர்கள் அனைவரையும் அங்கு ஈர்த்து வந்திருப்பது அந்த மருத்துவரின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை; அவரை அவர்கள் அழைக்கும் பெயர் "கைராசி டாக்டர்".

"டாக்டர் மூஞ்சியப் பார்த்தாலே பாதி வியாதி பறந்துடும்" என்ற அபாரமான நம்பிக்கையோடு காத்திருக்கும் அந்த நோயாளிகளுக்குப் பின்னால், ஒரு மிகப்பெரிய உளவியல் மற்றும் சமூகச் சிக்கல் உறைந்திருக்கிறது.
மருத்துவருக்கும் நோயாளிக்குமான இந்த உறவு, இரு தரப்பையுமே எப்படி ஒரு கண்ணுக்குத் தெரியாத மன அழுத்தத்திற்குள் தள்ளுகிறது என்பதை நடுநிலையோடு ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மூளையின் அறிவாற்றல் சுமை: அந்த 'கைராசி' புன்னகையின் பின்னணி
மருத்துவர் அறையின் கதவு திறக்கிறது. உள்ளே நுழையும் ஒவ்வொரு நோயாளியையும் மருத்துவர் ஒரு மெல்லிய புன்னகையோடு வரவேற்கிறார். அந்தப் புன்னகை நோயாளிகளுக்கு மருந்தாகத் தெரியலாம். ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால், அது ஒரு மிகப்பெரிய 'அறிவாற்றல் சுமையின்' ( on ) வெளிப்பாடு.

தொடர்ந்து முப்பது, நாற்பது நோயாளிகளைப் பார்க்கும்போது, மருத்துவரின் உடல் மட்டுமல்ல, மூளையும் அதீத சோர்வடைகிறது.

மருத்துவர் என்ற முகமூடிக்குப் பின்னால் அவரும் ஒரு சாதாரண மனிதர்தான். அவருக்குத் தனது சொந்த உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம், குடும்பத்தில் தீர்க்க முடியாத குழப்பங்கள் இருக்கலாம், அல்லது முந்தைய நோயாளி முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் இருக்கலாம்.

மூளையின் உணர்வு மையமான அமிக்டாலா (Amygdala) சோர்வையும், எரிச்சலையும், கோபத்தையும் வெளிப்படுத்தத் துடிக்கும். ஆனால், ஒரு இயந்திரத்தைப் போல, ரோபோவைப் போல செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த மருத்துவர், தனது மூளையின் முன் மடலான ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸை (Prefrontal cortex) அதீத சுமைக்கு உள்ளாக்கி, அந்த எதிர்மறை உணர்வுகளைக் கட்டாயப்படுத்தி அடக்குகிறார். முகத் தசைகளைச் செயற்கையாக இயக்கி ஒரு புன்னகையை வரவழைக்கிறார்.
இது ஏமாற்றும் புன்னகை அல்ல;
இது ஒரு 'தற்காப்பு மற்றும் கடமைப் புன்னகை'.
ஆனால், ஒரு நாளைக்கு நூறு முறை இப்படித் தனது சொந்த உணர்வுகளைக் கொன்று செயற்கையாகச் சிரிக்கும்போது, அந்த மருத்துவரின் மனநலம் மெல்ல மெல்ல சிதைகிறது.
நோயாளிகளின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையின் எல்லையும்
ஒரு விவசாயி, தனது மூட்டு வலிக்காகப் பல கிலோமீட்டர் பயணம் செய்து அந்த 'கைராசி' மருத்துவரைப் பார்க்க வருகிறார். அவரைப் பொறுத்தவரை, அந்த மருத்துவர் தன் வலியைப் போக்குபவர் மட்டுமல்ல, தன் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் ஒரு வழிகாட்டி.
நம்பிக்கை (Belief system) என்பது மருத்துவத்தில் மிக முக்கியமானதுதான்.

பிளாசிபோ ( ) ஆய்வுகள் நிரூபிப்பது போல, மருத்துவரின் மீதான நம்பிக்கை மூளையில் எண்டார்ஃபின்களைச் ( ) சுரக்கச் செய்து வலியைக் கணிசமாகக் குறைக்கும்.

ஆனால், நம்பிக்கை மட்டுமே ஒரு முழுமையான சிகிச்சையாகிவிட முடியாது.
வளர்ந்த நாடுகளில், ஒரு சிறப்பு மருத்துவரைப் பார்க்க மாதக்கணக்கில், சில சமயம் வருடக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும். ஆனால், நமது சூழலில் நோயாளிகள் உடனடியாகச் சிகிச்சையை எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டு மணி நேரம் காத்திருந்தாலே அவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. "நான் யார் தெரியுமா, என்னை உடனே பார்க்க வேண்டும்" என்ற உரிமை உணர்வு பல நேரங்களில் வரம்பு மீறுகிறது.
மருத்துவருக்கும் நோயாளிக்கும் யார் வி ஐ பி? யார் முக்கியஸ்தர்? என்பது தெரியும். ஆனால் நோய்க்கு தெரியாதே?
முன்னாள் எம்எல்ஏ என்பதால் கேன்சர் மெதுவாக பரவுமா என்ன?
யாருக்கு யார் விஐபி என்பது தான் பிரச்சனை.
உனக்கு உன் தலைவன் விஐபி ஆக இருக்கலாம். ரெக்கமண்டேஷன் செய்து உன் தலைவனை மருத்துவரிடம் அழைத்து செல்லும்போது… அந்த மருத்துவருக்கு அவருடைய பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்…. இவர்களுக்கு எல்லாம் பிறகு தான் உன் தலைவன்..
Very important person (VIP) to whom?
எல்லாவற்றிலும் ரெக்கமண்டேஷன் பழக்கமாகிவிட்ட சமூகத்தில், ரெக்கமண்டேஷன் காரணமாகவே தரமற்ற சிகிச்சை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் தரமான மருத்துவர்கள் ஏராளம்.
நோயாளிகளின் இந்த அவசரமும், மருத்துவர் மீதான அதீத எதிர்பார்ப்பும் மருத்துவமனைச் சூழலை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.
உளவியல் குறுக்கீடுகள்: சிகிச்சையைச் சிதைக்கும் கூறுகள்
முப்பது நோயாளிகளைப் பார்க்கும் ஒரு மருத்துவரால், ஒரு நோயாளிக்கு அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடிகிறது. இந்த அவசரமான சூழலில், மிக முக்கியமான உளவியல் சிக்கல்கள் எழுகின்றன:

இடமாற்ற உணர்வுகள் ( ): நோயாளி தனக்கு சமூகத்தின் மீதோ, குடும்பத்தின் மீதோ, தன் நோயின் மீதோ இருக்கும் ஒட்டுமொத்த கோபத்தையும், எதிர்பார்ப்பையும் அறியாமலேயே மருத்துவர் மீது திணிக்கிறார்.

எதிர்-இடமாற்ற உணர்வுகள் ( ): தொடர்ந்து பல மணி நேர அறிவாற்றல் சுமையால் (Cognitive load) தவிக்கும் மருத்துவர், நோயாளியின் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தன் சொந்த எரிச்சலையோ அல்லது முந்தைய நோயாளியின் மீதான அதிருப்தியையோ இந்த நோயாளி மீது அறியாமலேயே காட்டத் தொடங்குகிறார்.

வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் (Expressed Emotions): மருத்துவமனை அறையில் மருத்துவர் மற்றும் நோயாளி ஆகிய இருவருக்குமே தன்னிச்சையாக வெளிப்படும் அதீத கோபம், சலிப்பு அல்லது விமர்சனம் (High Expressed Emotions), ஒட்டுமொத்த சிகிச்சையின் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.
சமரசம் செய்யப்படும் மருத்துவத் தரம்
இந்தச் சுழற்சியின் இறுதி விளைவு என்ன?
மருத்துவர் ஒரு இயந்திரமாக மாறும்போது, நோயைக் கணிக்கும் திறன் (Diagnosis) மழுங்குகிறது. ஒரு நோயாளிக்கு என்ன பிரச்சனை என்பதைத் தீர்க்கமாக விசாரித்து, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய மூளை, நேரமின்மையால் தன்னிச்சையான, மேலோட்டமான முடிவுகளை ( and Biases) எடுக்கத் தூண்டப்படுகிறது.

சரியான நோய் கண்டறிதல் தவறவிடப்படலாம்.
தேவையற்ற மருந்துகள் அவசரமாகப் பரிந்துரைக்கப்படலாம்.
நோயாளியின் உண்மையான வாழ்க்கை முறை சிக்கல்கள் கண்டுகொள்ளப்படாமல் போகலாம்.

இதனால் கடைசியாகப் பாதிக்கப்படுவது நோயாளி மட்டுமல்ல; மன உளைச்சலுக்கும், 'பர்ன்-அவுட்' (Burnout) எனப்படும் அதீத சோர்வுக்கும் உள்ளாகும் மருத்துவரும்தான். ஒட்டுமொத்தத்தில் சமூகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு ஆட்டம் காண்கிறது.
அறமுடன் கூடிய வணிகமே உண்மையான சேவை
இந்தியச் சூழலில் நாம் ஒரு கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்:

மருத்துவம் என்பது ஒரு புனிதமான சேவை மட்டுமல்ல; அது ஒரு அறிவுசார் வணிகமும் (Intellectual Profession/Business) கூட.

வியாபாரம் என்பது எந்த விதத்திலும் தவறான வார்த்தை அல்ல. பலர், தாங்கள் ஏதோ லாப நோக்கமற்ற தியாகத்தைச் செய்வதாகத் தங்களைத்தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

தியாகம் என்ற பெயரில், ஒரு நாளைக்கு ஐம்பது பேரைப் பார்த்துத் தன் உயிரையும், நோயாளியின் உடல்நலத்தையும் பணயம் வைப்பதை விட, ஒரு நாளைக்கு பத்து பேரை மட்டும் முழுமையாக, தரமாகப் பார்ப்பதே உண்மையான அறம்.

நோயாளிகளும் மருத்துவர்களைக் கடவுள்களாகவோ அல்லது தியாகிகளாகவோ பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உழைப்பிற்கும் அறிவிற்கும் ஊதியம் பெறும் மனிதர்கள் என்பதை உணர வேண்டும்.
அறமுடன் வணிகம் செய்வதே சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய சேவை.

தரமான சிகிச்சைக்காகக் காத்திருப்பதில் தவறில்லை என்ற மனநிலை நோயாளிகளிடமும், தரம் குறையாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பேன் என்ற உறுதி மருத்துவர்களிடமும் வர வேண்டும்.

மருத்துவர் தனது இயந்திரப் புன்னகையைக் கழற்றி வைத்துவிட்டு, உண்மையான நிம்மதியுடன் நோயாளியை அணுகும்போதும், நோயாளி தனது எதிர்பார்ப்புகளை யதார்த்தத்திற்குள் சுருக்கிக் கொள்ளும்போதும் மட்டுமே, இந்த மருத்துவச் சூழல் உண்மையிலேயே 'கைராசியானதாக' மாறும்.

அன்புடன் ஆனந்தன்
07\06\26

என்னுடைய சகாவும் (Colleague), மனநல மருத்துவ பேராசிரியருமாகிய(teacher) அவர்...எனக்கு அனுப்பிய மெசேஜ். என்னுடைய ரிப்ளை. அந...
23/04/2026

என்னுடைய சகாவும் (Colleague), மனநல மருத்துவ பேராசிரியருமாகிய(teacher) அவர்...

எனக்கு அனுப்பிய மெசேஜ். என்னுடைய ரிப்ளை. அந்த பதிலை இங்கே காட்சிப்படுத்துவதன் மூலம்... இன்னும் சில மணி நேரங்களுக்கு... சிலர் புரிந்து கொண்டு மனம் மாறக்கூடும் என்ற ஒரு நப்பாசை.
Kamal Haasan
Shalini
Pattukkottai Prabakar Pkp
Murali Appas

In the world, there are lots of philosophical, religious and individual definitions of the mind. But we are using science and technology in every moment of our life. Isn’t it? If we see Scientifically “mind is nothing but the physiological function of the brain.” Read More… In the world, t...

21/04/2026

ஒரு சில தரமற்ற மனிதர்களின் உளவியல் பிரச்சினையால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் கல்வி கேலிக்கூத்தானது.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே" என மார்தட்டிக் கொள்ளும் தமிழகமும் தமிழர்களும்...

பீகார் உத்திரபிரதேசத்துடன் ஒப்பிடக்கூடிய படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் இத்தகைய வாய்ஜால தலைவர்கள் தான்.

இவர்கள் மனதில் துளியும் கருணையில்லை.

பதவிக்காக எந்த படுபாதக செயலை செய்ய கடுகளவும் தயங்காத கொடூரமான சாத்தான்கள் இவர்கள்.

எதுகை மோனையில் பேசி பாமர தொண்டர்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சி குடித்து...

தங்களின் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில் செங்கற்களாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

21/04/2026
திமுக கட்சியினரின் லட்சக்கணக்கான போலி ஐடிக்கள்...முகநூலில் வலம் வருவதை செயற்கை நுண்ணறிவு வாயிலாக இன்று அறிந்து கொண்டேன்....
21/04/2026

திமுக கட்சியினரின் லட்சக்கணக்கான போலி ஐடிக்கள்...

முகநூலில் வலம் வருவதை செயற்கை நுண்ணறிவு வாயிலாக இன்று அறிந்து கொண்டேன்.

பெரும்பாலும் திமுகவை விமர்சிப்பவர்களை கொச்சையாக வசைபாடும் கருத்துகள் இந்த போலி ஐடிகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.

திமுகவின் ஐடி விங், ஒரு சில இடங்களில் தங்கி இருந்துகொண்டு... திமுகவை விமர்சனம் செய்யும் பதிவுகளை கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து, அடையாளம் கண்டு... தனிப்பட்ட வகையில் அந்த நபரை கொச்சையாக எழுதுகிறார்கள்.

கொச்சையான விமர்சனங்களைப் பார்க்கும்போது, பதிவிடும் நபர் — அதைப் பார்க்கும் அவர்களின் குடும்பத்தாரின் அறிவுரைகளுக்கும், அவர்கள் படும் கவலைகளை மனதில் கொண்டும் — "நமக்கு ஏன் இந்த வேலை?" என விலகிவிடுவார்கள் தானே?

இப்படித்தான் கடந்த 60 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகம், தன்னை எதிர்க்கும் தலைவர்கள் முதல், மற்ற கட்சிகளின் பாமர தொண்டர்கள் வரை, உளவியல் தாக்குதல் செய்து நிலைகுலைய வைக்கிறது.

எம்.ஜி.ஆர்,
வைகோ,
விஜயகாந்த்,
கமல்ஹாசன் —
அந்த வரிசையில் இன்று விஜய்...

ரோம சாம்ராஜ்யங்கள் அழிந்த வரலாறுகள் தெரியாத அப்பாவிகள் திமுகவினர். திமுக சாகாவரம் பெற்றதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்.
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்.

Address

Dr Anandhan's MINDCARE, #118 VGP PUSHPA NAGAR, MEDAVAKKAM
Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when மனநல மருத்துவர் ஆனந்தன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share