A2Z pregnancy care

A2Z pregnancy care 👩‍⚕️ Complete Pregnancy & Women’s Health
🤰 Fertility | pregnancy care| Robotic gynaec surgery|Laparoscopy|Hysteroscopy
Dr. Indhra Nedumaran – Sr.

Consultant
📍Chennai | Anna Nagar 📞 Call Now: 73393 38888
Whatsapp 9840979397 www.atozpregnancycare.com

04/05/2026

👩‍⚕️ Complete Pregnancy & Women’s Health
🤰 Fertility | pregnancy care| Robotic gynaec surgery|Laparoscopy|Hysteroscopy
Dr. Indhra Nedumaran – Sr. Consultant
📍Chennai | Anna Nagar 📞 Call Now: 73393 38888
Whatsapp 9840979397 www.atozpregnancycare.com

01/05/2026

WE ARE RECRUITING - EXPERIENCED AND ENTRY-LEVEL OBSTETRIC PHYSIOTHERAPY CANDIDATES

GENDER FEMALE PREFERRED

LOCATION
ANNANAGAR
CHENNAI

SHARE
YOUR CV TO 9840979397
[email protected]

14/04/2026
05/04/2026
02/04/2026

பூப்பெய்தல் -11

இந்தப்பதிவில் பதின்பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் மற்றும் உடல்பருமன் பற்றி பார்ப்போம்.

ஊட்டசத்து குறைபாடுகள்:

துரிதமான வளர்ச்சிக்கு புரதசத்து, கால்சியம் , வைட்டமின்கள் , நல்ல கொழுப்புள்ள உணவுகள் மற்றும் இரும்பு சத்து ஆகியவை அவசியம்.
புரதசத்து குறைவாக எடுக்கும்போது வளர்ச்சி குன்னிய நிலை உயரம் குறைவாக மற்றும் எடைகுறைவு ஏற்படலாம்.

இரும்பு சத்து குறைபாடு இரத்தசோகையை உண்டாக்கும். பூப்பெய்தியதிலிருந்து இரத்தக்கசிவு ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதால் இரத்தசோகை பாதிப்பு தீவிரமாக இருக்கும்.

உணவில் புரதசத்துமிக்க மாமிச உணவுகள், முட்டை , மீன்கள் ,உளுந்து, பச்சை பயறு, பன்னீர், சோயா்பன்னீர், தயிர் மற்றும் பால் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளவும்.இரத்தசோகைக்கு மருத்துவர். பரிந்துரைபடி இரும்பு சத்து விட்டமின் சத்து மாத்திரைகள் கொடுக்கலாம்

உடல் பருமன்:

அளவுக்கு அதிகமான எடைக்கு பல காரணங்கள் உண்டு

கட்டுப்பாடில்ல உணவு பழக்கம்
குறைந்த உடல் உழைப்பு
ஒழுங்கு முறையற்ற தூக்கம்
மனழுத்தம்
நீரிழிவு நோய்
நுரையீரல் அலர்ச்சி(ஆஸ்த்மா)க்கு கொடுக்கும் ஸ்டீராய்ட் மருந்து
உடல்பருமனால் நாட்பட்ட நோய்கள் வருவதற்றகு வாய்ப்பு அதிகம்.

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:

1 . உடல் பருமனும் ஊட்டச்சத்து குறைபாடும் நமது பழக்கம் மற்றும் உணவுமுறையால் மாற்றியமைக்க முடியும்

2. பழக்கவழக்கங்களை முறைபடுத்துதல் மற்றும் நாம் அவற்றை கடைபிடித்து முன்மாதிரியாக இருப்பது

3. முறையான தூக்கம் ,

4. மனநல ஆலோசனை,

5. நீரிழிவிற்குரிய சிகிச்சைமுறைகளை தவறாமல் கடைபிடித்தல்

6. ஆஸ்த்மாவை கட்டுப்பாட்டில் வைத்தல்

பதின்பருவ பிள்ளைகளை மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இச்சூழலை கையாளமுடியும்.

01/04/2026

பூப்பெய்தல்- 7

பதின்ம வயது பெற்றோரின் சவால்கள்:

1. . உங்கள் வாழ்க்கையில் மற்ற குழந்தைகள், வேலை, உறவுகள், குடும்பக் கடமைகள் அல்லது உடல்நலக்குறைவு போன்ற கூடுதல் அழுத்தங்கள்

2. நிதி மற்றும் நிதிமேலாண்மை சிக்கல்கள் மற்றும் பதட்டம்

3. மெனப்பாஸ் மற்றும் முன்நிலையில் ஹார்மோன்களினால் ஏற்படக்கூடிய மனநல உடல்நல பிரச்சனைகள்

4. பதின்பருவ பிள்ளையின் நடத்தை குறித்த உங்கள் உணர்வுகள்

பதின்பருவத்தனரரின் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது:

1. மிகவும் அமைதியான பெற்றோர்களுக்குக் கூட சவாலாக இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

2. உங்கள் பிள்ளை அல்லது இளம் வயதினர், சகித்துக்கொள்ளக் கடினமான வழிகளில் நடந்துகொள்வதற்கு உடலியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. நீங்கள் ஒரு பெரியவர், கடினமான காலங்களில் அவர்களுக்கு வழிகாட்டுவது உங்கள் பொறுப்பு என்று நீங்கள் உணர்ந்து
ஆனால் அது எப்போதும் எளிதானதல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்

4. அவர்களுடன் செலவிடும் நேரத்தை எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாகக் கழிக்கலாம் என்று எதிர்பார்க்காதீர்கள்,

பெற்றோரகள் எவ்வாறு தங்களை தயார் படுத்த வேண்டும்:

1. முதலில் இது நாம் கடந்து வந்த பாதை என்பதை நினைவில் கொள்ளவும். ஒன்றும் புதிதல்ல
2. அந்தச் சூழ்நிலையிலிருந்து சற்று விலகி நிற்க முயற்சிக்க வேண்டும்.
3. மேலும் உங்களையும் கவனித்துக்கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.
4. உங்களுக்காக நேரம் ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. ஓய்வெடுக்க அல்லது அவ்வப்போது உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள அனுமதியுங்கள்.
6. உங்கள் கவலைகளை உங்கள் துணைவர் அல்லது நண்பர்களிடம் பேசுங்கள்
7. ஒரு ஆதரவுக் குழுவிலோ அல்லது மன்றத்திலோ சேருங்கள்.
8. மனச்சோர்வு, சோகம், மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
9. நீங்கள் மனச்சோர்வு, பதட்டம் அல்லது மன அழுத்தத்தில் இருப்பதாகக் கவலைப்பட்டால், ஒரு பொது மருத்துவரிடம் பேசுங்கள்.
10. உடற்பயிற்சி , தியானம், சமச்சீரான உணவு வகைகள்மற்றும் முறையான தூக்கம் இவற்றில் கவனம் செலுத்தவும்

பெற்றோர்கள் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது :

1. பதின்பருவத்தினருக்கு தேவை நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் மட்டுமே.
2. ஆபத்து மற்றும் சிக்கலில் மாட்டும்போது பெற்றோரே உதவமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்தல்

சிலருக்கு பயனளிக்கும் தகவலாக இருக்கலாம் அனைவருக்கும் பகிரவும்
உங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது

01/04/2026

பூப்பெய்தல்-5

Teenage/பதின் பருவம்

13 வயதிலிருந்து 19 வயது வரை பதின் பருவம் என்றழைக்கிறோம்

இக்கால கட்டம் ஒவ்வொரு மனிதனின் வாழ்வை எதிர்காலத்தை நிர்ணயிக்கும்

இப்பருவம் தனிமனித ஒழுக்கம், ஆளுமையை வடிவமைக்கக் கூடியது.நம் சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பின் உயிர்நாடி.

பதின் பருவத்தில் ஏற்படும் உடலளவிலான மாற்றம் , உளவியல் மாற்றம் மற்றும் நடத்தை மாற்றங்களுடன் கூடிய சவாலான காலம்.

தற்போதைய கால பதின்பருவர்கள் சந்திக்க கூடிய சவால்கள் சிக்கலானவை.

ஒவ்வருவரும் கடந்து வந்த பாதை.
பெற்றோர் பெரியோர்கள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தினால் வெகு சுலபமாக சமாளிக்கலாம்.

நம் ஒவ்வோருவரும் இதற்கான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்
பின்வரும் பதிவுகளில் ஒவ்வொரு சிக்கலாக ஆராய்வோம்

உங்கள் ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன

Address

Anna Nagar
Chennai
600040

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919840979397

Alerts

Be the first to know and let us send you an email when A2Z pregnancy care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A2Z pregnancy care:

Shortcuts

Share