ஆண்டாள் திருமண மாலை

ஆண்டாள் திருமண மாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆண்டாள் திருமண மாலை, Marriage Therapist, Madambakkam, Chennai.

வரன் தேர்ந்தெடுப்பது ரொம்ப சுலபமுங்க,
கமிஷன் இல்லை, கட்டணம் இல்லை
உங்கள் விபரங்களை எங்களுக்கு அனுப்புங்கள் , WhatsApp group-ல் சேருங்க.
வீட்டிலிருந்தே உங்கள் வரன்களை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

🌸💍 ஆண்டாள் வன்னியர் திருமண மாலை 💍🌸வன்னியர் குல மக்களுக்கு இதோ ஒரு அற்புதமான கல்யாண நற்செய்தி! உங்கள் வீட்டு திருமணம் இனி...
02/03/2025

🌸💍 ஆண்டாள் வன்னியர் திருமண மாலை 💍🌸
வன்னியர் குல மக்களுக்கு இதோ ஒரு அற்புதமான கல்யாண நற்செய்தி! உங்கள் வீட்டு திருமணம் இனிதே முடிய, எங்கள் ஆண்டாள் திருமண மாலையில் இப்போது பதிவு செய்யுங்கள்.
📜 பதிவு செய்ய:
உங்கள் வரன் தொடர்பான விவரங்களை 95002 52334 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள். உங்கள் தகவல்களை எங்கள் WhatsApp Group-இல் பதிவேற்றம் செய்யலாம், அதனால் உங்கள் தகவல்கள் விரைவில் பரப்பப்படும்.
🏡 வரன் குறிப்பு:
பொனில் உங்கள் வீடு தேடி வரன் குறிப்பு பார்க்கலாம். உங்களின் குடும்பத்திற்கு ஏற்ற வரனை சிறப்பாக முடிக்கலாம். இது உங்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்கு சிறந்த தீர்வு!
💸 இலவச சேவை:
மூன்று மாதத்திற்கு பதிவு கட்டணம் இல்லை. இலவசமாக பதிவு செய்து உங்கள் கனவு வாழ்க்கையை தொடங்குங்கள். திருமணத்திற்கு முன்பு பின்னோக்கும் கல்யாணக் கடன் கட்டிக்கொள்ள தேவையில்லை.
🌺 மிகச்சிறந்த திருமண மாலை:
உங்கள் வீட்டு திருமண மாலை, ஆண்டாளின் சேவை கொண்ட திருமண மாலை. உங்களின் வாழ்க்கையை வளமாக்க, இப்போது சேருங்கள்!
சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடர்ந்து, உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளை நாங்கள் எப்படி சிறப்பிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய, எங்கள் சேவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
📞 தொடர்புக்கு: 95002 52334
#ஆண்டாள்_திருமணமாலை #வன்னியர்_திருமணம் #கல்யாணநற்செய்தி
நன்றி! 😊

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 3...
13/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 30ஆவது பாடல்.

பாடல் 30:
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

விளக்கம்:
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
13/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 29ஆவது பாடல்.

பாடல் 29:
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

விளக்கம்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
12/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 28ஆவது பாடல்.

பாடல் 28:
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

விளக்கம்:
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
11/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 27ஆவது பாடல்.

பாடல் 27:
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
11/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 26ஆவது பாடல்.

பாடல் 26:
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்:
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
09/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 25ஆவது பாடல்.

பாடல் 25:
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
08/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 24ஆவது பாடல்.

பாடல் 24:
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

விளக்கம்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
07/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 23ஆவது பாடல்.

பாடல் 23:
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.இன்று திருப்பாவையின் 2...
06/01/2025

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

நமது ஆண்டாள் திருமண மாலையில் தற்போது இலவசமாக வரன் பதிவு செய்யப்படுகிறது.

இன்று திருப்பாவையின் 22ஆவது பாடல்.

பாடல் 22:
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்:
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

ஆண்டாள் திருமண மாலை
(அனைத்து சமூகத்திற்கும்)
சுதர்சன் நகர் , மாடம்பாக்கம் ,சென்னை-600126.
செல் :9500252334/7904280819
உங்கள் திருமண மாலை , ஆண்டாள் தேடி கொடுத்த மாலை

Address

Madambakkam
Chennai
600126

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆண்டாள் திருமண மாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share