Minnal Siddha & Varma Clinic

Minnal Siddha & Varma Clinic Dr.M.Thaha Mohamed BSMS
Specialised Siddha & Varma Treatment
Healing From the Inside out

தீராத வேதனையும், திரும்பக் கிடைத்த வாழ்க்கையும் - ஓர் அர்டிகேரியா (Urticaria) மீட்புப் பதிவு!கடந்த மாதம் 26 வயதுடைய இளம்...
19/08/2026

தீராத வேதனையும், திரும்பக் கிடைத்த வாழ்க்கையும் - ஓர் அர்டிகேரியா (Urticaria) மீட்புப் பதிவு!

கடந்த மாதம் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் மிகுந்த கண்ணீரோடும், கடுமையான மன உளைச்சலுடனும் நம் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குக் கடந்த 3 மாதங்களாகத் தீவிரமான 'அர்டிகேரியா' (Urticaria - தோல் தடிப்பு மற்றும் அரிப்பு) பிரச்சனை.
தினமும் மாலை 5:30 மணி ஆனால் போதும், உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக வீங்கி, தாங்க முடியாத அரிப்பு ஏற்பட்டுவிடும். இந்த நரக வேதனை மறுநாள் காலை 5:30 முதல் 6:00 மணி வரை நீடிக்கும். கடந்த 3 மாதங்களாக அவருக்கு இரவில் ஒரு சொட்டுத் தூக்கம் கூட கிடையாது.
இந்த நோயினால் பல மருத்துவமனைகளுக்குச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றிருந்தார்.

அந்தத் தருணத்தில் தான், நம்மிடம் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த ஒரு பழைய நோயாளி மூலமாக, ஒரு சிறிய நம்பிக்கையோடு நம்மை அணுகினார்.
அவரது நாடியைப் பிடித்துப் பார்த்து, உடலின் தன்மைக்கேற்ப சரியான சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடங்கினோம்.

மாற்றம் வந்த தருணம்:

மருந்து எடுக்கத் தொடங்கிய வெறும் 10 நாட்களிலேயே அவருக்கு நிம்மதியான தூக்கம் திரும்பியது! உடலின் தடிப்புகள் 50%-க்கும் மேல் மளமளவெனக் குறைந்தன. இப்போது அந்தப் பெண் நன்றாக குணமாகி, மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார் .

சரியான மருத்துவமும், நம்பிக்கையும் இருந்தால் எப்பேர்ப்பட்ட நோயையும் வெல்லலாம்!

-Dr. M. தாஹா முஹமது BSMS.,
For Consultation:
+91 8072795775

👣 45 வருட கால் ஆணிப் பிரச்சனை... அறுவை சிகிச்சை இன்றி முழுமையான தீர்வு! ✨​கால் ஆணி வலியால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக...
10/05/2026

👣 45 வருட கால் ஆணிப் பிரச்சனை... அறுவை சிகிச்சை இன்றி முழுமையான தீர்வு! ✨
​கால் ஆணி வலியால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க சிரமப்படுகிறீர்களா?
​இந்தப் படத்தில் உள்ளவர் கடந்த 45 வருடங்களாக கால் ஆணி (Foot Corn) வலியால் சரியாக நடக்க முடியாமல், பெரும் அவதிக்குள்ளாகி வந்தார். வேறு இடங்களில் பரிசோதித்தபோது, இதற்கு அறுவை சிகிச்சை (Surgery) மட்டுமே ஒரே தீர்வு என்றும், அதன்பிறகு ஒரு மாதம் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
​ஆனால், நமது மின்னல் சித்தா & வர்ம கிளினிக்கில் (Minnal Siddha & Varma Clinic) அவருக்கு :
❌ எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி,
❌ ஒரு மாத கட்டாய ஓய்வு போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி,
இந்த 45 வருட கால் ஆணி பிரச்சனை முழுமையாக குணப்படுத்தப்பட்டுள்ளது!
​இப்போது அவர் எவ்வித வலியும் இன்றி, மிக இயல்பாக நடப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். (முன் மற்றும் பின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்).
​🌿 எங்கள் சிகிச்சையின் சிறப்பம்சங்கள்:
✅ அறுவை சிகிச்சை கிடையாது (No Surgery).
✅ 100% இயற்கையான சித்தா மற்றும் வர்ம சிகிச்சை.
✅ பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான முறை.
✅ நோயை வேரிலிருந்து குணமாக்கும் தீர்வு.
​உங்களுக்கும் கால் ஆணி பிரச்சனை உள்ளதா? அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி பயமுறுத்துகிறார்களா? கவலை வேண்டாம். இன்றே எங்களை அணுகுங்கள்!
​📞 முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:
+91 8072795775
+91 6369348720
​📍 முகவரி:
மின்னல் சித்தா & வர்ம கிளினிக்,
11, நேருஜி பஸ் ஸ்டாண்ட் காம்ப்ளக்ஸ்,
சின்னமனூர், தேனி மாவட்டம்.

25/02/2026

3 years of ganglion pain has been cured through 2 sittings of Varma therapy. Minnal siddha and Varma Clinic: +91 8072795775

15/02/2026

3 ஆண்டுகால முடக்கம்.... வர்ம சிகிச்சை மூலம் தீர்வு! ⚡️

எங்களது 'Minnal Siddha & Varma Clinic' திறப்பு விழா(07.02.2026) அன்று இரவு, ஒரு 34 வயது சகோதரி (Readymade Shop Owner) தனது கணவருடன் மிகுந்த வலியோடு எங்களை நாடி வந்தார்.

சவால் நிறைந்த தொடக்கம்:

3 ஆண்டுகாலத் துயரம்: அவரது வலது மணிக்கட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய Ganglion Cyst (நீர்க்கட்டி) இருந்துள்ளது.

முடங்கிய இயக்கம்: சிகிச்சைக்கு முன் அவரால் கையைச் சிறிதளவு மட்டுமே மேலே தூக்க முடிந்தது; ஆனால் மணிக்கட்டைச் சற்றும் கீழே கொண்டு செல்லவோ, மடக்கவோ முடியாதபடி கை முற்றிலும் முடங்கி இருந்தது (Restricted Motion).

கணவரின் சவால்: அவரது கணவர் மிகுந்த நம்பிக்கையற்ற நிலையில், "இதை உங்களால் ஆபரேஷன் இல்லாமல் வர்மத்தில் மட்டும் சரி செய்ய முடியுமா?" என்று ஒரு சவாலான தொனியிலேயே எங்களிடம் பேசினார்.

வர்ம சிகிச்சையின் மேஜிக்:
அவருக்குத் துல்லியமாக அளிக்கப்பட்ட Varma Therapy-யில் நிகழ்ந்த அதிசயம்:
முழுமையான இயக்கம்: 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அந்த மணிக்கட்டு, சிகிச்சைக்குப் பின் இயல்பாக நகரத் தொடங்கியது! இப்போது கையைத் தடையின்றி மேலேயும், கீழேயும், எல்லா திசைகளிலும் அவரால் அசைக்க முடிகிறது.
கட்டியின் நிலை: கையைச் சாதாரணமாக வைத்திருக்கும் போது வெளியே தெரியாத அளவுக்குக் கட்டி நன்றாகவே குறைந்துவிட்டது. கையை மடக்கும் போது மட்டும் இப்போது லேசாகத் தெரிகிறது; அதனையும் முழுமையாகக் கரைக்கத் தேவையான Internal Medicines இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மனமாற்றம்:
சிகிச்சையின் முடிவில் கண்ணெதிரே தெரிந்த அந்த உடனடி மாற்றத்தைக் கண்டு, முதலில் சவாலாகப் பேசிய அவரது கணவர் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போனார்!. ஒரு மருத்துவராக, நோயாளியின் நிம்மதியான அந்தப் புன்னகையே எனக்குக் கிடைத்த முதல் பெரும் வெற்றி.எல்லா புகழும் இறைவனுக்கே!!!

📍 இடம்: மின்னல் சித்த & வர்ம கிளினிக், சின்னமனூர், தேனி.
📞 தொடர்புக்கு: 8072795775
டாக்டர். M. தாஹா முகமது BSMS.,

Address

Nehruji New Bustand Complex
Chinnamanur
625515

Opening Hours

Monday 9:30am - 1:30pm
4:30pm - 9pm
Tuesday 9:30am - 1:30pm
4:30pm - 9:30pm
Wednesday 9:30am - 1:30pm
4:30pm - 9pm
Thursday 9:30am - 1:30pm
4:30pm - 9pm
Friday 9am - 12pm
4:30pm - 9pm
Saturday 10am - 1pm
5pm - 8:30pm
Sunday 10am - 1pm
5pm - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minnal Siddha & Varma Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share