Tamilnadu Physiotherapy Doctors Association ll

Tamilnadu Physiotherapy Doctors Association ll Run BY Tamilnadu Physiotherapy Doctors Association

22/07/2026

📢 Official Announcement from TPDA

Dear Physiotherapy Doctors,
Greetings from the Tamilnadu Physiotherapy Doctors Association (TPDA).

We are delighted to announce that our official website is currently under construction and will be launched on 08.09.2026, on the occasion of World Physiotherapy Day.

🌐 Website:
www.tamilnaduphysiodoctors.org

The website will serve as a one-stop platform for:
✅ Membership in Just a Few Clicks!
✅ New Membership Registration & Renewal
✅ Secure Online Payment
✅ Instant Digital Membership Certificate & ID Card
✅ Professional Updates & Government Orders
✅ News & Events
✅ Academic Resources
✅ Member Benefits & Services
✅ Career Opportunities and much more.
We request all Physiotherapy Doctors to share this announcement with your colleagues and support this initiative.
Together, let's build a stronger, united, and digitally connected Physiotherapy profession.

Arise • Lead • Shine

Dr. R. Rajesh Kanna (PT), MPT (Ortho)
General Secretary
Tamilnadu Physiotherapy Doctors Association (TPDA)

11/07/2026

📢 அனைவரும் வருக! அனைவரும் பயன்பெறுக!

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம், கௌதம் கிருஷ்ணன் பிசியோதெரபி கிளினிக் மற்றும் குமராபாளையம் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் இலவச பிசியோதெரபி சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாமிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

🗓 தேதி: 11.07.2026 & 12.07.2026 (சனி & ஞாயிறு)
🕘 நேரம்:காலை 9.30 மணி – மதியம் 1.30 மணி
📍 இடம்:கௌதம் கிருஷ்ணன் பிளியோதெரபி கிளினிக், பள்ளிபாளையம் ரோடு, குமராபாளையம்.

✅ மூட்டு வலி
✅ கழுத்து & முதுகு வலி
✅ தோள்பட்டை, கை, கால் வலி
✅ தசை பிரச்சினைகள்
✅ நரம்பு பாதிப்புகள்
✅ பக்கவாதம் (Stroke)
✅ தண்டுவட பாதிப்புகள்
✅ டிஸ்க் பிரச்சினைகள்
✅ குழந்தைகளின் நரம்பியல் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இலவச பிசியோதெரபி ஆலோசனை வழங்கப்படும்.

உங்கள் வலியை அலட்சியம் செய்யாதீர்கள்.
சரியான நேரத்தில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள்.

📞 முன்பதிவு & தகவலுக்கு: 90475 60120 | 98421 94886

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, அதிகமானோர் பயன்பெற உதவுங்கள்.

மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!இந்த இனிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பிசியோதெரபி மருத்துவர்கள், அலோபதி மருத்துவர்கள...
01/07/2026

மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!

இந்த இனிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பிசியோதெரபி மருத்துவர்கள், அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் அர்ப்பணிப்பு, கருணை, தொழில்முறை திறன் மற்றும் மனிதநேய சேவை மூலம் நம் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தி வருகிறீர்கள்.
மருத்துவத் துறை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மருத்துவரும் நோய்களைத் தடுப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும், உடல் செயல்பாடுகளை மீட்டெடுப்பதிலும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். தங்களின் அறிவு, மருத்துவ நிபுணத்துவம், அக்கறை மற்றும் தன்னலமற்ற சேவை மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நலனையும் விதைத்து வருகிறீர்கள்.
மனிதகுல நலனுக்கான தங்களின் உன்னதப் பணியை இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், சிறப்புடனும் தொடர்ந்து மேற்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமான எதிர்காலம் அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்திற்காக தாங்கள் ஆற்றும் அரிய சேவைக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்த்துக்களுடன்,
Dr.R.ராஜேஷ் கண்ணா.(PT)
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) – ஆழ்ந்த இரங்கல்மிகுந்த துயரத்துடனும் மனவேதனையுடனும், தமிழ்நாடு பிசியோ...
07/06/2026

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) – ஆழ்ந்த இரங்கல்

மிகுந்த துயரத்துடனும் மனவேதனையுடனும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் (TPDA) மதிப்பிற்குரிய உறுப்பினரான டாக்டர் அழகப்பன் தியாகராஜன் (PT), MPT (Sports), PhD அவர்கள் மாரடைப்பால் மலேஷியாவில் காலமான செய்தியை அறிந்தோம்.

டாக்டர் அழகப்பன் அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளர் (Academician), பிசியோதெரபி மருத்துவர் (Clinician), ஆராய்ச்சியாளர் (Researcher) மற்றும் விளையாட்டு பிசியோதெரபி துறையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முன்னோடியான பிசியோதெரபி மருத்துவர் ஆவார். தொழில்முறை மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் பிசியோதெரபி துறையின் முன்னேற்றம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

TPDA அமைப்பின் பல்வேறு பிசியோதெரபி வளர்ச்சி நிகழ்ச்சிகள், அறிவியல் கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று, தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து பலருக்கு ஊக்கமளித்தார். குறிப்பாக Sports Physiotherapy துறையில் அவரது அர்ப்பணிப்பும் சாதனைகளும் என்றும் நினைவுகூரப்படும்.

அவரது மறைவு பிசியோதெரபி கல்வி, மருத்துவப் பணி மற்றும் ஆராய்ச்சி உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற அறிவுசார் மரபும், தொழில்முறை சேவைகளும் வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பில் "கருப்பு தினம்" (Black Day) அனுசரிக்கப்படுகிறது. எனவே, அனைத்து TPDA உறுப்பினர்களும் தங்களது பணியிடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கருப்பு பட்டை அணிந்து, நமது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும், சக பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

🕯️ ஆழ்ந்த இரங்கலுடன்,

டாக்டர்.R.ராஜேஷ் கண்ணா (PT)
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

"உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் விதைத்த அறிவும், ஆற்றிய சேவையும், உருவாக்கிய தாக்கமும் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்."

TPDA - Suggestions on “Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026” - 29.05...
30/05/2026

TPDA - Suggestions on “Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026” - 29.05.2026

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பில் வெளியிடப்பட்ட
“Allied & Healthcare Professionals (Professional Conduct & Ethics) Draft Regulations 2026”* தொடர்பான விழிப்புணர்வு சுற்றறிக்கைக்கு ஆதரவு அளித்து, தங்களது மதிப்புமிக்க கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்த Draft Representation தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் ஈடுபட்ட தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க சிறப்பு குழு உறுப்பினர்களுக்கும் எங்களது பாராட்டுகளும் நன்றிகளும்.

உங்கள் ஒற்றுமை, பங்களிப்பு மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வே தமிழ்நாட்டில் பிசியோதெரபி துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் உரிமை பாதுகாப்பிற்கும் வலுவான அடித்தளமாக அமையும்.

பரிந்துரைகளை தெரிந்து கொள்ள 👇
https://drive.google.com/file/d/1ANDLU01UPMV0aAftiwD0LvVfNB7qAfTK/view?usp=drivesdk

ஒற்றுமையே வலிமை

Dr.ரா.ராஜேஸ் கண்ணா.(PT)
பொது செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

மாண்புமிகு டாக்டர். கே.ஜி. அருண்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்தமிழ்நாடு அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்...
17/05/2026

மாண்புமிகு டாக்டர். கே.ஜி. அருண்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA) சார்பாக இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் தலைமையில் தமிழகத்தின் சுகாதாரத் துறை மேலும் வலுப்பெற்று, தரமான மற்றும் சமத்துவமான மருத்துவ சேவைகள் மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் என நம்புகிறோம்.

குறிப்பாக, தடுப்பு சுகாதாரம் (Preventive Healthcare), மறுவாழ்வு மருத்துவம் (Rehabilitation Care), முதியோர் நலன், விளையாட்டு மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள் ஆகிய துறைகளில் பிசியோதெரபியின் பங்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும்,பிசியோதெரபி மருத்துவர்களின் நலன் மற்றும் தொழில்முறை உரிமைகள்,தரமான மருத்துவக் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள்,அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி சேவைகள் விரிவாக்கம்,கிராமப்புற மக்களுக்கும் எளிதில் மறுவாழ்வு சிகிச்சை கிடைக்கும் திட்டங்கள்,“அனைவருக்கும் பிசியோதெரபி” என்ற உயரிய இலக்கை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் தங்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைக்கும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

மக்கள் நலனையும், ஆரோக்கியமான தமிழகத்தையும் உருவாக்கும் தங்களின் பணிகள் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டாக்டர்.ராஜேஷ் கண்ணா.(பி.ம)
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் (TPDA)

இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதிரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர...
10/05/2026

இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள
திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள்
சார்பாக
மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தாங்கள் ஏற்றுள்ள இந்த உயரிய பொறுப்பில், தமிழ்நாடு சமூக நீதி, நல்லாட்சி, இளைஞர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றப் பாதையை அடையும் என நம்புகிறோம்.

குறிப்பாக, மருத்துவ துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவம்,பிசியோதெரபி மருத்துவர்களின் நலன், தொழில்முறை உரிமைகள், தரமான மருத்துவ சேவைகள் மற்றும் “அனைவருக்கும் பிசியோதெரபி” என்ற உயரிய இலக்கை செயல்படுத்துவதற்கான அரசின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழக மக்களின் ஆரோக்கியமான மற்றும் செயல்திறன் மிக்க வாழ்க்கைக்காக தங்களின் தலைமையில் சுகாதாரத் துறை மேலும் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Dr.ரா.ராஜேஸ் கண்ணா.(PT)
பொது செயலாளர்,
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் - TPDA

Address

Tamilnadu Physiotherapy Doctors Association, B/39 Hudco Colony, Gandhi Managar, Peelamedu, Coimbatore/04
Coimbatore
641004

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Physiotherapy Doctors Association ll posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamilnadu Physiotherapy Doctors Association ll:

Shortcuts

Share