வர்மக்கலை

வர்மக்கலை பாரம்பரியத்தை பின்பற்றுவோம்
(341)

நமது உடம்பில் எலும்பு, தசைகள், நரம்பு, இரத்தக்குளாய்கள் இரத்த தமனிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்து செயல்படும். இவைகளில் குத்து, அடிபட்டால் உடல் மழுவதும் அல்லது அடிபட்ட பகுதி அல்லது முழுவதும் பாதிக்கப்பட்டு நிலைமையே மாற்றி அமையவும், இது நோய் நிலைக்குத் தக்கவாறு உடல்நிலை மாறும். அதிக சீக்கிரமாகவும், நாழிகைகணக்கு முதல், நாள்கள், மாதங்கள், வருடங்கள், ஆகியகாலங்களில் பாதிக்கப்படும். இவைகளை உடனுக

்குடன் சரிசெய்வது சாலச்சிறந்தது. வர்ம நிலைகளில் நோய் ஏற்படும்போது சிறு வெளிக்காயம் இல்லாமலும், சாதாரண வலி முதல் அசாத்தியவலி வரையும், சாகும் நிலையிலும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

பிராணன், காலம், ஜீவன், மர்மம் என்பன. ஆதிகாலத்தில் மனிதன் தனது தற்காப்பிற்கும் திரன், கொடிய மிருகங்களிடத்திலிருந்து தப்பிற்கவும், அதை உணவிற்காகவும் அடித்துக் கொன்றும், உணவிற்காக எளிய முறையில் வேட்டையாடவும், ஒரு நுட்பத்தை கண்டும், மனித எதிரிகளிடத்தில் இருந்து உயிர் தப்பிக்க எதிரிகளை திக்கு முக்காடவும், வர்ம முறைகளை கண்டு எதிரிகளையும், மிருகங்களையும் தாக்கியும், தப்பித்தும் மிருகங்களை வேட்டையாடி உணவாக சாப்பிட்டும் வந்தனர். பின்பு அந்த முறைகளை வைத்து அரசர்கள் படைகளின் பயிற்சிக்கும் வர்ம அடி பட்டவருக்கு வைத்திய முறைகளை கண்டு பிடித்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியம் செய்தும், அடக்கி செயலிழக்கச் செய்தும், உள்ளனர்.. இந்த முறைகளை முறைப்படுத்தி, போரிடும் முறைகளையும் தனிப்பட்ட மனிதன் தற்காப்பிற்காகவும், அரசர்கள் தன்வசம் கைக்கு அடக்கமாக வைத்து இக்கலையைப் பாது காத்துவந்தனர். பின்பு இக்கலை சீனா, சென்று குங்பூ, என்றும், கராத்தே என்றும். புதுமைப்படுத்தி புத்த பிச்சுகள் கைவசம் வைத்து அதற்கான வைத்திய முறைகளை அவர்கள் தெளிவு செய்து அக்கு பிரஷர் என்றும், அக்கு பஞ்சர் என்றும் கண்டு பிடித்து வைத்துக் கொண்டனர். நமது நாட்டில் வர்ம தாக்குதலுக்கு சிலம்பம், களரி, வர்ம புள்ளிகளை வைத்து தாக்குதல் நடத்திவந்தனர். வர்ம புள்ளிகளை மாற்றி அமைத்து பாதித்தவரை சிகிச்சை செய்து வந்தனர்

08/09/2026
வர்மக்கலை "உடலுயிர் பரவுஞ் சக்தி ஓர்ந்தவோர் தாக்கல் தன்னால் பரவிடும் விரவெ ழுச்சிபற்றியே மிகுதி யாக்கல் உடலுயிர் நாடி சு...
04/09/2026

வர்மக்கலை

"உடலுயிர் பரவுஞ் சக்தி
ஓர்ந்தவோர் தாக்கல் தன்னால்
பரவிடும் விரவெ ழுச்சி
பற்றியே மிகுதி யாக்கல்
உடலுயிர் நாடி சுட்டின்
உயிர்த்தொழி லென்றும் பன்னா
உடலுயிர் மூச்சின் வேகம்
ஊர்ந்தேறு மிடங்கள் வர்மம்".

பேசிகள் எனப்பெறும் உடல் தசைகள்
நரம்புகள்
எலும்புகள்
உட்துளைகளாகிய தசிரங்கள்
பொருத்துக்கள் எனப்பெறும் மூட்டுகள்
விசிகள் எனப்பெறும் நரம்பு முடிச்சுகள்
ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து நிற்கும் இடங்கள் பல. எலும்பும் நரம்பும் தசைகளால் மூடப்பெற்று உடல் முழுமையும் பரவியுள்ளவையாகும். இவை உடலுக்குரிய தாதுப்பொருள்களுள், நீர்த்தவடிவமுடைய (திரவ வடிவம்) இரசமும் இரத்தமும் உடலில் பரவுவதற்கான உட்துளைகளாகிய தசிரங்களைப் பெற்றவை. எலும்புகளும் எலும்புகளாலாகிய மூட்டுகளும் மிகக் கடினமானவை. அந்தக் கடினப்பொருள்களோடு நரம்புகளும் - நரம்பு முடிச்சுகளும் பிணைந்திருக்கும் மைய இடத்தில் சிறு அடிபட்டாலும் கீழே கடினப்பொருள் தாங்கியிருப்பதால் நரம்புகள் நசுங்கி. இரத்தநாளங்களைத் தாக்கும். அதனால் இரத்த ஓட்டம் எளிதாகப் பாதிக்கப்பட்டுவிடும். உடனே வலியும் மயக்கமுமாகிய பல வேறுபாடுகள் தோன்றும் அடி பலமாயின் உயிரைப் பாதிக்கும் நிலைமையும் தோன்றக்கூடும். எனவே அந்த நரம்பு மையங்கள் (Nurve centres) உயிர் நிலைகள் (Vital points) எனப்படுகின்றன.
-வர்ம சூத்திரம்

நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755

அடியேனுடைய இருபதாவது திருமணநாள்
31/08/2026

அடியேனுடைய இருபதாவது திருமணநாள்

Address

Aadhisakthi Varmakalai Gopalakrishnan Clinic
Coimbatore
641010

Opening Hours

Monday 10am - 1pm
Tuesday 10am - 1pm
Wednesday 10am - 1pm
Thursday 10am - 1pm
Friday 10am - 1pm

Telephone

+919894285755

Alerts

Be the first to know and let us send you an email when வர்மக்கலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to வர்மக்கலை:

Shortcuts

Share