15/09/2026
ஈரோடு சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட நவீன லரிங்கோலோஜிஸ்ட் கிளீனிக் துவக்க விழா நடைபெற்றது. டாக்டர் கவின் சுதா மருத்துவமனையின் குரல்வளை மற்றும் தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர் (லாரின்ஸ்லஜிஸ்ட்) இப்புதிய மையத்தின் சிறப்புக்கள் குறித்து விளக்கினார். சுதா மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் தலைமை வகித்தார். ஈரோடு பைரவர் பீடத்தின் ஸ்ரீவிஜய் சுவாமிஜி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
முதன்மை சிறப்பு அழைப்பாளராக ஈரோடு பி.வி.பி., பள்ளி மற்றும் சி.எஸ்.அகாடமி தாளாளரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வேளாளர் எஜுகேஷனல் டிரஸ்ட் தாளாளர் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர். எம்.பழனிசாமி கலந்து கொண்டனர்.