Mahayogam - மஹாயோகம்

Mahayogam - மஹாயோகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahayogam - மஹாயோகம், Medical and health, Kanchipuram.

மகிழ்வுடன் வாழ்க! ஜெய் மகரிஷி!✨️🙏 உடல் மன ஆத்ம நலன் காக்கும் சித்தர் பாரம்பரிய ஆன்மீக வழிமுறை!🪷🔥
Follow us on Twitter https://twitter.com/MahayogamF

Mahayogam YouTube channel
https://www.youtube.com/channel/UCQ9gHibLarhAwdacZE3GDMg மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒளிதேகம் அடைந்த மகான்களின் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகள்....

இந்த மகா சித்த புர

ுஷர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்கள் இலங்கை கதிர்காமதிலும், திருகேஷ்வரத்திலும்., இன்றும் உள்ளன.

அனைவரும் இந்த மரணத்தை வெல்லும் கலையை பயின்று "மகிழ்வுடன் வாழ்வோமாக"...

ஒளிதேகம்:

ஒளிதேகம் என்னும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்துவம் பொருந்திய மண்ணுயிர் தொழும் மகான் மகாமகரிஷிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்..

இன்று உலகிலுள்ள அனைத்து நாகரீகங்களுக்கும் முன்னோடி இந்தியா என்பது அனைவரும் அறிந்த உண்மையே.அதன் ரகசியம் என்னவென்றால் அது ஆன்மீகம் என்றே சொல்லமுடியும்.இதை ஆணித்தரமாக இந்த உலகிற்கு முதன்முறையாக இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறியவர்,வீரத்துறவி, விவேகானந்தர் தான்.

மிகப்பெரிய ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்திய சித்தர் பாரம்பரியம் குறிப்பாக ஒருங்கினைந்த தமிழ்நாட்டிலேயே (தற்பொழுது ஆந்திரா, கேரளா கர்நாடகா) தழைத்தோங்கியிருந்தது. அதன் தலைப்பெரும் தலைமகன்தான் முதல் மரனமில்லா பெருவாழ்வு என்ற இறவா பெருநிலையை எய்திய கந்தன் ஆவார்.

இன்று உலகில் 80 சதவீதமான மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியது என மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.அத்தகைய சிறப்புமிக்க தமிழின் கடவுள்தான் கந்தன்.அவரின் மிகப்பிரதானமான சீடர் நமது ஆதி குரு அகத்தியர் ஆவார்.தமிழின் இலக்கணத்தையும் புனிதத்தையும் உலகுக்கு உணர்த்தியவர்.

அகத்தியரின் ஆன்மீகம், மற்றும் உலக பணிகளில் அவருடன் நெருங்கியிருந்த பல சீடர்களில் மிக முக்கியமாக கருதப்படுபவர் மூலகுரு போகர் ஆவார். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆன்மீகம் , மருத்துவம் போன்றவற்றை சிறப்புர செய்தவர்.இவர் தொட்டு சித்தர் பாரம்பரியம் என்பது முழுமையாக இம்மண்ணில் தழைத்தோங்கியது.

போகரின் குரு பாரம்பரியத்தில் அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் பிராதானமான நான்கு சீடர்கள் அவர் நிலைக்கு உயர்ந்திருந்தார்கள்.அதாவது ”மரணமில்லாப் பெருவாழ்வை” அடைந்தார்கள்.

அவர்கள் புலிப்பாணி சித்தர், இராமத்தேவர், மஹா அவதாரம் பாபாஜி மற்றும் நமது பரம குரு மஹாமகரிஷி ஆவார்.

இதில் புலிப்பாணி சித்தர் போகருடன் சீனப்பயணம் மேற்கொண்டு அங்கே லாவோட்-சூ, லீ-சுவாக மாபெரும் யோகத் தத்துவத்தை நிறுவினார்கள்.அடுத்து இராமத்தேவர்,யாகோபு முனிவர் என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நமது பாரம்பரியத்தை நிலைநாட்டியவர்.அவரைத் தொடர்ந்து மஹா அவதாரம் பாபாஜி,அகத்தியரால் கிரியா யோகத்தின் உயர்நிலை தீட்சயை பெற்று வடஇந்தியாவிற்கு சென்று அங்கிருந்து தன் குரு பாரம்பரியத்தையும்,கிரியா யோகத்தின் மகிமையையும் அதன் மேன்மையையும் இந்த உலகிற்கு தன் சீடர்கள் மூலம் வழங்கி கொண்டிருப்பவர்.

இதில் போகருடனேயே வெகுகாலம் வாழ்ந்தவர் தான் நமது பரமகுரு முதலாம் மஹாமகரிஷி.அவரின் சீடர் இரண்டாம் மஹாமகரிஷி.அவரது இயற்பெயர் ராக அரவிந்த ரிஷி.இவர் ஆச்சாரமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்து ஆன்மீக ரகசியத்தை பாமரனுக்கும் உணர்த்திய மகான் ஸ்ரீ ராகவேந்திரர். மரணமில்லா பெருவாழ்வை அடைவதற்காக எடுத்த பிறப்பு. முதலாம் மஹாமகரிஷிக்கும் இரண்டாம் மஹாமகரிஷிக்கும் நூற்றாண்டுகால இடைவெளி உண்டு.நேரடி குரு சீடர் என்றில்லாமல் சூட்சுமத்தில் அமைந்திருந்தது.

அவரின் நேரடி சீடர்தான் சுமார் 320 ஆண்டுகளாக இறவா நிலையை அடைந்து இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் மஹாமகரிஷி. இவரின் இயர்பெயர் கூணாந்த வர்மா. இலங்கை,கதிர்காமம், யாழ்ப்பாணம், திரிகோணமலை,மன்னார், திருக்கேதீஸ்வரம் , பேசாலை போன்ற இடங்களில் ஆன்மீக அதிசயங்களை நிகழ்த்திய மஹாமகரிஷி இறுதியாக திருக்கேதீஸ்வரத்தில் சீர்மிகு சிவாலத்தின் அருகில் உள்ள ஆலமரத்தடியில்
கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள், மாலை 5.40 மணியளவில் சில சீடர்கள் முன்னிலையில் தன்னுடைய ஊன் உடலை ஒளி உடலாக மாற்றி சொரூப சமாதி நிலையை அடந்தார்.
டிசம்பர் 12ஆம் நாள் கார்த்திகை, பெளர்ணமி அன்று அரூப நிலையை அடைந்தார். நாம் அனைவரும் அறிந்த வகையில் வள்ளலார் அந்த நிலையை அதாவது மரணமில்லா பெருவாழ்வு அடந்தவர்களில் குறிப்பட்த்தக்கவராவார்.

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்! 🙏✨️தீவிரமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நடுவே தன் அன்பு சீடர்களுக்காக தன் பொன்னான நே...
03/07/2026

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்! 🙏✨️

தீவிரமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நடுவே தன் அன்பு சீடர்களுக்காக தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த அருளுரையை வழங்கியிருக்கிறார். 😇🙏🥹

அவர் வார்த்தைகளை வாழ்க்கையாக்கி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவோம்.🤩

குருதேவர் மகரிஷிஜி Dr. K. P. குணாநீதி அவர்கள் மாதம்தோறும் பௌர்ணமி அன்று மஹாயோகத்தின் தலைமையிடமான காஞ்சிபுரத்தில் சிறப்பு ஆசியும் அருளுரையும் வழங்குவார்கள்.

ஆரம்ப நிலை பயிற்சியான சக்சஸ் சித்தி பயிற்சியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இதில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

🔴பயிற்சி விபரங்கள் அறிய மேசேஜ் செய்யவும்.

🏃‍♀️Follow us Instagram, Facebook, X and YouTube.
To know more about us visit our website www.mahayogam.org, www.mahayogam.org.au

Possessiveness அன்பு இல்லை! அது சுயநலம்!
17/05/2026

Possessiveness அன்பு இல்லை!
அது சுயநலம்!

மகிழ்வுடன் வாழ்க!🙏
14/05/2026

மகிழ்வுடன் வாழ்க!🙏

13/05/2026

நோய்கள் அனைத்தும் துன்பத்தின் விளைவு!

துன்பங்கள் அனைத்தும் மனதின் மாயை!

-மகரிஷிஜி Dr. K. P. குணாநீதி

இன்பம் - மகிழ்ச்சி - ஆனந்தம் சுயநலத்தில் கிடைப்பது இன்பம். இது விரைவில் மறைந்துவிடும்.தன்னலமற்ற செயல்களின் விளைவு மகிழ்ச...
11/05/2026

இன்பம் - மகிழ்ச்சி - ஆனந்தம்

சுயநலத்தில் கிடைப்பது இன்பம்.
இது விரைவில் மறைந்துவிடும்.

தன்னலமற்ற செயல்களின் விளைவு மகிழ்ச்சி.
இதை தினமும் நாம் மிக எளிதாக உருவாக்கலாம்.

துன்பங்களை வென்ற நிலையே ஆனந்தம்.
தன்னுள்ளே தான் மலர்ந்து இருப்பது மீள முடியாத பேரானந்தம்.

மகிழ்வுடன் வாழ்க!🙏
ஜெய் மகரிஷி!🔥

இலங்கையில் உள்ள பாலாவி ஆற்றில் தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். “போதும் வாடா போவோம்” என்கிறார்க...
01/05/2026

இலங்கையில் உள்ள பாலாவி ஆற்றில் தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் அந்த சிறுவன்.
“போதும் வாடா போவோம்” என்கிறார்கள் நண்பர்கள். “நான் குளிச்சிட்டு வரன், நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு தனியாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தான்.

திடீரென தான் குளத்தில் இருக்கும் கிணற்றுக்குள் முங்குவதை உணர்கிறான் அவன். கறையேற வழியில்லை, மரணம் தான் என்று தெரிந்துவிட்டது. உயிர் நழுவிக்கொண்டிக்கும் வேளையில் சட்டென ஒரு கரம் வந்து தன் முடியைப்பிடித்து தூக்குவதை காண்கிறான். தன்னை காத்த அந்த தெய்வக் கரம் யாருடையது என்பது புரிந்துவிட்டது. அன்று உயிர் காத்தவரே இன்றும் வந்திருக்கிறார் என்று உணர்ந்து கொண்டான். கண்கள் சொருக, அரை மயக்கத்தில், முதன் முதலாக அழைக்கிறான் "தாத்தா..."

மயக்கம் தெளிந்து பார்க்கும் போது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் தாத்தா. மிகவும் சோர்வாக இருந்தது சிறுவனுக்கு.
நான் சொல்வதை திருப்பி சொல், உனக்கு இனி எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லி ஏதோ காதில் உறைக்கிறார்.

"இதை யாரிடமும் சொல்லக்கூடாது"

“சொன்னால்?”

“இனி உன்னை பார்க்க நான் வரமாட்டேன்”

“நான் யாருக்கும் சொல்லமாட்டேன்”

கண்களை மூடி அவர் உபதேசித்தப்படி தியானிக்கிறான் சிறுவன். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த போது அவர் அங்கு இல்லை.

ஆனால் அந்த நாள் முதல் அந்த சிறுவனின் ஒவ்வொரு நாளிலும் அவரே நிறைந்திருக்கிறார்.

அன்று அந்த சிறுவன் சீடன் ஆனான்.

இன்று அந்த சிறுவனே மஹாயோகத்தின் நிறுவனரான மகரிஷிஜி Dr. K. P. குணாநீதி அவர்கள். காப்பாற்றிய பெரியவர் தான் நம் அன்பு தாத்தா, பரமகுரு மஹாமகரிஷி அவர்கள்.

குணாநீதி மகரிஷி தன் மகா குருவிடம் தீக்ஷைப்பெற்று சீடனான அற்புத நாள் இன்று - மே 1.

டிசம்பர் 8 - பரமகுரு மஹாமகரிஷி அவர்கள் சொரூப சமாதி அடைந்த நாள்,  குருதேவர், மெய்ஞானி Dr. K. P. குணாநீதி மகரிஷி அவர்களின்...
14/12/2025

டிசம்பர் 8 - பரமகுரு மஹாமகரிஷி அவர்கள் சொரூப சமாதி அடைந்த நாள், குருதேவர், மெய்ஞானி Dr. K. P. குணாநீதி மகரிஷி அவர்களின் பிறந்த நாள்.

தமிழகம் எங்கும் இந்த அற்புத நாளை போற்றி, இந்த மகான்களின் அருள் பெறும் விதமாக அருட்பெருஞ்ஜோதி யாகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட யாகத்தில் மகாயோக அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பரமகுருவின் ஆசியும் அருளும் பெற்றுச்சென்றனர்.

மகிழ்வுடன் வாழ்க!🙏
ஜெய் மகரிஷி!🔥

காஞ்சியில் டிசம்பர் 5 முதல் 7 வரை இலவச யோகா பயிற்சி🔥
04/12/2025

காஞ்சியில் டிசம்பர் 5 முதல் 7 வரை இலவச யோகா பயிற்சி🔥

அன்பான மஹாயோகிகளுக்கு குருதேவரின் அறிவிப்பு!இனி “ஜெய் மகரிஷி, மகிழ்வுடன் வாழ்க” என்று சொல்வதற்கு பதில் ✨மகிழ்வுடன் வாழ்க...
03/12/2025

அன்பான மஹாயோகிகளுக்கு குருதேவரின் அறிவிப்பு!

இனி “ஜெய் மகரிஷி, மகிழ்வுடன் வாழ்க” என்று சொல்வதற்கு பதில்
✨மகிழ்வுடன் வாழ்க, ஜெய் மகரிஷி✨
என்று சொல்லும் படி குருதேவர் அறிவித்துள்ளார்கள்.

‘மகிழ்வுடன் வாழ்க‘ என்பது ‘ஜெய் மகரிஷி’ என்பதை விட சக்தி மிகுந்த வாசகமாகும். வாழ்த்துவோரையும், வாழ்த்தப்படுவோரையும் மேன்மை அடைய வைக்கும் மந்திர சொற்களாகும்.

இனி ‘மகிழ்வுடன் வாழ்க’ என்பதே மஹாயோகிகளின் அடையாளமாகட்டும்!
மஹாயோகிகள் செல்லும் இடமெல்லாம் ‘மகிழ்வுடன் வாழ்க’ என்னும் வாழ்த்து முழங்கட்டும்!

மகிழ்வுடன் வாழ்க!🙏🏼
ஜெய் மகரிஷி!🔥

காஞ்சி மக்களுக்கு மஹாயோகத்தின் இலவச பயிற்சி! இன்றே பதிவு செய்யுங்கள்!
03/12/2025

காஞ்சி மக்களுக்கு மஹாயோகத்தின் இலவச பயிற்சி! இன்றே பதிவு செய்யுங்கள்!

Address

Kanchipuram

Alerts

Be the first to know and let us send you an email when Mahayogam - மஹாயோகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share