இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

  • Home
  • India
  • Karungalpatti
  • இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா

இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா இயற்கை உடன் மருத்துவ முறையில் சேர்ந்து செயல்படுவோம்
SATHEESH
� Reflexology, Yoga & Naturopathy � 8

*பித்தப்பையில் நோய் மற்றும்**பித்தப்பை கற்கள்**ஏற்பட என்னதான் காரணம்**என்பது தெரியுமா…**பித்தப்பை கல் நீங்க**வீட்டு வைத்...
02/09/2026

*பித்தப்பையில் நோய் மற்றும்*
*பித்தப்பை கற்கள்*
*ஏற்பட என்னதான் காரணம்*
*என்பது தெரியுமா…*
*பித்தப்பை கல் நீங்க*
*வீட்டு வைத்தியம்…*

மலச்சிக்கலே இந்த நோய்க்கான முதல் காரணம்

பொருமையாக தொடர்ந்து படியுங்கள்

நமது கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு பாலமாக செயல்படுவது தான் பித்தப்பை. இந்த பித்தப்பை தான் செரிமான அமைப்பின் மிக முக்கியமான பகுதியாகும். பித்தப்பை என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய சாக் (இது கல்லீரலின் கீழ் உள்ளது). இது பார்ப்பதற்கு ஒரு சிறிய பேரிக்காய் போன்று காணப்படும்.

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக……

8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு சிறு உறுப்பு.

நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.


பித்தப்பையின் நலன் எவ்வளவு அவசியம் என உங்களுக்கு தெரியுமா

பித்தப்பை இல்லாமல் மனிதர்கள் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பித்தப்பையில் கற்கள் உண்டாகி பிரச்சனை வந்தால் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றிவிடுவார்கள்.
https://chat.whatsapp.com/FIPHs2vRRBL0IdLqn8Wt5F
பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கும் உடல் உறுப்பாகும்.
இது உடலில் கொழுப்பை அதிகம் அண்டாமல் பாதுகாக்கவும், கொழுப்பு நிறைந்த உணவை செரிமானம் செய்யவும் உதவுகிறது. மேலும், உணவு செரிக்கவும் பித்தப்பை உதவுகிறது.

பித்தப்பையில் உண்டாகும் மிகப்பெரிய பிரச்சனை பித்தப்பை கற்கள்.பித்த நீரில் உண்டாகும் தாக்கத்தால் (கொலஸ்ட்ரால், எலக்ட்ரோலைட்ஸ்) பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன.

ஆண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பித்தப்பை பிரச்சனைகள் அதிகமாக உண்டாகிறது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

கர்ப்பம், ஈஸ்ட்ரோஜன், உடல் பருமன், பரம்பரை கூறு, மரபணு என பலவன பெண்கள் மத்தியில் பித்தப்பை பிரச்சனைகள் அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன.

பித்தப்பை கற்கள் உண்டாவதில் என்ன பிரச்சனை எனில், அது உண்டானதற்கான எந்த அறிகுறியும் பெரிதாக வெளிப்படுத்தாது.
மருத்துவ பரிசோதனை செய்து மட்டுமே கண்டறிய முடியும்.

எந்த காரணமும் இன்றி உங்களுக்கு அடிக்கடி அதிகமாக வயிறு வலிப்பது, இத்துடன் செரிமான கோளாறுகள் உண்டாகிறது எனில், உங்களுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டறிந்துக் கொள்ள முடியும்.

எண்ணெய் உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மேலும், அன்றாட உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வது இந்த பித்தப்பை கற்கள் பிரச்சனை உண்டாகாமல் தடுக்க உதவும்.

பித்தப்பை புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது தான். ஆனால், இது உண்டானால் மிகவும் அபாயமானது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பித்தப்பையின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த பித்தப்பையின் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அமைகிறது. எனவே தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதைப் பற்றி கீழே காணலாம்.

பித்த நீர்க்கட்டி..

இந்த பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன. இந்த பித்தக்கற்கள் சில நேரங்களில் நமக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் முதுகுவலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பித்தப்பை கற்களை சில நேரங்களில் மருந்துகளால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

பித்தப்பை அழற்சி..

கோலிசிஸ்டிடிஸ் என்பது பித்தப்பை அழற்சி எனப்படுகிறது. நம் பித்தப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இது பித்தப்பை நோய்த் தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. கோலிசிஸ்டிடிஸ் கடுமையான வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நோய்த் தொற்று நீண்ட காலமாக நீடித்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.

பித்தப்பை புற்றுநோய்..

பித்தப்பை புற்றுநோயும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் பித்தப்பை கற்கள் போன்று இருந்தாலும், முதுகு மற்றும் அடி வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகும். அறிகுறிகள் தாமதமாக இருந்தால் பிறகு சிகிச்சை செய்வது கடினமாகி விடும்.

https://chat.whatsapp.com/IJqeVv0Tbem1OhHfuhi7bI
பித்தப்பை கணைய அழற்சி..
இது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும். செரிமான நொதிகள் சிறுகுடலுக்குள் வெளியேறி செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு கணையத்தை சேதப்படுத்தத் தொடங்குகின்றன. பித்தப்பை கணைய அழற்சி குடல் குழாய்களை அடைக்கிறது. கணையத்தை இரத்த ஓட்டம் இல்லாமல் உலர்த்தி விடுகிறது. இது கணையத்தின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது (இது ஒரு தீவிர நிலை).

இந்த மாதிரியான உணவுகள் வேண்டாம்..

பேக்கிங் உணவுகள்..

நீங்கள் பித்தப்பை பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மஃபின்கள், குக்கீகள், கப் கேக்குகள் மற்றும் பிற வேக வைத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிகளவு டிரான்ஸ் கொழுப்புகள் பித்தப்பையில் கொழுப்பை சரியாக செயலாக்க இயலாமல் வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை பிரச்சினை இருப்பவர்கள் கொழுப்பு குறைந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

காபி..

பித்தப்பை சுருங்கிப் போவதற்கு காபி ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்..

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை உண்ணும் போது அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இனிப்புகள் வேண்டாம்..

அதிக சர்க்கரை இனிப்புகளை எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கடினமாக்குகிறது. இதனால் இதய நோய்கள், சிறுநீர்ப்பையில் கற்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இனிப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.

பித்தப்பைகற்களை கவனிக்காமல் விட்டால்……

பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்து விடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்.

சிலருக்கு இதனால் கணைய அழற்சி ஏற்பட்டு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும்.

இதர அறிகுறிகள்

காய்ச்சல்,

விட்டுவிட்டு வலி,

அதிவேக இதயத் துடிப்பு

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது),

தோலில் அரிப்பு,

வயிற்றுப்போக்கு

வாந்தி,

தலைவலி

குமட்டல்,

குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம்

குழப்பம்,

பசி இன்மை,

அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல் ,

வலது தோள்பட்டையில் வலி

பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும்.

மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம்.

வலது நெஞ்சில் வலி ,

நேர் பின்னே முதுகில் வலி,

வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்.

வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி,

உடல் எடை குறைவு,

போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.

தப்பிக்க...

பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால், வாய்ப்பைக் குறைக்க முடியும்.

உணவு…………

தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

எடை குறைக்க அவசரம் வேண்டாம்

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும் போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வாரத்துக்கு அரை முதல் ஒரு கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது.

பொதுவாக நம் தவறான வாழ்க்கை முறையினால்……

எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவு மண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள்.

குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில்…

அஜீரண கோளறு,

அல்சர்,

மஞ்சள் காமாலை நோய்

அசைவ உணவுகள் செரிமானம் ஆகாது.

போன்ற பல பிரச்சனைகள்
வியாதிகள் வரும்.

பித்தப்பைகல் நீங்க
வீட்டு வைத்தியம்…
500மி.லி. விளக்கெண்ணெயில் 200கிராம் பூண்டை பேஸ்ட் ஆக போட்டு அத்துடன் 30கிராம் இந்துப்பு,20கிராம் பெருங்காயம் பொடித்துப் போட்டு நன்கு கொதிக்க விடவும் அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிண்டிவரவும் ஒரு பக்குவத்தில் எண்ணெய் தனியாக பிரிந்து கீழ் உள்ள பேஸ்ட் மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிவைத்து நன்கு ஆறியதும் எண்ணையை மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மண்டியை தூர எறிந்து விடவும். மேற்கண்ட எண்ணையை தினமும் இரவு உணவுக்குப் பின் 2ஸ்பூன்
(தேக வலிவையறிந்து) சாப்பிட்டு வர காலையில் எந்த சிரமமும் இன்றி மலம்கழியும். இதை 2 மாதம் தொடர்ந்து அருந்தினால் பித்தப்பை கல் கரைந்து விடும்.

முருங்கைக்கீரையை அடிக்கடி உப்பின்றி சமைத்து சாப்பிட்டு வர கரையும்.

பூலாப்பூ எனும் சமூலத்துடன் ( பூலாப்பூவின் அனைத்து பாகங்களும்.) முருங்கைக்கீரை சம அளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர பெரிய கற்களும் கரைந்து விடும். மருந்து சாப்பிட்டு முடியும் வரை மது, மாமிசம் கூடாது. உப்பைத் தவிர்த்தால் கல் சீக்கிரம் கரையும்.

"யானை நெருஞ்சிமுள் " இச்செடியின் இலையை கழுவி விட்டு குடிநீரீல் முக்கிஎடுத்தால் நீர் வழுவழுப்பாக மாறும் இந்நீரை தினமும் வெறும் வயிற்றில்பருகி வர ஒரே மாதத்தில் நாட்பட்ட கற்ககளும் வெளியேறும்.

தினமும் 300 Ml அளவு அருந்தினால் போதும். பக்க விளைவுகள் எதுவுமில்லை. இச்செடி வரண்ட பிரதேசங்களில் வளரும். மலை அடிவாரத்திலும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இதன் காய் யானை தலை வடிவில் இருப்பதால் இப்பெயர் இச்செடிக்கு.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும். அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

சிறுகீரை தீநீர் 48 நாள் காலையில் குடிக்கவும்.

வாழைத்தண்டு சாறுடன் கொள்ளு சேர்த்து குடிக்கவும்.

நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

ஆப்பிள், பேரிக்காய்,ஆரஞ்சு போன்ற உணவுகளில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு.

வெஜிடபிள் சலாட் ஆக முள்ளங்கி, பீட்ரூட் ஆகியன தினமும் இரண்டு மூன்று துண்டுகளை சாப்பிடுவதும் இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு .

வெந்ததை மட்டும் சாப்பிடாமல் தினமும் ஒரு கப் பழக்கலவை மற்றும் காய்கலவை சாப்பிட இந்த மாதிரி நோய்கள் அண்டாமல் இருக்க வாய்ப்பு.

வாரம் ஒரு முறை முள்ளங்கி சாறெடுத்து 25 மி.லி. குடித்து வர நோய் கடுமையிலிருந்து சற்றே தீர்வு கிடைக்கலாம்.

நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.

வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

வலி இல்லாத காலத்தில் நிலவேம்பு சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.

கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.
கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.

நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். நினைவில் கொள்ள வேண்டியவை...

உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும்.

* அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/IJqeVv0Tbem1OhHfuhi7bI

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram*
https://t.me/+UabSJmdDN9wwYzFl

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici
அனுப்பவும்.

WhatsApp Group Invite

*இருதய அடைப்பு* எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!ஆம் காய்கறி வைத்திய முறையிலின்று...
30/08/2026

*இருதய அடைப்பு*

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

ஆம் காய்கறி வைத்திய முறையிலின்று அனைத்து நோய்களி லிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.

மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். ரத்த அழுத்தமும் சரி இதயத்துடிப்பும் சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி

தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாக வெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில் வரும்

*வாழைக்காயின் ரகசியம்;-*

இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் ( துவர்ப்புச் சத்து )
மிக அத்தியாவசிய மாகிறது.

இந்த பொட்டாசியம் கொட்டிக் கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ் வடிவிலோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது.

வாழைக்காயில் நார்ச்சத்தியக்கம் என்பதாலும் வைட்டமின் சி நிறைந்துள்ள தாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து

இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால்
எலும்புக்கும் நல்லது.

சி விட்டமினிருப் பதால் நுரையீரலும் வலுப்பெற்று சுத்திசெய்யப் படுகிறது.

இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப் படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது.

தோலுக்கும் காய்க்குமிடையி லுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள்B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப் படுகிறது.

மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந் தாலும் கரைந்துவிடும்.

உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப் பவர்களையும் சுறுசுறுப்பாக்கும்வாழைக்காய் வயதானவர் களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்.

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

வாழை வாழ வைக்கும்

அவசர சோறு ஆபத்து

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

இருமலை போக்கும் வெந்தயக் கீரை

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

சித்தம் தெளிய வில்வம்

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

சூட்டை தணிக்க கருணை கிழங்கு

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

வாத நோய் தடுக்க அரைக் கீரை

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

பருமன் குறைய முட்டைக்கோஸ்

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/IZS3OyDoBDjHFbww851rFi?s=cl&p=a&ilr=4

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

28/08/2026

*பழங்களின் பயன்கள்:-*

*1. மாதுளை -* மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

*2. நாரத்தம் பழம் -* நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

*3. முந்திரிப் பழம் -* கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

*4. கண்டங் கத்திரிப்பழம் -* கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

*5. தூதுளம் பழம் -* தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

*06. பலாப்பழம் -* பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

*07. இலந்தைப் பழம் -* பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

*08. திராட்சை -* உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

*09. பப்பாளிப் பழம் -* யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

*10. வாழைப்பழம் -* மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

*11. வில்வப் பழம் -* பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

*12. அரசம் பழம் -* விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

*13. சீமை அத்திப்பழம் -* மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

*14. பேரீச்சம் பழம் -* இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

*15. தர்பூசணிப் பழம் -* கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

*16. முலாம் பழம் -* மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

*17. விளாம்பழம் -* பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

*18. அன்னாசிப் பழம் -* குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

*19. தக்காளி -* இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

*20. எலுமிச்சம்பழம் -* எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

*21. கமலா -* இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

*22. கொய்யாப் பழம் -* கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

*23. களாப் பழம் -* களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

*24. நறுவிலிப் பழம் -* நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

*25. ஆல்பகோடாப் பழம் -* காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/IZS3OyDoBDjHFbww851rFi?s=cl&p=a&ilr=4

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

💚 விலையுயர்ந்த Mouthwash வாங்கும் முன், இந்த பாரம்பரிய முறையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!🌿 "அம்மா... இன்று மீண்டும் பல்...
28/08/2026

💚 விலையுயர்ந்த Mouthwash வாங்கும் முன், இந்த பாரம்பரிய முறையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

🌿 "அம்மா... இன்று மீண்டும் பல் தேய்க்கும்போது ரத்தம் வந்துடுச்சு!" 🦷

ஒரு நாள் காலையில், பல் தேய்த்துக் கொண்டிருந்தபோது ஈறுகளில் இருந்து ரத்தம் வந்ததைப் பார்த்து பலர் போலவே நானும் பதறிப் போனேன். "இது சாதாரணமா? இல்லை ஏதாவது பிரச்சனையா?" என்ற கேள்வி மனதில் ஓடியது.

அப்போது வீட்டில் இருந்த பெரியவர்கள் சொன்ன ஒரு பாரம்பரிய வழி நினைவுக்கு வந்தது... கொய்யா இலை. 🌿

பல தலைமுறைகளாக சிலர் வாய்ச் சுகாதார பராமரிப்பில் கொய்யா இலையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இயற்கையாகவே Anti-bacterial மற்றும் Anti-inflammatory தன்மைகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🌱 எப்படி பயன்படுத்தலாம்?

✅ 5–6 நன்கு முற்றிய கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

✅ 2 டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள்.

✅ நீர் 1 டம்ளராகச் சுண்டியதும் இறக்கி, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்க்கவும்.

✅ பொறுக்கும் அளவுக்கு ஆறிய பிறகு, 2–3 நிமிடங்கள் வாயில் கொப்பளிக்கலாம்.

இந்த முறையை சிலர் பாரம்பரியமாக ஈறுகளைச் சுத்தமாக வைத்திருக்கவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

💚 ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள்...

ஈறுகளில் அடிக்கடி ரத்தம் வருவது, கடுமையான வீக்கம் அல்லது வலி இருப்பது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அவை தொடர்ந்தால், கண்டிப்பாக ஒரு பல் மருத்துவரை அணுகுங்கள்.

🌿 நம் முன்னோர்கள் சொன்ன இயற்கை வழிமுறைகளையும், நவீன மருத்துவ ஆலோசனைகளையும் இணைத்து நம் பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/IZS3OyDoBDjHFbww851rFi?s=cl&p=a&ilr=4

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

WhatsApp Group Invite

28/08/2026

• *ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால்* *வயிற்று *வலி மாயமாய் மறைந்துவிடும்* .
• *உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத்* *தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து* *வந்தால் போதும்.*

• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
https://chat.whatsapp.com/IjDBebmBzu7GMOQVBPbGzq?s=cl&p=a&ilr=4
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

36
கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

*🍃Reflexology,Yoga & Naturopathy 🍃*

*🌱Alternative Therapist-Jai Satheesh 🌱*

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156*

https://chat.whatsapp.com/LLx2oLuI2qn3bQc7PuWCcV?s=cl&p=a&ilr=4&amv=3

*தமிழ் வழியில் இயற்கை வாழ்வியல் முறையை கற்றுக்கொள்ள Telegram* https://t.me/livealaive

https://www.facebook.com/jaisatheesh3956

Follow the 🍃வாழ்வை 🌱வாழ்வோம் 🌿 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaHoEl5DJ6HAWKxtWh2o

நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் Gpay No: 8754792156
UPI ID. jaisatheesh3956-2@okicici அனுப்பவும்.

Address

Karungalpatti
629157

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தமடா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category