Punitha Aroma & Organics

Punitha Aroma & Organics Aroma Products, Auroville Product, AUroshikha Products

11/08/2016

My shop grocery price list

My shop grocery price list
30/05/2016

My shop grocery price list

27/02/2016

விழித்துக்கொள்ளுங்கள்...

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👎

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள்.

‘‘ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை...

இதெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.

இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து.

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.

கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும்.

கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.

காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா...

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.

அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.

அதை எல்லாரும் மறந்துட்டாங்க..

புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.

நம்ம இயற்கை விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

உலகத்துக்கே கத்துக்கொடுத்த நாம தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் ஜெயராமன்.

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.

பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

ஆனால் ஜெயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம்.

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் ஜெயராமன்.

இதைத்தான் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது.

நீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.

26/02/2016

பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்து!


ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பை ஒவேரியன் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இந்நிறுவனத்தின் பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி, இவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 72 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய பணம் 493.50 கோடி ரூபாய் ) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவனம் தொடர்பாக சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், 200 வழக்குகள் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

இந்நிறுவனம் தயாரிக்கும் பவுடரில் கான்சர் செல்லை தூண்டும் ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது தெரிய வந்ததும் மற்ற நிறுவனங்கள் இந்த ரசாயனப் பொருளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டது. ஆனாலும், ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனம் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளது. இதனால், மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மதுபானம் முதல் குழந்தைகள் அருந்தும் பால் வரை கலப்படம்தான். எதையும் நம்பி பயன்படுத்த முடியாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

23/01/2016

Aroma Products, Auroville Product, AUroshikha Products

23/01/2016

நாட்டு மாடு பசும்பால் விலை 40ரூபாய்
ஹரிடேஜ் பாக்கெட் பால் 20 ரூபாய்
பிராய்லர் கோழி கிலோ 160ரூபாய்
நாட்டு கோழி விலை கிலோ 280 ரூபாய்
பாக்கெட் சமையல் எண்ணெய் 90 ரூபாய்
செக்கு எண்ணெய் விலை 200 ரூவாலிருந்து 380 ரூபாய்வரை
பிஸ்கட் பாக்கெட் விலை 25 ரூபாய்
கடலைமிட்டாய் பாக்கெட் 35 ரூபாய்
புலி மார்க் சியாக்காய் தூள் 20 ரூபாய் ....
கெமிக்கல் ஷாம்ப் 1 ரூபாய்
ஆக அன்பான உறவுகளே நம்மிடம் விஷத்தை கெமிக்கல தள்ளிவிட்டு நாம் புரிந்துகொள்ள முடியாதா ஒரு வித சூழ்ச்சிய உண்டு செய்கிறார்கள் ..
அதுமட்டும்மல்லாமல் நம் இயற்கைய நாம வாங்கி சாப்பிடமுடியாத நிலைய உருவாக்கி .... 80 சதவீதம் ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் விஷ உணவுகளை உற்பத்தி செய்து அவர்களிடம் வியாபாரம் செய்து ...
விஷம் இல்லாத உணவுகளை பணம் இருப்பவன் மட்டும் வாங்கி சாப்பிடும் நிலையில் தள்ளிவிட்டு ...
ஏழைய இன படுகொலை செய்ய துணிந்து விட்டார்கள் ...
இது வளர்ச்சி என்ற மோகத்தில் வாழும் மக்களுக்கு புரியாது நாம்தான் புரியவைக்கவேண்டும்
உறவுகளே விவசாயத்தை மட்டும் விட்டு விடாதீர்கள் ...
விலை ஏற்றம் நமக்கு ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் ... ஆனால் பெரும்பான்மை மக்களூக்கு என்ன இழக்கு என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரனும்
- Gowtham P

Address

Sathamangalam Main Road, Annanagar, Aravind Eye Hospital Back Side
Madurai
625020

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm

Telephone

+919629021610

Alerts

Be the first to know and let us send you an email when Punitha Aroma & Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Punitha Aroma & Organics:

Shortcuts

Share