Dharushifa Unani & Siddha Hospital

Dharushifa Unani & Siddha Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharushifa Unani & Siddha Hospital, Hospital, Madurai.

Dharushifa Unani and Siddha Hospital is a traditional hospital.The purpose of this page is
To rise Medical awareness among the people,
To inform people about the specialties and Medical practices of our hospital

22/12/2025

மஞ்சள் காமாலைக்கு யுனானி மருத்துவத்தில் சிறந்த தீர்வு :

65 வயது உடைய முதியவர் ஒருவர் 15 நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நமது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்கள். நீண்ட வருடங்களாக மதுப்பழக்கம் உடையவர். கண்களில் மஞ்சள் நிறம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், வெள்ளை நிற மலம், பசியின்மை, அசதி போன்ற அனைத்து அறிகுறிகளுடன் வந்தார்கள். இதற்கு முன் வேறு ஒரு மருத்துவமனையில் 5 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று விட்டு வந்திருந்தார்கள்.

அவருக்கு பாரம்பரிய யுனானி மருத்துவ முறையில் Nabz (நாடி) Bole (சிறுநீர்) Baraz ( மலம்) போன்றவற்றின் நிலைகளை அறிந்தோம். கல்லீரல் செயல்பாட்டிற்கான இரத்த பரிசோதனை (Liver Function Test)செய்து பார்த்தோம். முன்கூட்டியே எடுத்த வயிற்றுக்கான ஸ்கேனையும் (USG Abdomen)பார்த்துக் கொண்டோம்.. பின் ஏழு நாட்களுக்கு யுனானி மருந்து கொடுக்கப்பட்டது. ஏழு நாட்களுக்குப் பின் முன் கூறிய அனைத்து பிரச்சினைகளும் குறைந்து நல்ல நிலையில் வந்தார்கள். மீண்டும் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் இறைவனின் அருளால் Sr.Bilirubin அளவு 16mg/dl லிருந்து 6mg/dl அளவுக்கு குறைந்து இருந்தது. மீண்டும் 7 நாட்களுக்கு மருந்துகள் கொடுத்து அனுப்பப்பட்டது. தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் வந்தார்கள். மீண்டும் அடுத்த பரிசோதனை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

மதுவினால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பை சரி செய்வதற்கு தொடர்ச்சியாக மூன்றிலிருந்து ஆறு மாத காலம் மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டது...

கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் யுனானி மருத்துவத்தில் சிறந்த தீர்வுகள் உண்டு.

அவர் எந்த நிலையில் வந்தார் என்பதையும் எவ்வாறு முன்னேற்றம் அடைந்தார் என்பதையும் கூறுவதை காணொளியாக பகிர்ந்து உள்ளேன். பார்த்துவிட்டு மற்றவர்களுக்கும் பகிரவும். தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்..

எங்களது முகவரி:

Dr.J.Ershad,BUMS.,
Dr.A Rasheetha Banu ,BSMS.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Bus Stop,
Tirunagar,Madurai 625006

முன் பதிவிற்கு:
9597009899





07/08/2025

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட உள் காயத்திற்கு தீர்வு:

31 வயதுடைய இளைஞர் மதுரை, திருநகரில் இயங்கி வரும் எங்களது தாருஷ் ஷிஃபா யுனானி & சித்தா மருத்துவமனைக்கு கழுத்து வலி சிகிச்சைக்காக வந்தார்கள். ஒரு வருடத்திற்கு முன் Gym ல் பளு தூக்கும் உடற்பயிற்சி (Weight Lifting)செய்யும் பொழுது கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக சரியான சிகிச்சை செய்யாமல் விட்டதினால் படிப்படியாக கழுத்தில் உள்ள வலி மேல் முதுகு, தோள்பட்டை, கைவரை பரவி இருந்தது. கடுமையான வலி ஏற்பட்டு 10 நாட்களாக சரியாக தூங்க முடியாமல் சிரமப்படும் நிலையில் இருந்தார்கள்.

அவர்களை பரிசோதனை(Inspection)செய்து பின் சிகிச்சையை ஆரம்பித்தோம்.

சிகிச்சையின் முதல் நாள் கழுத்து, மேல் முதுகு,தோள்பட்டை மற்றும் கை பகுதியில் லேசாக ஆயில் மசாஜ் (Oil Massage) & ட்ரை கப்பிங் தெரபி (Dry Cupping Therapy) கொடுத்தோம். இதன் மூலமாக அங்குள்ள தசைளின் வீக்கம் மற்றும் இறுக்கம் குறைந்து ரத்த ஓட்டம் சீராகிறது. வலி குறைகிறது

கழுத்து,மேல் முதுகு, தோள்பட்டை, கை பகுதியில் மூலிகை பொடி கொண்டு ஒற்றடம் (Thakmeed)கொடுக்கப்பட்டது.

இறைவனின் அருளால் மூன்றாம் நாள் வரும் பொழுது ஒரு வருடமாக இருந்த கழுத்து வலி 80 சதவீதம் குறைந்து விட்டதாக கூறினார்கள்.

உடற்பயிற்சியினால் ஏற்படும் உள் காயம் மற்றும் நமது மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றிய விவரங்களை காணொளியாக பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்... தேவை உடையவர்களுக்கு பலன் அளிக்கக்கூடும்.

எங்களது முகவரி:

Dr.J.Ershad,B.U.M.S.,
Dr.A.Rasheetha Banu,B.S.M.S.,
Dharushifa Unani & Siddha Hospital,
35, Kamarajar Street,
5th Stop, Thirunagar,
Madurai 625006
மேலும் தொடர்புக்கு
9597009899






&siddhahospital

Address

Madurai
625006

Telephone

+919962086374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharushifa Unani & Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dharushifa Unani & Siddha Hospital:

Shortcuts

Share

Category