31/08/2026
ரேவதி நட்சத்திர குரு பூஜையில் சத்குரு தரிசனம்
சுய ஜாதகத்தில் தசாபுத்தியும் சுமாராக இருந்து, கோச்சார கிரகங்களும் உறுதுணையாக இல்லாதபோது,
தற்போதைய சூழலில் சனியின் வக்கிர கதியில் ரிஷபம், கன்னி, தனுசு ராசியில் இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்கள் எதிர்மறையாக செயல்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில்...
இன்றைய ரேவதி நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெற்றது.
அது வழக்கமானது என்றாலும்,
சனி பகவானின் தற்போதைய நகர்வு என்பது ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறது
அங்கிருந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கும்போது, அந்த ராசி, லக்னம் அல்லது அந்த பாவகங்களில் உள்ள கிரகங்களின் திசா புத்தி நடக்கக்கூடிய ஜாதகர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
இன்றைய குருபூஜை அதற்கெல்லாம் நிவர்த்தியாக அமைந்தது போல், சனியின் சுபத்துவ நிறமான நீல நிற ஆடையைச் சத்குரு அணிந்தது இயல்பாகவே பார்வைக்கு ஒரு நிவர்த்தியாக இருந்தது போல் இருக்கிறது."
அவரே ஒரு முறை சுவடியில் கூறி இருக்கிறார்..
நற்கர்மா செயல் புரிய நவக்கோள் வழி எதுவாயினும் தம் சித்தத்திலே யாமினை கொண்டால் அட்டியில்லை என்றார்...
அதாவது நம்முடைய சித்தம் என்ற ஆழ்மனம் சத்குருவின் நினைவில் இருந்தால் அந்த நேரத்தில் அந்த காலத்தில் நாம் செய்யக்கூடிய எந்த செயலுக்கும் நவ கிரகங்கள் வழியாக தடை வராது என்பதுதான் இதன் அர்த்தம்...
எப்போதும் சத்குரு நம்மோடு இருக்கிறார்..
அவர் நினைவில் நாம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்..
இந்த நேரத்தில் அவரை நமக்கு காட்டி கொடுத்து இந்த பிறவியை மகத்துவமாக மாற்றிய யோக ஆச்சாரியார் குருஜி டி எஸ் கிருஷ்ணன் அவர்களை சத்குருவோடு நினைத்து எந்நாளும் நினைவு கூறுவது தான் நம்முடைய மாண்பு கடமை எல்லாம்
வாழ்க சத்குரு ஓங்குக அவர் புகழ்