24/08/2026
உலகில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட NOISE HEALING பயிற்சி மூன்றாவது முறையாக 22.08.2026 அன்று செங்கல்பட்டு, கோஜென் அபாகஸ் மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் வழக்கமாக அறியப்படும் Sound Healing முறையை விட Noise Healing முறையின் மூலம் மட்டுமே ஆழ்மனதை (Subconscious Mind) விரைவாகவும் திறமையாகவும் சமநிலைப்படுத்த முடியும் என்பதை செய்முறை விளக்கங்களுடன் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
மேலும், மனஅழுத்தம், பயம், கவலை, கோபம், தன்னம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சி (Emotional) சார்ந்த பிரச்சனைகளை விரைவாக சரிசெய்ய உதவும் “Flower Frequency Noise Healing” முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்த Noise Healing எளிதாகப் பயன்படுத்தவும் நிர்வகிக்கவும், உலகளவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட Integrated Mobile App அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், மேலும் எனது ஆராய்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Noise Healing - 3rd batch
R. ஞானகுமரன்