10/06/2026
#ஜோதிட தகவல்..
ஒரு கிரகம் கோச்சாரத்தில் வலிமை இழந்து இருக்கின்றது என்றால் அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்காது என்று பொருள் இல்லை
உதாரணமாக அமாவாசை சந்திரன் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அமாவாசை நிலையில் இருக்கின்றார் ஆனால் அவர் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் இருக்கிறார் இந்த நிலையில் தாயின் அமைப்புகள் வலிமையாக இருக்கும் வண்டி வீடு வாகனம் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்திலேயே இருக்கும்
சந்திரனின் ஆதிபத்திய விசேஷம் உங்களுக்கு கிடைத்தே தீரும்
அது போன்று இந்த அமைப்புகள் மற்ற கிரகங்களுக்கும் சூரியன் மற்றும் செவ்வாய் நீச்சமாக இருந்தாலும் பத்தாம் இடத்தில் இருக்கும் போது இந்த கிரகங்களில் காரக ஆதிபத்தியம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்
இதே போன்று சனி நீச்சமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் இருப்பதும் புதன் குரு நீச்சமாக இருந்தாலும் லக்னத்தில் இருப்பதும் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும் நான்காம் இடத்தில் இருப்பதும் அந்த கிரகங்களின் ஆதிபத்திய காரகபலன் உங்களுக்கு கிடைத்தே தீரும்
வானில் என்னதான் ஒரு கிரகம் வலிமை குன்றிய நிலையில் நீச்சமாக வழுக்குன்றிய நிலையில் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் திக் பலமாக இருக்கும் பொழுது
உங்கள் ஒருவருக்கு அதன் முழுமையான பலனை செய்ய இந்த கிரகம் கடமை பெறுகிறது
இது ஒரு வித பூமியின் மனித பிறப்பின் அதிசயம் ரகசியம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் இந்த கிரகங்களின் முழுமையான விசேஷம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.
Sivakarthik astrology 077087 84497