Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: [email protected] [email protected]
FB: www.facebook.com/sgrm.nmpf

🟤⚪ 🟤 2085-வது நாளின் காலைத்தியானம் 31/08/2026 !!!இந்த மாதத்தின் கடைசி நாளில் "அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங...
30/08/2026

🟤⚪ 🟤 2085-வது நாளின் காலைத்தியானம் 31/08/2026 !!!

இந்த மாதத்தின் கடைசி நாளில் "அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்"..… "CONSIDER WHAT GREAT THINGS HE HAS DONE FOR YOU” என்று (1SAMUEL) 1 சாமுவேல் 12:24-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த அற்புதங்களையும் வழிநடத்துதல்களையும், சாமுவேல் ஞாபகப்படுத்தி, அவைகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று கூறுகின்றார்.

நாமும் நம் வாழ்வில், தேவன் இதுவரை செய்த நன்மைகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் தந்த விடுதலையைச் சிந்தித்துப் பார்ப்போம். அப்போது, முழு இருதயத்தோடும், உண்மையாகவும் அவருக்கு நன்றி செலுத்தி அவரையே சேவிக்க முற்படுவோம்.

வேதத்தில், இயேசு செய்த முதலாம் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுதான். யோவான் 2:11-ல் “இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்” என்று பார்க்கிறோம்.

அன்று மகிமையான அற்புதங்களைச் செய்த இயேசு, இன்றும் நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய ஆவலாயிருக்கிறார். ஆகவே, எப்பேர்பட்ட கடினமான பாதைகளை கடந்து வந்தாலும், கர்த்தர் நமக்கு இதுவரை செய்த மகிமையான காரியங்களை எண்ணிப் பார்ப்போம். நிச்சயமாகவே நமது கவலைகள் நீங்கி, உள்ளத்தில் சமாதானமும், துதியும் பெருகும்.

எனவே பிரியமானவர்களே,“வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்” என்று மரியாள், கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினது போல நாமும் உயர்த்துவோம். கர்த்தர் நம் வாழ்வின் தோல்வியை வெற்றியாய் மாற்றிக் கொடுப்பார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், இதுவரை எங்கள் வாழ்வில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தீர் என்பதைச் சிந்தித்துப்பார்த்து, இப்போதும் அற்புதத்தைச் செய்வீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

🔵⚪🔵2084-வது நாளின் காலைத்தியானம் 30/08/2026 !!!இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்ற...
29/08/2026

🔵⚪🔵2084-வது நாளின் காலைத்தியானம் 30/08/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், "எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்” .….. "HE WILL DO TO ME WHATEVER HE HAS PLANNED” என்று (JOB) யோபு 23:14-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

யோபு, பலவிதமான பாடுகளின் பாதையில் கடந்துசென்ற வேளையிலும்கூட, கர்த்தர் அவனுக்காக எதை முன்குறித்து வைத்திருக்கிறாரோ அதை நிறைவேற்றுவார் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறதைக் காண்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையிலும்கூட, கர்த்தர் நமக்கென்று எதைக் முன்குறித்திருக்கிறாரோ எல்லாவற்றையும் அவருடைய வேளைவரும்போது, நமக்காகச் செய்து முடிப்பார். இதைப் புரிந்துகொள்ள முடியாததினால் அனேக வேளைகளில் நாம் சோர்ந்து போகிறோம்.

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை. அவர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் மனுபுத்திரனுமல்ல.

யோபுவின் வாழ்க்கையில், அவனுடைய உபத்திரவத்திற்குப் பின்பு, முன்குறிக்கப்பட்ட இரட்டிப்பான செழிப்பை கர்த்தர் கட்டளையிட்டார். அதுபோல, நமக்கென்று குறித்ததையும் நிறைவேற்றி, இரட்டிப்பாய் ஆசீர்வதித்து நம்மையும் உயர்த்துவார்.

எரேமியா 33:14-ல் “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்” என்று இந்தநாளிலே நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

எனவே பிரியமானவர்களே, தேவன் முன்குறித்த நேரம் வரைக்கும், நாம் பொறுமையோடு காத்திருப்போம். நிச்சயமாகவே நிறைவான நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களுக்கு நீர் குறித்திருக்கிறதை நிச்சயமாய் நிறைவேற்றுவீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔴⚪🔴 2083-வது நாளின் காலைத்தியானம் 29/08/2026!!!இந்த காலைவேளையில், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்...
28/08/2026

🔴⚪🔴 2083-வது நாளின் காலைத்தியானம் 29/08/2026!!!

இந்த காலைவேளையில், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்" …... "HOPE DEFERRED MAKES THE HEART SICK, BUT A LONGING FULFILLED IS A TREE OF LIFE" என்று (PROVERBS) நீதிமொழிகள் 13:12-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம் வாழ்வில் சில காரியங்களுக்காக நெடுங்காலமாய் காத்திருந்து இருதயம் இளைப்படையலாம். ஆனால், கர்த்தர் நம் மனவிருப்பங்களை நிறைவேற்றும்போது, அது ஜீவவிருட்சம்போல இருக்கும்.

கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து, “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்றார். “அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்” என்று எபிரெயர் 6:14,15-ல் பார்க்கிறோம்.

கர்த்தர் சொன்னபடியே, ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, குறித்தகாலத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.

மேலும், அன்னாள் நெடுங்காலமாய் குழந்தையில்லாததால் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து, மனங்கசந்து அழுது விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அவளுடைய விருப்பத்தின்படியே ஒரு குமாரனைக் கொடுத்தார்.

அப்பொழுது அன்னாள், “என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது” என்று கர்த்தரை மகிமைப்படுத்தினாள் என்று 1 சாமுவேல் 2:1-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நாமும் காத்திருக்கும் காரியங்களுக்காக விசுவாசத்தோடு விண்ணப்பம் பண்ணுவோம். கர்த்தர், அனைத்தையும் தந்து, நம்மைக் கனப்படுத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நெடுங்காலமாய் காத்திருந்து எங்கள் இருதயம் இளைத்துப்போன வேளையிலும், நாங்கள் விரும்பினது வரும் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தைக் கேளும், எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே...ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

🟤⚪🟤 2082-வது நாளின் காலைத்தியானம் 28/08/2026 !!!இந்த  காலைவேளையில், "களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையி...
27/08/2026

🟤⚪🟤 2082-வது நாளின் காலைத்தியானம் 28/08/2026 !!!

இந்த காலைவேளையில், "களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்" ..... "LIKE CLAY IN THE HAND OF THE POTTER, SO ARE YOU IN MY HAND” என்று (JEREMIAH) எரேமியா 18:6-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

ஆதியிலே தேவன், மண்ணை எடுத்து, தமது சாயலின்படியேயும், தமது ரூபத்தின்படியேயும் தம்முடைய சொந்தக் கரங்களினால் மனிதனை உருவாக்கினார். தமது ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினபோது அவன் ஜீவாத்துமாவானான்.

ஆனால், ஆதாமின் மீறுதல்களினிமித்தமாக, குயவனுடைய கையிலே களிமண் பாத்திரம் உடைந்து போவதுபோல, அவனுடைய மேன்மையான வாழ்க்கை உடைந்து, சிதைந்து போனது. அதைத் தொடர்ந்து பாவங்களும், சாபங்களும், அவனைப் பற்றிப்பிடித்தது.

எரேமியா18:4-ல் “குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலேகெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்” என்று பார்க்கிறோம்.

மனிதனுடைய பாவத்துக்கு பரிகாரம் செய்ய இயேசுகிறிஸ்து தன்னையே பாவ நிவாரண பலியாக அர்ப்பணித்தார். பரம குயவனாகிய இயேசு, தன் கரத்திலே வழியும் இரத்தத்தையே ஊற்றி, நம்மை வனைந்தருள சித்தமானார்.

தாவீது பாவம் செய்தபோது உடைந்த பாத்திரத்தைப் போலானார். ஆனால், கண்ணீர் சிந்தி, தன் பாவத்தை அறிக்கையிட்டு தேவசமுகத்தில் கதறி அழுதபோது, கர்த்தர் தாவீதை மீண்டும் கனமுள்ள பாத்திரமாக்கினார்.

எனவே பிரியமானவர்களே, இந்தநாளிலும், நம்மை கர்த்தர் கரத்தில் அர்ப்பணிப்போம். அவர் நம்மை சுத்திகரித்து மகிமையின் பாத்திரமாக வனைந்தருளுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, உமது கையில் இருக்கிற எங்களை கிருபையின் பாத்திரங்களாக வனையும்படிஜெபிக்கிறோம்இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM- Chennai India
NMPF- Mumbai India

🟣⚪🟣 2081-வது நாளின் காலைத்தியானம்  27/08/2026 !!!இந்த காலைவேளையில் "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவா...
27/08/2026

🟣⚪🟣 2081-வது நாளின் காலைத்தியானம் 27/08/2026 !!!

இந்த காலைவேளையில் "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" ..... "DO NOT LET YOUR HEARTS BE TROUBLED; YOU BELIVE IN GOD" என்று (JOHN) யோவான் 14:1-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் இருந்து பிதாவினிடத்திற்குப் போகும்படியான வேளை வந்தபோது, அவரைப் பின்பற்றி வந்த சீஷர்கள், இருதயத்திலே மிகுந்த கலக்கத்தோடு இருப்பதை இயேசு அறிந்து கொண்டார்.

அப்பொழுது இயேசு, அவர்களை நோக்கி: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று கூறி அவர்களைத் தைரியப்படுத்தினார். இந்தநாளிலும் பற்பல பாடுகளினிமித்தமாக பயத்தோடும், கலக்கத்தோடும் இருக்கிற நம்மைப் பார்த்து அதே வார்த்தைகளினால் தேற்றுகிறார்.

பிரச்சனைகளிலும், போராட்டங்களிலும் நம் உள்ளம் அதிகமாக கலங்குகிறது. உலக வாழ்விலே மேடுபள்ளங்கள், ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். எந்த காரியத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும், விசுவாசத்துடன் தேவனை நோக்கி காத்திருக்கும்போது, நமது ஜெபத்திற்கு இரங்கி, நமது கலக்கங்கள் அனைத்தையும் தேவன் மாற்றிப் போடுவார்.

ஆம், சங்கீதம் 43:5-ல் தாவீது "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்" என்று சொல்லுகிறார்.

எனவே பிரியமானவர்களே, நம் வாழ்வில் கஷ்டங்கள் நெருக்கும்போது, இருதயத்தில் எந்தவொரு சந்தேகமோ, கலக்கமோ உண்டாகாதபடி கர்த்தரிடத்தில் முழுமையான விசுவாசம் வைப்போம். கர்த்தர் நம்மை விடுவித்து, பாதுகாத்து வழிநடத்துவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் இருதயம் எந்த சூழ்நிலையிலும் கலங்காதபடி, தேவனாகிய உம்மீது விசுவாசமாயிருக்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே….ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟠⚪🟠 2080-வது நாளின் காலைத்தியானம் 26/08/2026 !!!இந்த காலைவேளையில், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப...
25/08/2026

🟠⚪🟠 2080-வது நாளின் காலைத்தியானம் 26/08/2026 !!!

இந்த காலைவேளையில், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்" ...... "A JUST MAN FALLETH SEVEN TIMES, AND RISETH UP AGAIN" என்று (PROVERBS) நீதிமொழிகள் 24:16-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

பாவம் நிறைந்த இவ்வுலகில், பிசாசானவன் யாரை விழத்தள்ளலாம் என்று வகைதேடிக் கொண்டிருக்கிறான். பாவத்தில் விழாமல் தன்னைக் காத்துக்கொள்பவன் உத்தமன்.

நாம் ஒருவேளை விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே குற்ற உணர்வோடு கிடக்காமல், உடனடியாக எழும்பி, ஆண்டவரின் பாதத்தில் சரணடைவோம். ஆம், நீதிமான் எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்.

பேதுரு, இயேசுவை மூன்று முறை மறுதலித்தபோதும், மனங்கசந்து அழுது மனந்திரும்பி, தேவனுக்காய் உன்னத சாட்சியாய் மரித்தான்.

தாவீது, விழுந்தும் தேவமன்னிப்பைப் பெற்று ‘தேவனின் இருதயத்திற்கேற்றவன்’ என்ற சாட்சியைப் பெற்றுக்கொண்டான்.

இந்தநாளிலும், ஒரு சில தடுமாற்றங்களால் சோர்வுற்று, எழும்ப முடியாமல் சத்துருவின் கண்ணியில் சிக்கிக்கொண்டிருக்கக்கூடும். மீகா 7:8-ல் வாசிக்கிறபடி “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்” என்று சொல்லி, தைரியமாய் முன்னேறிச் செல்வோம்.

எனவே பிரியமானவர்களே, விழுந்தவர்களைத் தூக்கி நிறுத்த வல்லவராயிருக்கிற கர்த்தரிடம் புகலிடம் கொள்வோம். சிறந்த நீதிமானாய் வாழ கர்த்தர் உதவி செய்வார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, உம்மால் நீதிமான்களாக்கப்பட்ட நாங்கள் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திருப்போம் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India.

🟢⚪🟢 2079-வது நாளின் காலைத்தியானம் 25/08/2026 !!!இந்த காலைவேளையில்,  “அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" .…. "HE WILL HEL...
24/08/2026

🟢⚪🟢 2079-வது நாளின் காலைத்தியானம் 25/08/2026 !!!

இந்த காலைவேளையில், “அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" .…. "HE WILL HELP YOU”என்று (PSALM) சங்கீதம் 37:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நம்பிக்கையற்ற இவ்வுலகில், நமது காரியங்கள் வாய்க்கவேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை எடுத்தும், அநேக வேளைகளில் தோல்வியையே சந்திக்கிறோம்.

இந்தநாள் தியான வசனத்தின் முன்பகுதியில் நமது வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும் என்றும், அப்பொழுது, கர்த்தர் நிச்சயமாகவே காரியங்களை வாய்க்கப்பண்ணுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாம் கடந்து செல்லும் பாதையில், கர்த்தரை விட்டு விலகிப்போகும் வழி ஏதாவது உண்டோ என்று ஆராய்ந்து பார்த்து, நம்மை சீர்ப்படுத்தி, கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்யும்போது, கர்த்தர் அழகாய் வழிநடத்துகிறார்.

உசியா தனது பதினாறு வயதில் யூதாவின் மேல் ராஜாவாகி, “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து.… தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்” என்று
2 நாளாகமம் 26:5-ல் பார்க்கிறோம்.

நமது வேலை, தொழில், குடும்பத்தில் திருமண காரியம் மற்றும் ஊழியம் என அனைத்தையும் கர்த்தர் கரத்தில் அர்ப்பணித்து, நம்பிக்கையோடு காத்திருக்கும்போது, அவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுகிறார்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தர்மீது முற்றிலும் நம்பிக்கையாயிருப்போம். அதினதின் காலத்தில் சகல காரியங்களையும் கர்த்தர் நேர்த்தியாய் செய்து, நம்மை மகிழப் பண்ணுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் உம்மீது நம்பிக்கை வைக்கும்போது, கர்த்தராகிய நீர் எங்கள் காரியங்கள் யாவையும் வாய்க்கப்பண்ணும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟠⚪🟠 2078-வது நாளின் காலைத்தியானம் 24/08/2026 !!!இந்த காலைவேளையில், “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதின...
23/08/2026

🟠⚪🟠 2078-வது நாளின் காலைத்தியானம் 24/08/2026 !!!

இந்த காலைவேளையில், “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்” ..... “I WILL NOT FEAR THOUGH TENS OF THOUSANDS ASSAIL ME ON EVERY SIDE” என்று (PSALM) சங்கீதம் 3:6-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் ஒரு சேனையைப்போல பாளையமிறங்கி இருந்தார்கள். ஆனாலும், திரளான எண்ணிக்கையைப் பார்த்து தாவீதின் இருதயம் பயப்படவில்லை. சேனைகளின் கர்த்தர் அவரோடு இருப்பதே அவரது முழுநம்பிக்கை.

நமது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியில், நம்மைச் சுற்றிலும் தேவனுடைய சேனை இருப்பதால், நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் அனுப்பிய இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்ட எலிசாவின் வேலைக்காரன் பயந்தான்.

கர்த்தர் அவன் கண்களைத் திறந்தபோது, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருப்பதை கண்டான்.

எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பித்தபோது, சீரியர்களுக்கு கண்மயக்கம் வரும்படி கர்த்தர் செய்தார். இஸ்ரவேலர்களுக்கு எதிராக அவர்களால் போராட முடியவில்லை.

சங்கீதம் 27:3-ல், “எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலேநான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று தாவீது தைரியமாகக் கூறுகிறார்.

எனவே, பிரியமானவர்களே, நமக்கு விரோதமாக எப்பேர்ப்பட்ட சத்துருக்கள் எழும்பினாலும், நாம் பயப்பட வேண்டியதில்லை. கர்த்தர் நமது யுத்தங்களை நடத்தி, ஜெயத்தைத் தந்தருளுவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களுக்கு விரோதமாகப் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நாங்கள் பயப்படோம் என்று விசுவாச அறிக்கை செய்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India.

🔵⚪🔵 2077-வது நாளின் காலைத்தியானம்  23/08/2026 !!!இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அ...
22/08/2026

🔵⚪🔵 2077-வது நாளின் காலைத்தியானம் 23/08/2026 !!!

இந்த ஓய்வுநாளின் காலைவேளையில், “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக"...... "MAY THERE BE PEACE WITHIN YOUR WALLS, AND SECURITY WITHIN YOUR CITADELS" என்று (PSALM) சங்கீதம் 122:7-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

எருசலேம் நகரத்தை சுற்றி இருந்த அலங்கம், அந்த நகரத்தின் சிறந்த அரணாக இருந்து வந்தது. ஆயினும் எதிரிகள், அலங்கங்களை இடித்து, பாதுகாப்பின் சுவர்களை தகர்த்துப் போடுவார்களானால், அங்கு வாழ்பவர்கள் பாதுகாப்பை மற்றும் சமாதானத்தை இழந்து போகின்றார்கள்.

எந்த குடும்பத்திலே தெய்வீக சமாதானமும், தெய்வீக ஆரோக்கியமும் இருக்கிறதோ, அந்த வீடு பாக்கியமுள்ளது. அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம்.

சில செல்வந்தர்கள், அரண்மனை போன்ற பெரிய வீடுகளில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்தாலும், அவர்களது உள்ளத்திலும், குடும்பத்திலும் சமாதானம் இருப்பதில்லை. சரீரத்தின் நோய்களும், மற்ற பிரச்சனைகளும் அவர்கள் வாழ்க்கையைக் கசப்படையச் செய்கின்றன.

நம் தேவனாகிய கர்த்தரோ, குழப்பங்களும் கவலைகளும் இருக்கின்ற இல்லங்களிலே, சமாதானத்தையும், சுகத்தையும் கொடுக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.

“அவர் (கர்த்தர்) உன் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” என்று சங்கீதம் 147:14-யிலும், “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” என்று நீதிமொழிகள் 18:10-யிலும் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, இன்றைக்கே கர்த்தரிடம் புகலிடம் கொள்வோம்.
நமது இல்லத்திலும், உள்ளத்திலும் சமாதானத்தையும், சரீரத்திலே சுகத்தையும் கர்த்தர் தந்து ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் அலங்கத்துக்குள் தெய்வீக சமாதானமும், எங்கள் அரமனைக்குள் எப்போதும் சுகமும் காணப்படும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India

⚫⚪⚫ 2076-வது நாளின் காலைத்தியானம்  22/08/2026 !!!இந்த காலைவேளையில், "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" ...... "I A...
21/08/2026

⚫⚪⚫ 2076-வது நாளின் காலைத்தியானம் 22/08/2026 !!!

இந்த காலைவேளையில், "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" ...... "I AM MAKING EVERYTHING NEW" என்று (REVELATION) வெளிப்படுத்தின விசேஷம் 21:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கர்த்தருடைய ஊழியக்காரனாகிய யோவான், ஒரு நாளிலே ஆவிக்குள்ளானபோது கண்ட தரிசனத்தில், சிங்காசனத்தில் வீற்றிருந்த தேவன் “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்று சொன்னதாக நாம் அறிகிறோம்.

ஆம், நம் தேவன் சகலத்தையும் புதிதாக்குகிறவர். நம் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது, எதினாலே ஆசீர்வாதம் தடைபடுகிறது என்பது எல்லாம் நம்மைப் படைத்த நம் தேவனுக்கு நன்றாய் தெரியும். ஆகவே, முடியாது என்று நாம் நினைக்கும் எல்லா சூழ்நிலையிலும் அவர் அற்புதத்தைச் செய்து, நமக்கு புதிய வழியைக் காண்பிக்கிறார்.

மேலும், ஒருவன் கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது அவன் புதிய சிருஷ்டியாக மாறுகிறான். பழைய வாழ்க்கை முடிந்து, புதிய வாழ்க்கை தொடங்குகிறது. தவறான காரியங்களை களைந்துவிட்டு தூய்மையாக மாறுகிறான். கர்த்தருக்குள் புதுத் தீர்மானங்களை எடுத்து புதிய வல்லமையைப்பெற்று வாழத்துவங்குகிறான்.

இதனை வேதத்திலே “ஒருவன் கிறிஸ்துவுக்குளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின” என்று 2 கொரிந்தியர் 5:17-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, புதிய புதுச்சிருஷ்டியாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். தேவன், நிச்சயமாகவே நம் வாழ்க்கையில் இன்று நாம் சந்திக்கிற எல்லா பிரச்சனைகளையும், போராட்டங்களையும் நீக்கி, எல்லாவற்றையும் புதிதாக்குவார்.

ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், எங்கள் வாழ்வில் சகலத்தையும் புதிதாக்கும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsAPP- 7400472200

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Shortcuts

Share