23/07/2025
நடந்தால் கொழுப்பை குறைக்க முடியுமா?
நிறைய பேர்கள், நான் நடந்தே 1 கிலோ குறைத்தேன், 2 கிலோ குறைத்தேன் என்று நிறைய பதிவுகள் போட்டிருக்கிறார்களே?
அவர்கள் நடந்தே 10 கிலோ குறைத்தேன், 20 கிலோ குறைத்தேன் என்று போட்டிருக்கிறார்களா?
சந்தேகம்தான். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு குறைவு. அப்படியே நடந்திருந்தால், அது மிகுந்த மனக்கட்டுப்பாடுடன், பட்டினி கிடந்து, தசைகள் அழிந்து, ஒமகுச்சி நரசிம்மன் மாதிரி எழும்பும் தோலுமாக, தலை முடியெல்லாம் கொட்டி, ஆரோக்கியம் குன்றிய மனிதராகத்தான் மாறி இருக்கவேண்டும். 😀
நடந்தே 1 கிலோ குறைத்தேன், 2 கிலோ குறைத்தேன் என்பதெல்லாம், உடலில் உள்ள தண்ணீர் இழப்புதான்.
இதைப்பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகள் குளுக்கோஸாக மாறும், அதன் பின் அதை இன்சுலின், கிளைக்கோஜனாக மாற்றி சேமிக்கும். நம் உடலில் உள்ளே சேமித்து வைத்திருக்கும் கிளைக்கோஜன், தோராயமாக இரண்டு நாள் வரை நமக்கு குளுக்கோசை கொடுக்கும். கிளைக்கோஜன் சேமிப்பு காலியாகிவிட்டால், நம் மெட்டபாலிசம் வேறு முறையில் சக்தி கிடைக்க மாறிக்கொள்ளும்.
நம்முடைய கல்லீரலில் தோராயமாக 70கிராமில் இருந்து 100 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்.
நம்முடைய தசைகளில் தோராயமாக 400 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், நம் உடலில் தோராயமாக 500 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் உடல் ஒவ்வொரு கிராம் கிளைக்கோஜனுடன் சேர்த்து 3 கிராம் தண்ணீரையும் சேர்த்து சேமிக்கும்.
எனவே 500 கிராம் கிளைக்கோஜன் X 3 கிராம் தண்ணீர் = 1500 கிராம் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும்
ஆக மொத்தம் 500 கிராம் கிளைக்கோஜன் + 1500 கிராம் தண்ணீர் = 2000 கிராம்
2000 கிராம் என்பது = 2 கிலோ.
எல்லாவற்றையும் சேர்த்தால், நம்முடைய கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கு நிறம்பி இருந்தால் 2 கிலோ எடை நம் உடலில் சேர்ந்து இருக்கும்.
நீங்கள் இப்போது ஒரு ஒரு வாரம் தீவிர நடைபயிற்சி செய்தால் இந்த கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கு காலியாகும். உங்களுக்கும் ஒரு 1.5 கிலோவிலிருந்து 2 கிலோ வரை எடை குறையும்.
இந்த எடைக்குறைப்பு, 500 கிராம் கிளைக்கோஜன், அதனுடன் சேர்ந்து 1500 கிராம் தண்ணீர், கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கில் சேர்ந்துவிடும்.
உடலில் 2 கிலோ ஏறிவிடும்.
ஆகா ஒரு நாள்தானே சீட்டிங், 2 கிலோ ஏறிவிட்டதே என்று அதிர்ச்சி பதிவு போடுவீர்கள்.
சரி மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்து நடந்தால் என்னவாகும்?
எடை மீண்டும் குறையுமா?
குறையாது. ஏன்?
உடற்பயிற்சியால் எடையை குறைப்பது என்பது பகிரதபிரயத்தனம்தான்.
அதுவும் நடைபயிற்சி போன்ற ஏரோபிக் (Aerobic) உடற்பயிற்சிகள் கிளைக்கோஜன் சேமிப்பைதான் காலிபண்ணுகிறது.
உடற்பயிற்சியால் பயன்பெறுவது, வலிமைபெறுவது தசைகள்தான்.
N
உணவு முறை மாற்றமில்லாமல், உடல் எடையை குறைக்க முடியாது. 😄