DrChristopher TVK Tirunelveli

DrChristopher TVK Tirunelveli பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(3)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கழகத்தின் பொதுச்செயலாளர்...
09/08/2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கழகத்தின் பொதுச்செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆனந்த் அவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து திருநெல்வேலி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் என்ற புதிய பொறுப்பை வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பை மிகுந்த பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி தெற்கு மாவட்டத்தில் கழகத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்பேன்.என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய கழகத் தலைமையினருக்கும், கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், ராதாபுரம் மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

தமிழகத்தின் எதிர்காலத்தை மாணவர்களின் கல்வி மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தோடு இணைத்து பார்க்கும் மாண்புமிகு தமிழக முதலம...
07/08/2026

தமிழகத்தின் எதிர்காலத்தை மாணவர்களின் கல்வி மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தோடு இணைத்து பார்க்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் நல பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தரமான கல்வி, நவீன கற்றல் வாய்ப்புகள், தொழில்நுட்ப வசதிகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தும் இந்த அணுகுமுறை, “இன்றைய மாணவர்கள் – நாளைய தமிழகம்” என்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மாணவனின் கனவிற்கான முதலீடு. அந்த முதலீட்டின் மூலம் அறிவார்ந்த, திறமையான, தன்னம்பிக்கை கொண்ட புதிய தலைமுறையை உருவாக்குவதே மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்கு பயணம்.

ராதாபுரம் தொகுதியின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி, திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

மாணவர்களின் கனவுகளுக்கு துணை நிற்போம்!
Dr. S.K. கிறிஸ்டோபர்
ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்

29/07/2026

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய மாதா திருத்தல ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்றத் திருவிழாவில் கலந்து கொண்டு, இறைவனின் அருளாசியையும் மக்களின் அன்பான வாழ்த்துகளையும் பெற்றார் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் Dr. S.K. கிறிஸ்டோபர் அவர்கள்.
இந்நிகழ்வில் திரளான பெருமக்களுடன் இணைந்து பக்தி நிறைந்த சூழலில் வழிபாட்டில் பங்கேற்று, அனைவரின் நலன், அமைதி, ஒற்றுமை மற்றும் வளமான எதிர்காலத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

28/07/2026

CMS பள்ளியில் பயிலும் விடுதி மாணவிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி முடிந்த பின்பு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறித்து வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மதிப்பிற்குரிய இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் Dr. S.K. கிறிஸ்டோபர் அவர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால், மாணவிகளுக்கான பள்ளி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது

இதன் மூலம் பள்ளி முடிந்தவுடன் மாணவிகள் பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் விடுதிக்குச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவிகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனை எப்போதும் முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Radhapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DrChristopher TVK Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share