Yoga Practice

Yoga Practice It brings together physical and mental disciplines to achieve a peaceful body and mind; it helps man

Source : Tamil The Hinduதினம் தினம் யோகா 02: நேரம் நல்ல நேரம்யோகாசனப் பயிற்சியை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் ...
04/12/2021

Source : Tamil The Hindu
தினம் தினம் யோகா 02: நேரம் நல்ல நேரம்

யோகாசனப் பயிற்சியை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் முடிப்பது சிறப்பு. அப்போதுதான் வெயில், தூசு, புகை இருக்காது. மாலைப் பொழுதும் (5 – 6 மணி) ஓகேதான். எனினும், பகலில் பணியால் ஏற்பட்ட சோர்வு இருக்கும் என்பதால், புதிதாக பயிற்சியை தொடங்குபவர்களுக்கு அதிகாலையே சிறந்தது. காற்றோட்டமான அறை, மொட்டை மாடி, பூங்கா என சுகாதாரமான எந்த இடமும் ஏற்றதே. ஏசி, மின்விசிறியை தவிர்ப்பது நல்லது.

யோகா செய்வதற்கு, வழுக்காத ஏதோ ஒரு விரிப்பு போதும். 6, 8, 10 மி.மீ. தடிமனில் கிடைக்கும் யோகா மேட்களை வாங்கியும் பயன்படுத்தலாம்.

யோகாவுக்கு வயது தடை இல்லை. மறைந்த யோகா பாட்டி ‘பத்ம’ நானம்மாள் 99 வயது வரை யோகா செய்தார். பள்ளிக் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் வயதுக்கேற்ற பயிற்சிகளை செய்யலாம்.

முழுமையாக சிறுநீர், மலம் கழித்து, வெறும் வயிற்றில் யோகா செய்வது அவசியம். டீ, காபி அருந்தினால் அரை மணிக்கு பிறகும், டிபன் சாப்பிட்டால் 2 மணி நேரம் கழித்தும், முழு உணவு சாப்பிட்டால் 4 மணி நேரம் கழித்தும் யோகாசனம் செய்யலாம். நீண்ட பயணம், இரவு தூக்க குறைவு, காய்ச்சல் இருந்தால் யோகாவை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று யோகாசனம் செய்யலாம்.

நாளை - நிமிர்ந்து நில்

Vethathiri Maharishi

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?வேதாத்திரி மகரிஷியின் விடை:செயலுக்குதக்க வி...
30/09/2021

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும். ...

மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம். மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம்.

ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையேஇப்பதிவு.1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்வாழ்...
27/05/2021

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே
இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும்
ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம்
ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க
வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே
இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை
பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை
விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில்
நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி
கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது
வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை
தியானத்திலும் பிராத்தனையிலும்
செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி
குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை
என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி
செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய்
என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை
என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு
ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான
பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு
அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று
விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து
கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க
உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று
விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில்
வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு
முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை
நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட
அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல்
ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து
தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ
தூக்குவது போல் உணர்ந்தான்.

ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை
காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட
தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை
தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான்
சித்தன்.

இப்பொழுது கடவுள் பேச
தொடங்கினார்,

சித்தா நீ இப்பிறவியில்
நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல
நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,
மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும்
ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக
அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்
அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து
பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு
கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில்
வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது
மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய
சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க
விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்
"பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும். எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்
அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை
குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது
மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே
கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை
அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட
வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித
சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த
கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்
அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர்
பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும்
நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை
கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை.

இதைத்தான் " தீதும் நன்றும்
பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில்
இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்
சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்?

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம்
என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற
எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான
புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம்
வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்
அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த
அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு
வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர்
என்று அங்கே உள்ள சாக்கடையில்
குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோன்றலாம். ஆனால்
அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி
இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி
வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை
என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம்
தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும்
உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன ்அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு
செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின்
நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ
கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை
துறப்பதுவே ஆகும். "நான்" என்ற
எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட
எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை
அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
உள்ளவர்களை பொறுத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
"ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால்
அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும்.

இதையும் புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு
அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும்
பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு
அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய
அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள்
தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும்
நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்
இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!! நன்றி...

ஓம் நமசிவாய — feeling blessed.

*உன்னைப் புறக்கணித்துவிட்டதாக* *ஏன் கதறுகிறாய்.....?**- ஓஷோ....*யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?இந்தப் பிரபஞ்சம் எப்போத...
13/12/2020

*உன்னைப் புறக்கணித்துவிட்டதாக*
*ஏன் கதறுகிறாய்.....?*

*- ஓஷோ....*

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன்மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து, நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்துக் கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே அன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும். பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில், நீ எத்தனை பேரைப் பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணிப் பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாகச் சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....

- ஓஷோ..!!

சித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி !ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சிமேற்கொள்வதால் ஆரோக்கியம் ம...
21/11/2020

சித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி !

ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி
மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.
பயிற்சியும் செய்முறையும்
மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று
வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது
மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது
மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல
முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற,
இந்த பயிற்சியை இடைவிடாது
குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம்.
முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான
முத்திரையில் நடக்கலாம்.
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய
வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின்
மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர்
நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர
வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில்
மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள்

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம்
செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த
ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது
50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல்
தீரும்.

முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும்

சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி
அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு
மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல்
பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம்
குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கரவண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல
முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது
குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

- இணையம்

உடலினை உறுதி செய்! ❤️ 🚶😀
19/09/2020

உடலினை உறுதி செய்! ❤️ 🚶😀

 #அன்பு_குழந்தையே... 🌸உனது பிரச்சனைகள் என்னவானால் என்ன? நீ அனைத்தையும் கடந்து போகத்தான் பிறந்திருக்கிறாய். 🌸🌸கஷ்டப்பட்டா...
09/09/2020

#அன்பு_குழந்தையே...

🌸உனது பிரச்சனைகள் என்னவானால் என்ன? நீ அனைத்தையும் கடந்து போகத்தான் பிறந்திருக்கிறாய். 🌸

🌸கஷ்டப்பட்டாலும் சுகத்தை அனுபவித்தாலும் அது கர்ம வினை பலன் என்பதை காட்டுவேன்🌸.

🌸எதைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் என்பதை தீர்மானமாக வைத்த்துக்கொள். 🌸

🌸இனி எப்படியிருக்கப் போகிறாய் என்பதை பற்றி சிந்தனை செய்.🌸

🌸உனது ஏமாற்றமான சூழ்நிலைகளை மாற்றும் வழிகள் என்ன? 🌸

🌸நடைமுறை சாத்தியங்கள் என்ன என்பது பற்றி உன் உள்ளத்தில் நான் பேசும்போது கவனி. 🌸

🌸நீ ஆன்மா. உனக்கு சுகமோ, துக்கமோ கிடையாது. 🌸

🌸அவை இந்த உடலுக்கு உரியது என்றாலும் நான் இந்த உடலைத்தான் கோயிலாக வைத்து அதில் வசிக்கிறேன். 🌸

🌸எனவே, இன்று முதல் இந்த உடம்பு சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்துவேன். உன் கஷ்டங்களுக்கு முடிவு கட்டுவேன். 🌸

🌸இனி இஷ்டப்படி எல்லாம் நடக்கும் என்று நீ நம்பிக்கையோடும், பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், 🌸

🌸சுறுசுறுப்பான மனத்தோடும் இப்படி தான் இருக்க வேண்டும் எனத்தீர்மானம் செய்🌸

🌸அந்த தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன். உன்னை வெற்றியின் பாதைக்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறேன். 🌸

🌻 #ஓம்_ஸ்ரீசாய்ராம்.🌻

ஓஷோ பேசிய கடைசி வார்த்தைகள்1989 ஏப்ரல் 10 மாலை நடைபெற்ற தியான நிகழ்வின்இறுதியில், ஓஷோ பேசிய கடைசி வார்த்தைகள்:இந்தக் கணத...
09/08/2020

ஓஷோ பேசிய கடைசி வார்த்தைகள்

1989 ஏப்ரல் 10 மாலை நடைபெற்ற தியான நிகழ்வின்
இறுதியில், ஓஷோ பேசிய கடைசி வார்த்தைகள்:
இந்தக் கணத்தில், இந்தப் பூமியிலேயே மிகவும் அசீர்வதிக்கப்
பட்டவர்கள் நீங்கள். உங்களை நீங்கள் புத்தராக நினைவூட்டிக்
கொள்வது தான், மிகவும் மதிப்பு மிக்க அனுபவம். ஏனென்றால்,
அதுதான் உங்கள் எல்லையின்மை. அதுதான் உங்கள் நிரந்தரம்.
அது நீங்களல்ல. அது உங்களின் சரியான இருப்பு. நீங்கள்,
விண்மீன்களுடனும், மரங்களுடனும், வானத்துடனும்,
கடலுடனும் ஐக்கியமாகி விட்டீர்கள். இனி நீங்கள் பிரிந்து
தனியாக இல்லை.
புத்தரின் கடைசிச் சொல் "சம்மசதி."

நினைவில் வையுங்கள். நீங்களே புத்தர்; சம்மசதி.

ஓஷோ

ௐ ஶ்ரீ சாய் நாதாய நமஹ!!!பல பேர் அவரவர் பிரச்சனைகளுக்கு விடிவு தேடி ஒரு நிரந்தர தீர்வு தேடி என்னை காண்பதற்கு காத்திருக்கு...
22/07/2020

ௐ ஶ்ரீ சாய் நாதாய நமஹ!!!

பல பேர் அவரவர் பிரச்சனைகளுக்கு விடிவு தேடி ஒரு நிரந்தர தீர்வு தேடி என்னை காண்பதற்கு காத்திருக்கும் நேரத்தில் நான் உனக்கு அனுமதி அளித்தேன். ஏன் தெரியுமா. பல மைல்களுக்கு அப்பால் இருந்து உன்னை அழைத்து வந்திருக்கிறேன்.

நீ பல இன்ப துன்பங்களை தாங்கி கொண்டு உற்றார் உறவினர்கள் பேசுவதை செவி கொடுத்து கேட்டு அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் அவர்களுக்குகாக உன் சுபாவத்தை மாற்றி கொண்டு ஏளனம் செய்தவர்கள் பல பேர் இருந்தும் தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு பாதையாக அவசரபடாமல் பொறுமையோடு சினம் இல்லாமலும் விரக்தி இல்லாமலும் தான் என்ற அகந்தை இல்லாமல் கடந்து வந்தாய்.

இதற்காவே உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். உன்னுள் இருக்கும் நல்ல ஆத்மார்த்தமான செயல்களுக்காக உனக்கு அனுமதி அளித்தேன். எனது அனுமதியின்றி எவரும் என்னிடத்தில் சுவாசிக்க கூட முடியாது. ஆதலால் உனக்காக நான் எனது துவாரகா வாயிற் படியில் காத்து கொண்டு இருக்கிறேன்.

வா குழந்தாய் உனது கர்ம பலன்கள் அனைத்தும் உன்னை விட்டு நெடுந்தூரம் சென்று விட்டது. அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் நீ எதிர்பார்க்காத தருணத்தில் வாழ்க்கை பாதையில் உயர்த்த போகிறேன்.

கலங்காதே அப்பா உன் கூடவே இருக்கிறேன். கவலை படாமல் இரு.
இழந்தையெல்லாம் மீண்டும் பெற போகிறாய். தைரியமாக இரு. நான் உனது நிழலாக கூடவே இருப்பேன்.

 #யோகா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி ...
07/05/2020

#யோகா

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

Address

Rajapalaiyam
626117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Practice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category