Gani Health Care Clinic

Gani Health Care Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gani Health Care Clinic, Hospital, JM kambidurai Complex, Quaide Millath Street, periyapattinam, Ramanathapuram.

26/11/2024
Be aware
13/10/2024

Be aware

30/01/2024

WANTED
DIPLOMA NURSING AND DIPLOMA LAB TECHNICIAN
Contact: 6385735137

WANTEDDIPLOMA NURSING AND DIPLOMA LAB TECHNICIANFOR MORE DETAILS CONTACT: +916385735137
25/12/2023

WANTED
DIPLOMA NURSING AND DIPLOMA LAB TECHNICIAN

FOR MORE DETAILS CONTACT: +916385735137

30/12/2021

For more information contact : 6385735137

01/08/2021

WHO COVID UPDATE

26/07/2021

💊💉 ஆண்ட்டிபயாடிக் ரெசிஸ்டெண்ஸ்
தவிர்க்க சில எளிய டிப்ஸ்

ஆண்டிபயாடிக்குகள் கண்டறியப்படாத காலகட்டத்தில் , அதாவது 19ஆம் நூற்றாண்டு வரை

புண்கள், கீரல்கள், விலங்குகளிடம் கடிபடுவது என்பது போன்ற சாதாரண நிகழ்வுகளினால் ஏற்படும் காயங்கள் சீழ் வைத்து அது ஆறாமல் பெரிதாகி உடல் முழுவதும் பரவி இறந்து வந்தனர்.

பென்சிலின் என்ற ஆண்டிபயாடிக்கை ஃப்ளெமிங் கண்டறியும் முன் நடந்த முதல் உலகப்போரில் போர் காயங்கள் ஆறாமல் முற்றிப்போய் இறந்த மக்கள் தொகை பல மில்லியன்கள்.

அதற்குப்பிறகு பல ஆண்டிபயாடிக்குகள் கண்டறியப்பட்டு பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போரில் நமக்கு சிறந்த ஆயுதங்களாக செயல்பட்டு வருகின்றன.

எதிரிகளும் நம்மை விட அதி வேகமாக பல்கிப்பெருகும் ஆற்றலுடன் இருப்பதால் நமது ஆயுதங்களுக்கு எதிராக அவர்களை தகவமைத்துக்கொள்கிறார்கள்.

எனவே இது நமக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையே நடக்கும் தொடர் யுத்தமாகவே இருக்கிறது.

இதில் எதிரி நம்மை விட பலம் கூடினால் நம் நிலை பிரச்சனைக்குள்ளாகும்.

உலகின் கடைசி ஆண்ட்டிபயாடிக்கும் வேலை செய்யாத நிலை இப்போதே வந்து விட்டது. இதை Total Drug Resistance என்கிறோம்

இந்த நிலையை
காச நோய் எனும் Tuberculosis இல் அதிகம் பார்க்க முடிகிறது.

எத்தனை விலை உயர்ந்த ஆண்ட்டிபயாடிக்குகள் கொடுத்தும் நிலைமை சரியாகாமல் நோயாளிகள் இறந்து வருகிறார்கள்.

இத்தனை ஆபத்தான
ஆண்ட்டிபயாடிக் ரெசிஸ்டெண்ஸை நம்மளவில் தவிர்ப்பது எப்படி ?

🎯 எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப மருத்துவரை சந்திக்க வேண்டும் என்ற கொள்கையை வைத்துக்கொள்ள வேண்டும். நாமாக நேரே மருந்தகங்களுக்குச் சென்று ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுக்கக்கூடாது.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களின் தாயார் முந்தைய ப்ரிஸ்க்ரிப்சனை வைத்து ஆண்ட்டிபயாடிக் சிரப் வாங்கி கொடுத்து விடுகின்றனர்.

இந்த விசயத்தில் மருத்துவர் பேச்சை கேட்பது தான் சிறந்தது தாய்மார்களே.
நீங்களாக ஆண்டிபயாடிக் ஆரம்பித்து குழந்தைக்கு நன்மை செய்வதில்லை.

மருத்துவர் ஆண்ட்டிபயாடிக் பரிந்துரைக்கும் கால அளவை "ஒரு கோர்ஸ்" ( course of antibiotic) என்று
அழைக்கிறோம்

இந்த கோர்ஸ் என்பது குறிப்பிட்ட நோயின் தன்மை பொறுத்தும் பரிந்துரைக்கப்படும் ஆண்ட்டிபயாட்டிக்கின் தன்மை பொறுத்தும் மாறுபடும்

ஒருவருக்கு காலை இரவு இருவேளையும் அடுத்த ஐந்து நாட்களுக்கும் ஒரு ஆண்ட்டிபயாடிக் எழுதப்பட்டால் அதை அவ்வாறே எடுக்க வேண்டும்.
இரண்டு நாட்களில் நோயின் அறிகுறிகள் (symptomatic relief) குணமாகிவிடும். ஆனால் நோயை ஏற்படுத்திய கிருமிகள் இன்னும் முழுமையாக இறந்திருக்காது . அதனால் இத்தோடு நோய் சரியாகி விட்டது என்று மாத்திரையை விட்டால் மீண்டும் வில்லன் எழுந்து வருவான் . எனவே கிருமிகளை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்பதே நமது குறி.

இன்னும் சிலர் மருத்துவர் காலை இரவு
500mg மாத்திரை என்று எழுதிய மாத்திரையை அரையாக ஒடித்து காலை இரவு 250mg என்று சாப்பிடுவார்.

கேட்டால் எனக்கு பவர் ஒத்துக்காது என்பார்.
ஆனால் அவர் போடும் 250மில்லிகிராம் எனும் பவரில் எதிரிகளான கிருமிகள் வெகு சீக்கிரமாக ஆண்டிபயாடிக் ரெசிஸ்டெண்சை வளர்த்துக்கொள்ளும்.

அப்போது அவருக்கு நோய் குணமானதாக தெரிந்தாலும். நாளடைவில் அவருக்கு அந்த மருந்து வேலையே செய்யாமல் போய் விடும்.

இதே போன்று தான் காலை இரவு என்று இரு வேளை எழுதிய மாத்திரைகளை ஒரு வேளை மட்டும் போடுவது.

இது எதற்கு சமம் என்றால்
வங்கிக்கு பகல் நேரத்தில் மட்டும் காவலாளி வைத்து விட்டு இரவு நேரத்தில் வைக்காமல் விடுவதற்கு சமம்.

பகல் நேரத்தில் மாத்திரை போடுவதால் மூர்ச்சை நிலைக்கு செல்லும் கிருமிகள் அடுத்த ஷிப்ட்டு மாத்திரை போடாததால் மீண்டும் எழுந்து நம்மை அடிக்கும். இதுவும் ரெசிஸ்டெண்சை வரவழைக்கும்.

வைரஸ் காய்ச்சல் பரவும் சீசன்களில் கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுவது ,
இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கையும் வாயையும் மூடுவது, தண்ணீரை வடிகட்டி காய்ச்சி குடிப்பது, பொதுவெளியில் மலம் கழிக்காமல் இருப்பது, சளி பிடித்தவர் அடுத்தவருக்கு கை குலுக்காமல் இருப்பது, குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்காமல் இருப்பது போன்ற சாதாரண அன்றாட நடவடிக்கைகள் மூலம் நாம் நோய் கிருமி தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

தேவையின்றி உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளுக்கு வேறு நோயாளிகளைப் பார்க்க செல்லாமல் தவிர்க்கலாம். காரணம் இது போன்ற எந்த ஆண்ட்டிபயாடிக்குக்கும் கேட்காத பெரிய சூப்பர் பக் வகை கிருமிகள் அனைத்தும் உள் நோயாளிகளை அட்மிட் செய்து பார்க்கும் மருத்துவமனைகளில் இருக்கும். இதை HAI என்று சுருக்கமாக அழைக்கிறோம்.
HAI என்றால் Hospital Acquired Infection என்கிறோம்.
இந்த வகை கிருமிகள் பரவாமல் இருக்க பல கிருமித்தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவமனையில் கடைபிடிக்கிறோம்.

சளி இருமல் போன்று தொற்று இருப்பவர்கள் முடிந்தவரை அடுத்த வீட்டுக்கு/ அடுத்த ஊருக்கு பயணம் செய்யாமல் இருக்கலாம். இதனால் ஒரு இடத்தில் இருக்கும் தொற்று மற்றொரு இடத்திற்கு பரவாமல் இருக்கும்.
இருப்பினும் கிருமித்தொற்று இருந்தால்
முடிந்தவரை பயணங்களை தவிர்த்தல் சிறந்தது.

சிந்திப்போம் மக்களே.
மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.

24/06/2021

Full time working Medical laboratory technician wanted

COVID19 VACCINE COMPARISON
01/06/2021

COVID19 VACCINE COMPARISON

Address

JM Kambidurai Complex, Quaide Millath Street, Periyapattinam
Ramanathapuram
623523

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+917449033137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gani Health Care Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gani Health Care Clinic:

Shortcuts

Share

Category