04/02/2026
அனைத்து அன்பர்கள் மற்றும் சன்மார்க்க உறவுகளுக்கு வந்தனம்....
அனைவரது கவனத்திற்கு,
நமது தென்மண்டல சுத்த சன்மார்க்க கூட்டமைப்பு, அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர உள்ளது, அதன் முதற்கட்டமாக அனைவரும் எளியதாக அறியும்வண்ணம், தென்மண்டல சுத்த சன்மார்க்க கூட்டமைப்பானது மாற்றி திருத்தி அமைக்கப்பட்டு, தென்னிந்திய சுத்த சன்மார்க்க கூட்டமைப்பு என மாற்றியமைக்கபடுகிறது.
விரைவில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு 5 மாநிலங்களிலும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என நிர்வகிக்கப்படுவார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
நமது தென்னிந்திய சுத்த சன்மார்க்க கூட்டமைப்பானது, முழுக்க முழுக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாலும், பெருமானை மட்டுமே தலைமையாகவும் கொண்டு செயல்படும், நம் சுத்த சன்மார்க்க கூட்டமைப்பானது முழுக்க முழுக்க சுத்த சன்மார்க்க அன்பர்களாலும், இளைஞர்களாலும், சாதுக்களின் கீழ் மட்டுமே செயல்படும்.
எவ்வித அரசியல் இயக்கத்திற்கும் அனுமதி இல்லை, சார்ந்தும் இயங்காது, யாரேனும் ஒருவர் ஏதேனும் அரசியல் இயக்கத்தில் பதவி வகித்தால் அவர்களுக்கு நம் சுத்த சன்மார்க்க கூட்டமைப்பில் இடமில்லை.
சுத்த சன்மார்க்க கொள்கைபடியும், பெருமான் எடுத்துரைத்த அன்பு, தயவு, கருணையை முதல் சாதனமாகவும், தன்னை மதியாதிருத்தல், உலகாச்சார சங்பற்ப விகற்பங்களை தவிர்த்தவர்களாக உள்ளவர்களை கொண்டு மட்டுமே செயல்படும்.
நமது அமைப்பிற்கு காக்கா கூட்டம், நரிக்கூட்டம் போல எல்லாம் கூட்டம் இல்லாமல் தனித்து 10 பேர் இருந்தாலும் அதுவே போதும்.
நமது மார்க்கம் உப்பு விற்கிற இடமில்லை, வைரம் விற்கிற இடம் ஆதலால் நமது வைர வியாபாரிகள் மட்டும் போதும், 5 மாநிலங்களில் நமது அன்பர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர் அவர்களை கொண்டு நடத்தினால் கூட போதுமானது.
நமது தென்னிந்திய கூட்டமைப்பின் நோக்கம், சுத்த சன்மார்க்க வளர்ச்சி மட்டுமே, சுத்த சன்மார்க்க சங்க வளர்ச்சி மட்டுமே, இளைஞர்கள் வளர்ச்சி மட்டுமே, எக்காரணம் கொண்டும், சுயநலம், விளம்பரம், தனிநபர் ஆதிக்கம், அரசியல்தலையீடு யாம் உள்ளவரை இருக்காது, இருக்கவே இருக்காது, இது சத்தியம் சத்தியம்.
மேலும் விரைவில் நமது அலுவலகங்கள் 5 மாநிலத்திலும் திறக்கபடும், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும். அனைத்து பணிகளும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நம்ம எதுக்கு வந்தோம்னு தெரியாமல் ஏதோ வாழ்கிறோம் என்பது போல திக்குமுக்காடி வாழும் அனைவருக்கும் நமது தென்னிந்திய சுத்த சன்மார்க்க கூட்டமைப்பு ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் அனைவரையும், விருப்பம் உள்ளவர்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காத்தும் உடன் இருந்தும் வழி நடத்துவார்.