16/07/2020
தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ,கொரானா நோய் குறிகுணங்கள் அல்லது Influenza like illness உள்ளவர்கள் ,மருத்துவத்துறையில் உள்ளவர்கள்,அவர்களின் வீட்டில் இருப்பவர்கள் , நோயாளியிடம் தொடர்பில் இருந்தவர்கள் இந்த பட்டியலை குறைந்தது ஒரு வாரம் மேற்கொள்ளுங்கள்...
நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரே இரவில் உண்டாவது இல்லை என்பதே உண்மை...
இருந்தாலும்,நோயின் தன்மையை குறைக்கும் வழிமுறைகள்
காலை:
*நெல்லிக்காய் juice(சிறிது இஞ்சி சேர்க்கவும்)
*இட்லி சாம்பார்
*சப்பாத்தி ,வெஜிடபிள் குருமா போன்ற சத்தான உணவுகள்
*கபசுர குடிநீர் (தரமான மருந்து கம்பெனி)
பெரியவர்கள் 60மிலி
சிறியவர்கள் 30 மிலி அளவில்
*திரிபலா சூரண மாத்திரை 2
*அமுக்காரா சூரண மாத்திரை 2
11 மணி அளவில்
*சின்ன வெங்காயம் ,பூண்டு ,மிளகுத்தூள் அதிக அளவில் சேர்க்கப்பட்ட காய்கறி சூப்
அல்லது மட்டன் சூப் அல்லது சிக்கன் சூப்
(சின்ன வெங்காயம்,பூண்டு ,மிளகுத்தூள் அதிகம் சேர்த்து)
இரண்டு அல்லது மூன்று முட்டையின் வெள்ளைக்ரு
மதிய உணவு
*சத்தான உணவு
*காய்கறி பருப்பு கூட்டு இரண்டு வகை,
*இஞ்சி ,வெங்காயம் சேர்க்கப்பட்ட நீர்மோர்
எண்ணையில் பொறித்தவை, துரித உணவு தவிர்க்கவும்.
மாலை சிற்றுண்டி
பயறு வகைகளில் ஏதாவது
அல்லது பொட்டுக்கடலை
கபசுர குடிநீர் மேற்கூறியவாறு
இடை இடையே நிறைய. நீர் அருந்தவும்
இரவு உணவு
இட்லி, தோசை, சப்பாத்தி ஏதாவது ஒன்று
காய்கறி பருப்பு சேர்ந்த தொடு உணவுடன்
மஞ்சள், மிளகுத்தூள் கலந்த பால்
திரிபலா சூரண மாத்திரை 2
அமுக்கரா சூரண மாத்திரை 2
சளி இருமல் இருந்தால்
தாளிசாதி சூரணம் 3 கிராம். தேனில் இரண்டு வேளை
ஆடாதோடை மணப்பாகு
சேர்த்து கொள்ளலாம்...
முந்திரி, நிலக்கடலை போன்றவற்றை இடைஇடையே சேர்த்து கொள்ளலாம்...
மனித சமூகம் அடைந்த நாகரீகம் இத்தனை சாதனைகள் எல்லாம் மனித இனத்தின் கூட்டு உணர்வால் ,முயற்சியால் விளைந்தது...
எத்தனை இடர்கள் வந்ததாலும் மனிதத் தன்மையையும் ,மனிதர்களையும் இழக்காமல் இந்த இக்கட்டான சூழலை வெல்வோம்!
Gowthami Tamilarasan