04/08/2026
அகவெளியில் தொடர்ச்சியாக பல பயிற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து இயற்கை வழியில் காளான் வளர்ப்பு பயிற்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
காளான் வளர்க்கும் முறையை நம்மிடம் பகிர்ந்துகொள்பவர் திரு.வெ. லோகநாதன்.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்
இவர் 12 ஆண்டுகளாக காளாண் வளர்ப்பை தொழில் முறையாக செய்து வருவதோடு தம் அனுபவத்தை மற்றவர்களுக்கு கைமாற்றிக் கொடுத்தும் வருகிறார்.
இயற்கை வழியில் காளான் வளர்த்தல், நோய் மேலாண்மை மற்றும் சந்தை படுத்தல் போன்றவற்றை அவர் அனுபவத்திலிருந்து நம்முடன் பகிர்ந்து கொள்வார்.
பயிற்சியில் நாமே நேரடியாக செய்து பார்த்து நமக்குள் எழும் சந்தேங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
நம் தேவைக்கான காளான்களை நமது வீடுகளிலேயே வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும் மற்றும்
தொழில் முறையாக செய்ய விரும்புபவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்.
நாள்: 16.08.2026
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: அகவெளி வாழ்வியல் நடுவம்.
பிச்சினிக்காடு,
அத்திவெட்டி அஞ்சல்,
பட்டுக்கோட்டை.
மதிய உணவு, மரபு தின்பண்டங்கள், தேநீர், எழுதுபொருட்கள் வழங்கப்படும். பங்கேற்புச் சான்றிதழ் அளிக்கப்படும்.
முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு: 76 39 49 49 50