Dhanvandhiri Vaidyasala, Theni

Dhanvandhiri Vaidyasala, Theni Dhanvandhiri Vaidyasala is a reputed Ayush hospital Located in Theni, at the foothills of Western Ghats.
(4)

Started in 1970 by Dr.Murugesan and lead by Dr. Saravana Kumar till date.

ஆரோக்கியத்திற்கான fitness / weight loss group...!! ( 1 மாத யோகா, டயட் & பிட்னெஸ் பயிற்சிகள்.)போன லாக்டவுன் சமையத்தில  ஃப...
28/05/2026

ஆரோக்கியத்திற்கான fitness / weight loss group...!!
( 1 மாத யோகா, டயட் & பிட்னெஸ் பயிற்சிகள்.)

போன லாக்டவுன் சமையத்தில ஃபிட்னெஸ் க்ரூப் ஒன்னு வாட்சப் மூலமாக ஆரம்பிச்சு 100 நாட்கள் வரை அதை ரொம்ப வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதன் மூலமாக பல பேர் உடல் எடை குறைச்சாங்க. பல பேர் சர்க்கரை, பிபி, கொலஸ்ட்ரால் மாதிரியான வாழ்க்கை முறை நோய்களுக்கு கடிவாளம் போட்டு 'ஃபிட்' ஆனாங்க.

இந்த முறை 30 நாட்கள் பிட்னெஸ் சேலஞ்ச் செய்ய போறோம். 30 நாளில் உங்க உடல் எடையை 10% குறைப்பது திட்டம். போனஸாக செம்ம ஃபிட்டான அழகான உடல் அமைப்புக் கிடைக்கும். போன தடவை செய்ததை விட இன்னும் சிறப்பா சில கூடுதல் வசதிகள் இணைச்சிருக்கோம். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா என சகல விதமான ஆதரவு அமைப்புகளும் இருக்கும்.

# முழுக்க முழுக்க ப்ரொபஷனல் பயிற்றுனர்கள், மருத்துவர்கள் இணைந்து உங்களுக்கு வழிகாட்டுவாங்க.

# தினமும் 1 மணி நேரம் "ஆன்லைன் யோகா பயிற்சி" இந்த முறை இருக்கும்

# இது ஒரு பெய்டு க்ரூப். ஒரு மாத பிட்னெஸ் ஆலோசனை, ஆன்லைன் யோகா, உடற்பயிற்சி குறிப்புகள், டயட் ஆலோசனைக்கும் பக்க விளைவில்லாத ஒரு மாத ஹோமியோபதி மருந்துக்கும் சேர்த்து ரூ. 8000 நீங்கள் செலுத்த வேண்டும்.

# இந்த குழுவில் இணைபவர்களை தனியாக ஒரு வாட்சப் குழு & பேஸ்புக் குழுவில் இணைத்து அதன் மூலமாக வழிகாட்டப்படும்.

# இந்த குழு வரும் 02. ஜூன் முதல் செயல்படும்.

உடல் எடை குறைப்பு / ஃபிட்னெஸை க்ரூப்பில் இணைய உங்க விருப்பத்தை 7358560776 / 9842775242 க்கு வாட்சப் செய்யவும்.

நன்றி.... ❤

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

To buy our products online pls visit www.dhanvandhirivaidyasalatheni.com/shop/ for more details
- [ ]

நாம சாப்பிடும் உணவு வாயில ஆரம்பிச்சு மலக்குடல் வரை ஒரு பெரிய பயணம் போகும். நாம கண்டதை வாயில போடுவோம் ஆனா அது ஒவ்வொன்னையு...
28/05/2026

நாம சாப்பிடும் உணவு வாயில ஆரம்பிச்சு மலக்குடல் வரை ஒரு பெரிய பயணம் போகும்.

நாம கண்டதை வாயில போடுவோம் ஆனா அது ஒவ்வொன்னையும் தரம் / இனம் பிரிச்சு மாவு, கொழுப்பு, நார்சத்து, நல்லது கெட்டதுன்னு வகைபடுத்தி உடலுக்கு குடுக்கவும் வெளியே அனுப்பவும் செய்யும். இந்த பயணத்தில் பல்வேறு உறுப்புகள் வேலை செய்யும். அதில் முக்கியமானது இரைப்பை.

அல்சரின் ஆரம்ப கட்டமான 'Gastritis' இங்க தான் துவங்குது.

நாம சாப்பிடுற உணவு, மாவு பொருளா இருந்தா அது வாயில் உள்ள உமிழ்நீரில் சேர்ந்த உடனே செரிமானம் ஆக ஆரம்பிக்குது, அதுவே எண்ணெய் கலந்தது, கொழுப்பு அதிகம், மாமிசம்ன்னு அடர்த்தி அதிகமானதா இருந்தா அது செரிமானம் ஆக உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் முதல் மலக்குடல் வரை பயணிக்கனும்.

நடுவில, முழுங்குறதெல்லாம் போய் ரெஸ்ட் எடுக்கிற இடம் தான் இரைப்பை. இந்த இரைப்பை கொஞ்சம் கெட்டியான சுவர்களை கொண்டது, ஏன்னா உணவை செரிக்க சுரக்கும் அமிலம் நம்மளையே போட்டு பாத்துற கூடாதுல அதுக்கு தான் அந்த கெட்டி சுவர்.

அப்படி கெட்டி சுவரா இருந்தாலும், நேரம் காலம் இல்லாம கண்டதை உள்ள தள்ளுவது, நேரத்துக்கு சாப்பிடாம இருப்பது, முக்கியமா கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால அமிலம் கண்ணாபின்னான்னு சுரந்து சுவருக்கு மேலா இருக்கிற பூச்சு வீங்கிடும், அது தடித்து அதிக வாயுவை உற்பத்தி பண்ண ஆரம்பிக்கும். இதை தான் 'Gastritis'ன்னு சொல்றோம்.

வயிறு உப்பிசம், தலை சுற்றல், பசி இல்லாமை, பெரிய பெரிய ஏப்பம் மற்றும் காற்று பிரிதல், வயிற்று வலி இது கூட திடீர் எடை குறைதல் அல்லது அதிகரித்தலும் !! இருக்கலாம்.

பொதுவா ஆன்டாசிட்கள் (Gelusil, Ranitidine, Omez, etc etc) போட்டு இந்த நோயின் தாக்கத்தை நாம குறைச்சுட்டாலும், நம்ம வாழ்க்கை முறையை சரியா வச்சுக்கலைன்னா இது முற்றி அல்சர் வரை போகும். அதன் பின் புண்ணை ஆற்றுவதும் உடலை தேற்றுவதும் கடினம்.

வாழ்க்கை முறையை( நேரத்துக்கு சாப்பிடுவது, தூங்குவது, டென்சம் ஆகாமல் இருப்பது, கோலா போன்ற பானங்களை அளவாக அருந்துவது) சரியா வச்சுகிட்டா ஆரம்ப நிலையிலேயே இதை ஹோமியோபதி மருந்துகள் மூலமா குணப்படுத்தலாம். Hydrastis Q, Condurango Q, போன்ற ஹோமியோபதி மருந்துகள் ஒரு பக்க விளைவில்லாத ஆன்டாசிடாக வேலை செய்யும்.

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

To buy our products online pls visit www.dhanvandhirivaidyasalatheni.com/shop/ for more details
- [ ]

பருக்கள் நீங்கி முகம் பொலிவுற...    #முகப்பரு      #பருக்கள்
16/05/2026

பருக்கள் நீங்கி முகம் பொலிவுற...

#முகப்பரு #பருக்கள்

இது motion sickness அல்லது travel sickness. நம் காதுக்குள் இருக்கும் incus ,stapes, malleus என்கிற மூன்று எலும்புகள் தான...
16/05/2026

இது motion sickness அல்லது travel sickness.

நம் காதுக்குள் இருக்கும் incus ,stapes, malleus என்கிற மூன்று எலும்புகள் தான், நாம் நேராக நிற்பதற்கும் நமது உடம்பு தன்னை தானே பேலன்ஸ் செய்வதற்கு உதவுகின்றன. இந்த எலும்புகள் பரிணாம வளர்ச்சியில் தவழ்ந்து கொண்டிருந்த நம்மை நிற்க வைக்க, பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பேலன்ஸ் கற்று நம்ம ஜீனில் பதிந்து வைத்துள்ளன. அதற்கென ஒரு வேகமும் உள்ளது.

ஆனால் எஞ்சின் கண்டுபிடித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது என்பதால்... திடீரென உங்க உடம்பு வேகமா பயணிப்பதை பார்த்து இந்த எலும்புகள் குழம்பி, மூளையை குழம்புவதால் தலை சுற்றி வாந்தி ஏற்படுத்தி விடுகிறது. இது மாறுவதற்கு உடனடி தீர்வாக வாந்தியை நிறுத்தும் மருந்துகள் எடுக்கலாம். அல்லது நிறைய பயணித்து உடலை பழக்கலாம்.

இதே போல குழப்பம் விமான பயணத்திலும் (air sickness), கப்பல் பயணத்திலும் (sea sickness) சிலருக்கு ஏற்படுவது உண்டு. ரொம்ப வேடிக்கையான விஷயம் என்னன்னா.... கப்பலில் பணிபுரியும் மாலுமிகளுக்கு 6 மாதம் கப்பலில் இருந்து விட்டு நிலத்துக்கு வந்தவுடன் வாந்தி வருவதுண்டு... அது Land sickness...!!

இதுக்கு தீர்வு அந்த நேரத்தில் வாந்தி வராம இருக்க மருந்து எடுத்துக்கிறது தான். தொடர்ந்து பயணிக்கிறவங்களுக்கு உடல் சீக்கிரமே பழகிக்கும்.

ஹோமியோபதியில petroleum 200 என்னும் மருந்து தலைசுற்றலுக்கும் வாந்திக்கும் நன்றாக கேக்கும். மருந்து வாங்க 9842775242க்கு வாட்சப் செய்யவும்.

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details

மஞ்சள் காமாலை என்பது ஒரு வியாதி அல்ல. அது ஒரு அறிகுறி மட்டுமே..!தண்ணி அடிக்கிறதால ஈரல் வீங்கி வருவது alcoholic hepatitis...
16/05/2026

மஞ்சள் காமாலை என்பது ஒரு வியாதி அல்ல. அது ஒரு அறிகுறி மட்டுமே..!

தண்ணி அடிக்கிறதால ஈரல் வீங்கி வருவது alcoholic hepatitis. வைரஸ் தாக்குதலால் கல்லீரல் அழுகி வருவது hepatitis B, இதை போல சாதாரண செரிமான பிரச்சனையில் இருந்து கல்லிரல் கேன்சர் வரை எக்கச்சக்க காரணங்களில் மஞ்சள் காமாலை வரலாம்.

எதுக்கு என்ன வைத்தியம் செய்யணும்ன்னு பார்த்து செய்யணும். இந்த கீழாநெல்லி சாறு, இஞ்சி சாறு, எண்ணெய் இல்லாத பத்தியம் சூடு போடுவது, கையில கங்கனம் கட்டுவது, உச்சந்தலையில பச்சிலை கட்டுவது போன்ற நாட்டு வைத்தியம் எல்லாம் physiological jaundice எனப்படும் ஒரு சாதாரண மஞ்சள் காமாலைக்கு மட்டும் தான் கேக்கும். மத்ததுக்கு நீங்க மருத்துவமனை தான் போகணும். அவங்க சொல்றதை ஒழுங்கா கேக்கணும்... இல்லேன்னா சிக்கல் தான்.

எல்லா மஞ்சள் காமாலையும் ஒரே மாதிரி டீல் செய்ய கூடாது. உங்க ரிப்போர்ட்ஸ் 9842775242க்கு வாட்சப் செய்தால் என்ன பிரச்சனைன்னு பார்த்து உங்களுக்கு வழிகாட்டுறேன். பிஸியாலஜிக்கல் ஜாண்டிஸாக இருந்தால் மட்டும் கீழாநெல்லி சாறு நன்றாக கேக்கும்.

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details

கேள்வி: டாக்டர்... பைல்ஸ், பௌத்திரம்..வித்தியாசம் என்னவென்று சொல்லுங்க..தெரிந்துகொள்கிறோம்டாக்டர் சரவ் பதில்: பவுத்திரம்...
16/05/2026

கேள்வி: டாக்டர்... பைல்ஸ், பௌத்திரம்..வித்தியாசம் என்னவென்று சொல்லுங்க..தெரிந்துகொள்கிறோம்

டாக்டர் சரவ் பதில்:

பவுத்திரம் என்பது மலவாயில் வரும் கட்டி..! சீழ் பிடித்து மிகுந்த சிரமப்படுத்தும். புண் ஆறினாலும் ஒரு பை போல உருவாகி என்னிக்கு வேண்டுமானாலும் மறுபடி வரும். ஹோமியோ மருந்துகளால் நானே நிறைய சரி செய்திருக்கிறேன். ஆனால் இதற்கு ஆப்ரேஷன் தான் முழு தீர்வென்று மாடர்ன் மருத்துவம் சொல்கிறது. Maybe அதிகமா வந்துட்டே இருந்தால் ஆபரேஷன் செய்யலாம்.

மூலம் என்பது மலவாயில் இருக்கும் இரத்தக்குழாய் ஊதி, தடிப்பதால் ஏற்படும் இரத்த குழாய் பிரச்சனை. (varicose vein) ஆரம்ப நிலையில் மருந்துகளால் உணவு கட்டுப்பாட்டினால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொண்டால் தொந்தரவு தராது. முற்றின நிலையில் ஆபரேஷனே தீர்வு....!

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details

#பைல்ஸ் #பௌத்திரம்

15/05/2026

நெஞ்சு எரிச்சல், வாயு, மலச்சிக்கல், புட்-பாய்சன், வாய் துர்நாற்றம், என குடல் சம்பந்தமான பிரச்சனைகள் சிலருக்கு பெரும் தொல்லை குடுக்கும்..., வாழ்வு முறையில் நமக்குள்ள Hurry, worry & curry, ஆகியவற்றால் ஏற்படும் குடல் அழற்சி, வீக்கம், கேஸ்ட்ரைடிஸ்...

இதெல்லாம் சரி பண்ண நாம கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்கம்..., மருந்துகள், வாழ்வு முறைகள் என அனைத்தையும் முழுசா அலசிருக்கோம். அனைத்து குடல் பிரச்சனைகளுக்குமான பதில் இதில் கிடைக்கும்... பாருங்க...

https://www.youtube.com/watch?v=uDyMPWGRN9o...

#மலச்சிக்கல் #வாயு #நெஞ்சுஎரிச்சல்

கிட்னி ஸ்டோன் எப்படி உருவாகுது தெரியுமா??ஒரு வடிகட்டி இருக்கு.... அதில் உள்ள துளைகளில் ஏதாவது ஒன்று அடைச்சுடுச்சுன்னு வச...
15/05/2026

கிட்னி ஸ்டோன் எப்படி உருவாகுது தெரியுமா??

ஒரு வடிகட்டி இருக்கு.... அதில் உள்ள துளைகளில் ஏதாவது ஒன்று அடைச்சுடுச்சுன்னு வச்சுக்கோங்க, அப்போ என்ன ஆகும்?? அது வடிகட்ட வேண்டிய பொருள்களில் சிலவற்றை அதுவே பிடிச்சு வச்சுக்கும் இல்லியா?? அப்படி தான்... கிட்னி என்னும் மெகா வடிகட்டியில ஏற்படும் சில 'தொழில்நுட்ப' கோளாறுகளால அது உப்புகரைசல்களை சேர்த்து பிடிக்க, கிட்னி ஸ்டோன் உருவாகுது... !

அது என்னென்ன செய்யும்ங்கறதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். செமயா வலிக்கும், நீர் இறங்காது, அதிக பட்ச பாதிப்பா கிட்னி செயலிழந்து போகலாம். நிற்க... இதிலுள்ள தவறான நம்பிக்கைகள், தீர்வுகள் மட்டும் பார்க்கலாம்..

பொதுவா எல்லோரும் நினைக்கிறது கேல்சியம் உள்ள உணவுகள் சாப்பிட்டா ஸ்டோன் உருவாகும்ன்னு ஆனால் பொடாசியும், மெக்னீசியம்ன்னு பல்வேறு உப்புகள் கல்லாக உருவாக கூடும். இது வடிகட்டில உள்ள பிரச்சனை இல்லியா அதனால சில ஏரியாக்களில் கிடைக்கும் தண்ணீர் மட்டும் குடிச்சா கூட ஸ்டோன் உருவாகலாம்..!! அதனால உணவுக்கட்டுப்பாடு என்பது பெரிசா பலன் தராது. தண்ணீர் கூட குடிக்காம இருக்க வேண்டி வரும். சரி செய்ய வேண்டியது கிட்னியின் செயல்பாட்டை..!

ஒரு நிமிடத்துக்கு 60 வினாடிகள் ஆனா இதயம் 72 தடவை துடிக்கும்...! ஒவ்வொரு முறை இதயம் துடிக்கையில் கிட்னி வடிகட்டுவதும் நிகழும்...! அப்போ ஒரு நாளைக்கு எத்தனை தடவை வடிகட்டும்ன்னு பாத்துகோங்க. அதனால கல்லை எடுத்து விட்டாலும் அடுத்த கல் உருவாக ஒரு நாள் போதும்...!! அதனால கல்லை எடுத்தா பத்தாது. வடிகட்டியை சரி செய்யனும்....!!

கல் அடைத்திருக்கும் பாதையில் நீர் வெளியேற வழி இல்லேன்னா கிட்னி உப்பி பெருத்து செயலிழக்க வாய்ப்பிருக்கு. இரண்டு பக்கமும் கல் உருவாகி நீர் இறங்க வழியே இல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் வாய்ப்பிருக்கு. அவசர சிகிச்சையாக கருதி பார்க்க வேண்டிய அபாயகரமான நிலை அது. ஆனால் கிட்னி உள்ள இருக்கிற கல்லை வாய் வழியா உறிந்து எடுக்கும் காமடி எல்லாம் நம்ம ஊர்ல சர்வ சாதாரணம். கிட்னியில் இருந்து கல்லை உறிந்து எடுக்கனும்ன்னா அதுக்கு சிறுநீர் வெளியேறும் பாதை மூலமா வேணா முயற்சி செய்யலாம். அதுக்கு ஒரு முரட்டுத்தனமான மூளையும், அரைவேக்காட்டுத்தனமான அறிவும் வேணும்.

வாழைதண்டு சாறு, நெருஞ்சி முள் கஷாயம் போன்றவை கல்லை கரைக்க உதவும்..! அவை டையூரடிக்குகள். அதே போல நிறைய சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் இதில் அட்டகாசம் செய்யும். 2முதல் 45 நாளில் கல்லை கரைத்து விடலாம். ஆனால் வடிகட்டி(கிட்னி)யை சரி செய்ய மருத்துவரை அனுக வேண்டும். கிட்னியின் நிலையை தெரிந்து தான் மருந்து கொடுக்க வேண்டும். ஒரு வேளை இரண்டு பக்கமும் அடைப்பு இருந்தால் அந்த நேரத்தில் கல்லை கரைத்து வெளியேற்றும் டையூரட்டிக்குகளால் ஆபத்து வரலாம். அந்த நிலையில் சர்ஜரி தான் சரி... !

கிட்னி ஸ்டோனை கரைக்க நம்ம ஹாஸ்பிடல்ல கிடைக்கிற யூரிஸ்டோன் மருந்து அருமையா வேலை செய்யும். நாள்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் எடுத்துக்கலாம். பக்க விளைவுகள் இருக்காது.

Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242

Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details

Address

Aranmanaipudhur Road
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when Dhanvandhiri Vaidyasala, Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhanvandhiri Vaidyasala, Theni:

Shortcuts

Share

Category