மன நலமும் ஆலோசனையும்

மன நலமும் ஆலோசனையும் தடை தாண்டி முன்னேறி செல். உன்னை வெல்ல யாரும் இல்லை.

12/07/2026

உலகத்திற்கு
ஒளி தந்த பலர்…
தங்கள் வாழ்க்கையை
இருளோடு கடந்தவர்கள்

மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டியவர்கள்

தங்கள் கண்ணீரை மட்டும்
அமைதியின் இருளில்
துடைத்துக்கொண்டவர்கள்

வாழ்ந்து மறைந்தவர்களிலும்
அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள்.

இன்றும்
மற்றவர்களின் வாழ்வில்
ஒளி ஏற்றிக்கொண்டிருக்கும்
பலரின் உள்ளங்களிலும்
சொல்லப்படாத இரவுகள்
இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்தக் கவிதை
அப்படிப்பட்ட
அமைதியான ஒளிகளுக்கான
ஒரு சிறிய வணக்கம்.
👇👇👇👇👇

திரைக்குப் பின்னால்
⚘️⚘️⚘️⚘️

உலகம்
கொஞ்மாவது சிந்திக்க வேண்டும்…

மனிதன்
மனிதனை நேசிக்க வேண்டும்…

வாழ்க்கை
இன்னும் கொஞ்சம் அழகாக வேண்டும்…
என்ற ஆசையோடு,

பலர்
தங்கள் வாழ்நாளையே
விதையாக விதைத்துச் சென்றார்கள்.

மகான்கள்…
கலைஞர்கள்…
கவிஞர்கள்…
சமூகச் சிந்தனையாளர்கள்…

அவர்கள்
புத்தகங்களை மட்டும் எழுதவில்லை.
மனித மனங்களையும்
எழுதினார்கள்.

பாடல்களை மட்டும் படைக்கவில்லை.
உடைந்து கிடந்த
இதயங்களுக்கு
மீண்டும் துடிக்கக்
கற்றுக்கொடுத்தார்கள்.

அவர்கள்
தங்கள் சிந்தனைகளை
விற்றவர்கள் அல்ல…
தானமாக வழங்கியவர்கள்.

அவர்கள்
அறிவை மட்டும் பகிரவில்லை…
நம்பிக்கையையும்
பகிர்ந்தார்கள்.

ஆனால்…
திரைக்குப் பின்னால்
அவர்களுக்கும்
ஒரு வாழ்க்கை இருந்தது.
அங்கு
கைத்தட்டல்கள் இல்லை.
சில நேரங்களில்
கை பிடிக்க
ஒரு மனிதர் கூட இல்லை.

உலகம்
அவர்களின் சிரிப்பை மட்டுமே பார்த்தது.
அந்தச் சிரிப்புக்குப் பின்னால்
எத்தனை இரவுகள்
அழுகையால் நனைந்தன என்பதை
யாரும் அறியவில்லை.

அவர்கள்
மற்றவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள்.
ஆனால்
தங்களின் கண்ணீரை
அமைதியோடு
துடைத்துக்கொண்டார்கள்.
மற்றவர்களின் மனங்களை
ஆற்றுப்படுத்தினார்கள்.
தங்கள் மனதை மட்டும்
காலத்தின் தோளில்
சாய்த்துவைத்தார்கள்.

அதனால்தான்,
அவர்களின் படைப்புகளில்
வெறும் வார்த்தைகள் இல்லை…
வாழ்ந்து கடந்து வந்த
வலிகளின் வாசனையும் இருக்கிறது.

உண்மையான கலைஞன்,
தன் துயரத்தை
உலகத்தின் துயரமாக மாற்றுவான்.
உண்மையான கவிஞன்,
தன் கண்ணீரை
மற்றவர்களின்
ஆறுதலாக மாற்றுவான்.

உண்மையான மனிதன்,
தன் காயங்களை
பழிவாங்கும் ஆயுதமாக அல்ல…
பிறர் காயப்படாமல் இருக்க
ஒரு பாடமாக மாற்றுவான்.

அதனால்தான்,
காலம்
அவர்களின் உடலை
மண்ணுக்குள் புதைத்தாலும்,
அவர்களின் சிந்தனைகளை
புதைக்க முடியவில்லை.

அவர்கள்
இறந்துவிடவில்லை…
அவர்கள் வாழ்ந்தது...
ஆண்டுகளால் அல்ல,

மற்றவர்களுக்கு
வாழக் கற்றுக்கொடுத்த
அன்பால்..

இறந்தும்
இன்றும் உயிரோடு
இருக்கிறார்கள்.

இருப்பவர்கள் இன்றும்
மனங்களில்
உயிராய் வாழ்கிறார்கள்.

ஒரு மனிதனின் மகத்துவம்,
அவன்
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்
என்பதில் இல்லை…

தன் வலியைத் தாண்டியும்
எத்தனை மனிதர்களுக்கு
ஒளியாக இருந்தான்
என்பதில்தான் இருக்கிறது.
🪻🪻🪻🪻🪻

✍️ ... அஸ்ஹர் அன்ஸார்
(இலங்கை)

20/06/2026

எண்ணமும் செயலும்
🌼🌼🌼🌼🌼🌼🌼
மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் எண்ணங்களும் செயல்களும் இரண்டும் இன்றியமையாதவை. நல்ல, பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் மனிதனை உயர்வான பாதையில் வழிநடத்துகின்றன. ஆனால் எண்ணங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அந்த எண்ணங்களை செயல்படுத்தும் முயற்சியும் உழைப்பும்தான் விரும்பிய பலனைப் பெற்றுத் தருகின்றன.

ஒருவர் *“நான் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும்”* என்று எண்ணுவது ஒரு நல்ல தொடக்கமாகும். அந்த எண்ணம் அவருக்கு ஒரு இலக்கையும் ஊக்கத்தையும் வழங்குகிறது. எனினும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதுமானதல்ல. அதற்காக திட்டமிட்டு படித்து, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அந்த எண்ணம் வெற்றியாக மலரும்.

அதேபோன்று, *“நான் சம்பாதித்து ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்”* என்ற எண்ணம் மனிதநேயமும் கருணையும் நிறைந்த உயர்ந்த சிந்தனையாகும். ஆனால் அந்த விருப்பம் நடைமுறையில் நிறைவேற வேண்டுமெனில், அதற்கான திறன்களை வளர்த்து, உழைத்து வருமானம் ஈட்டி, பிறருக்கு உதவும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

உண்மையில், எண்ணங்கள் ஒரு பயணத்தின் தொடக்கம் போன்றவை. அவை நமக்கு திசையைக் காட்டுகின்றன. ஆனால் அந்தப் பாதையில் நடந்து இலக்கை அடையச் செய்வது நமது செயல்களே. விதை மண்ணில் விதைக்கப்பட்டால் மட்டும் மரமாக மாறாது; அதற்கு நீர், பராமரிப்பு மற்றும் காலம் தேவைப்படுவது போல, நல்ல எண்ணங்களும் செயலின் மூலம் மட்டுமே பயனளிக்கின்றன.

எனவே, நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குவதோடு நிறுத்தாமல், அவற்றை செயலாக்கும் மன உறுதியையும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மனிதனின் கனவுகளை நனவாக்குவது எண்ணங்கள் அல்ல, எண்ணங்களுடன் இணைந்த விடாமுயற்சியான செயல்களே ஆகும்.

எண்ணம் ஒரு விதை என்றால், செயல் அதன் வளர்ச்சி; செயல் இல்லாத எண்ணம் கனவாகவே இருந்து விடும்.
🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

✒️அஸ்ஹர் அன்ஸார்
ஆலோசனை உளவியல் நிபுணர்

20/06/2026

ஒரு வேரின் காவியம்
▫️▫️▫️▫️

தந்தை மரத்தின் வேர்கள் அல்ல,
மரத்திற்கே தெரியாத அதன் உயிர்நாடிகள்.

அவர் பூக்களைப் போல மலர்வதில்லை,
அவரின் வாழ்க்கை மணம் வீசுவதற்காக அல்ல,
மற்றவர்கள் மலர்வதற்காக.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வேர்களைப் போல,
அவரின் வலிகளும் வெளிச்சம் காண்பதில்லை.
அந்த இருட்டில்தான்
ஒரு குடும்பத்தின் விடியல் உருவாகிறது.

தன் பசியை மறைத்து
பிள்ளையின் தட்டில் உணவை நிரப்பும் கை...
தந்தையின் கை.
தன் கனவுகளை
அடக்கம் செய்து
பிள்ளையின் எதிர்காலத்தை
எழுப்பும் இதயம்..
தந்தையின் இதயம்.

அவர் பேசும் வார்த்தைகளைவிட
பேசாமல் விழுங்கும் பெருமூச்சுகளே அதிகம்.

அவர் வடிக்கும் வியர்வைத்துளிகளைவிட..
உள்ளுக்குள் சிந்தும் கண்ணீர் தூளிகளே அதிகம்.

தன் வாழ்க்கையை ஆழமாகப் புதைத்து
பிள்ளைகளின் வாழ்க்கையை உயரமாக வளர்க்க பாடுபடுபவர்
தந்தை....

குடும்பம் என்ற ஆலமரம்
வானத்தைத் தொட முயல்கிறது என்றால்,
அதன் வேர்கள் பாதாளம் வரை இறங்கியிருக்கும்.
அப்படித்தான் ஒரு தந்தை.

அவர் தனக்காக வாழ்ந்த நாட்கள் குறைவு..
குடும்பத்திற்காக வாழ்ந்த நாட்களே அதிகம்.
அவர் வாங்கிய காயங்களின் எண்ணிக்கையை
அவர் கூட அறிந்திருக்க மாட்டார்,
ஒவ்வொரு காயத்தையும்
"கடமை" என்று பெயரிட்டு மறந்துவிடுகிறார்.

இந்த உலகம் தாயின் அன்பை கவிதையாக்குகிறது,
தந்தையின் அன்பு
கவிதை எழுத நேரமில்லாத தியாகமாகவே இருக்கிறது.

இன்று தந்தையர் தினம்.

நம் நிழலுக்காக
வெயிலில் நின்ற அந்த மனிதனை நினைவுகூர்வோம்.
நம் சிரிப்புக்காக
தன் சோகங்களை மௌனமாக புதைத்த அந்த இதயத்தை வாழ்த்துவோம்.

🌷🌷🌷🌷🌷🌷
✒️அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

02/01/2026

ஏழ்மையில் 'நாம்' ஆனோம்..
பணத்தில் 'நான்' ஆனோம்..
▪️🔸▪️🔸

ஏழைகளாக இருந்தபோது
"ஒற்றுமை"
எம்மோடு குடியிருந்தது.
பணம் வந்த நாளில்
அது மெதுவாக
வாசலைத் தாண்டிச் சென்றது.

ஏழ்மையில்
ஒருவருக்கொருவர்
தேவைப்பட்டனர்.
கைகளை ஒன்றோடு ஒன்று
கோர்த்து நின்றனர்.

பசியின் நாட்களில்
சோற்றோடு சேர்த்து
அன்பும் பகிரப்பட்டது.
வலியின் வேலையில்
இதயங்கள் ஒன்றாக துடித்தன.
ஒற்றுமை ஓடிப்போகாமல்
ஓங்கி வளர்ந்தது.

பணம் வந்தபின்
தேவை குறைந்தது,
"நான்” என்ற அகங்காரம் உயர்ந்தது.
“நாம்” என்ற மனிதத்துவம் தாழ்ந்தது.

நெருக்கம் மனித இதயங்களை
விட்டு விலகியது...
பணத்தின் மார்பில்
ஆசையோடு சாய்ந்தது.

நம்பிக்கை உறவுகளை
விட்டுப் பிரிந்தது...
பெருமையின் வாசலில்
குடிபுகுந்தது.

“தனியாகச் சமாளிக்கலாம்”
என்ற எண்ணம் பிறந்தது,
உறவுகள் தேவையற்ற
பொருள்களானது.

வீடுகள் உயர்ந்தன,
இதயங்கள் தாழ்ந்தன.
பொருள்கள் பெருகின,
பந்தங்கள் குறைந்தன.

ஏழ்மை எம்மை
ஒன்றிணைத்தது.
பணம் எம்மை
தனிமைப்படுத்தியது.

ஏழ்மை *"நாம்'* என்று
சொல்லச் செய்தது.
பணம் *'நான்'* என்று
காட்டச் செய்தது.

ஏழ்மை பகிர்வை
கற்றுத் தந்தது.
பணம் தனிமையைப்
பெற்றுத் தந்தது.
▫️▫️▫️▫️
✒️.. அஸ்ஹர் அன்ஸார்

(பணம் கூடாது என்பதல்ல,
பணம் வந்ததும்
“நாம்” மறந்து
“நான்” ஆகிவிடக்கூடாது)

*சரியான சிந்தனை*எம் சிந்தனை எம்மை நகர்த்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் நகரும் பாதை அழகானதாக இருக்க வேண்டும்...
14/11/2024

*சரியான சிந்தனை*

எம் சிந்தனை எம்மை நகர்த்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாம் நகரும் பாதை அழகானதாக இருக்க வேண்டும் என்றால் எமக்குள் இருந்து உறுதியான, நம்பகமான, ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக வேண்டும்.

நாம் ஒரு விடயத்தில் அச்சமோ, சலனமோ இல்லாமல் தைரியமாக முடிவெடுக்க இந்தச் சிந்தனை எமக்கு கட்டாயம் இருக்க வேண்டியுள்ளது. எமது முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பாளர்கள்.
மற்றவர்கள் எந்த கருத்தோட்டத்தை எங்களுக்குள் செலுத்த முயன்றாலும்...
எந்த விடயங்களை செய்ய வைக்க எந்த வழிகளில் எங்களை தூண்டினாலும்..
எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.
இது எம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு திறமை.

எமக்கு கிடைக்கும் தகவல்களை அப்படியே நம்பிவிடாமல்,
அவற்றை
ஆராய்ந்து, மதிப்பீடு செய்து,
அனுமானங்களை அடையாளம் காண்டு,
முன்னோக்குகளைக் கருத்தில் கொண்டு
சான்றுகள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் தகவலறிந்து
தீர்ப்புகளை வழங்கும் ஆற்றல் எம்மிடம் இருக்க வேண்டும்.

அடிக்கடி மாறிவரும் இந்த உலகில், ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனும் பெற்றவர்களாக நாம் எம்மை மாற்றிக் கொண்டால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப அவ்வாறே சமூக வாழ்விலும் மிகப் பெரிய வெற்றியை அடையலாம்.

நாம் ஒவ்வொருவரும் உயர்வான மனிதர்கள் என்பதால் எம்மிடம் நல்ல சிந்தனைத் திறன்கள் இருக்கின்றன.
ஆதலால் எமது ஆக்கபூர்வமான சிந்தனையை முன்வைத்து தைரியமான மனநிலையுடன் பயணிக்கும் நல்ல மனிதர்களாக எங்களை மாற்றிக் கொள்வோம்.
எங்கள் பிள்ளைகளையும் பயனுள்ள சிந்தனைகள் நிறைந்த மனிதர்களாக மாற்றியமைக்க வழிகாட்டுவோம்.

➖😊😊😊😊➖
✍🏼 அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

சில சொல்ல வேண்டிய.. ஆனால் சொல்லமுடியாத...காயங்களாலும் சுமைகளாலும் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருந்து போராடுகிறவர்க...
04/11/2024

சில சொல்ல வேண்டிய..
ஆனால்
சொல்லமுடியாத...
காயங்களாலும் சுமைகளாலும்
மூடப்பட்ட கதவுகளுக்குப்
பின்னால் இருந்து போராடுகிறவர்களாக நாம் அனைவரும் இருக்கலாம்.

வாழ்கை என்பது அப்படித்தான்.
எப்போதும் ஒரு சவாலாக
இருப்பது தான் வாழ்க்கை.
மனித வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையும் அதுதான்.

வாழ்கை என்பது
என்ன சவால்களை சந்திக்கிறோம்,
என்ன சுமைகளை சுமக்கிறோம்,
என்பது பற்றியதல்ல.

நாம் சந்திக்கும் சவால்களுக்கும்
நாம் அனுபவிக்கும்
சுமைகளுக்கும்
எப்படி முகம் கொடுக்கிறோம்..
அவற்றிலிருந்து வெளிவர
என்ன செய்கிறோம் என்று
சரியாக புரிந்து,
சரியாக உணர்ந்து,
சரியாக முடிவெடுத்து,
சரியாக வாழ்வது பற்றியதாகும்.
➖➖➖➖➖
✍🏼 அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

*திறன்கள்*அன்பர்களே...!நண்பர்களே...!நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்ற நற் பிரார்த்தனையுடன்...?உங...
27/10/2024

*திறன்கள்*

அன்பர்களே...!
நண்பர்களே...!
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்ற நற் பிரார்த்தனையுடன்...?

உங்களிடம் பின்வரும் திறன்கள் உள்ளனவா என்று தயவுசெய்து பரிசீலித்துப் பாருங்கள்.
அவை உங்களிடம் இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் உண்மையிலேயே சிறந்தவர். பெறுமதியானவர்.

*1. சிந்திக்கும் திறன்:*
சரி எது, பிழை எது, என்பதை சரியாக பிரித்தறிவது, சவால்களை முறையாக சந்திப்பது பற்றி யோசிப்பது, பல்வேறு கோணங்களில் சிக்கல்களை நோக்குவது,
ஆக்கப்பூர்வமான வழியில் புதிய நுட்பங்களை உருவாக்குவது, பொருத்தமான முடிவுகளை எடுப்பது என்பன இதில் அடங்கும்.

*2. சமூகத் திறன்:*
ஆரோக்கியமான உறவுகளை எவ்வாறு வளர்ப்பது, பயனுள்ள வழிகளில் எவ்வாறு தொடர்புகொள்வது, மற்றவர்களுடன் எவ்வாறு வெற்றிகரமாகப் பழகுவது என்பதை அறிவது இதில் அடங்கும்.

*3. உணர்ச்சித் திறன்:*
உங்களுக்குள் உருவாகும் உணர்ச்சிகளை திறம்பட கையாள்வது, அமைதியை உணர்வது, நீங்கள் யார் என்பதை அறிவது இதில் அடங்கும்.

இந்த மூன்றும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மிகவும் முக்கியமான திறன்களாகும்.
இந்த திறன்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகவும் பயனும் பெறுமதியும் மிக்கவர்.
இந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்கள் மிகவும் மரியாதையும் பணிவும் கொண்டவர்.
➖➖➖➖
✒️ அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

*நேரம் விலைமதிப்பற்ற நாணயம்.*        ⏰⏰⏰நேரம் தான் நமது வாழ்க்கை. அதில் தான் நாம்  பயணம் செய்கின்றோம்.ஆனால் செய்ய வேண்டி...
25/10/2024

*நேரம் விலைமதிப்பற்ற நாணயம்.*
⏰⏰⏰

நேரம் தான் நமது வாழ்க்கை. அதில் தான் நாம் பயணம் செய்கின்றோம்.
ஆனால் செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகளை செய்து முடிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று சொல்கின்ற பலரை நாம் சந்தித்து இருக்கலாம்.
'தங்கள் நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருப்பது தான் அவர்கள் இப்படி சொல்வதற்கான பொதுவான காரணமாக கருதலாம்.
இதில் உள்ள மிகவும் மோசமான விடயம் எதுவென்றால் *'நேரம் இல்லை'* என்று சொல்லிச் சொல்லி காலம் கடத்துவது காலப் போக்கில் ஒரு பழக்கமாக மாறி செய்ய வேண்டிய பல விடயங்களை செய்ய விடாமல் ஆக்கிவிடுவதாகும். இதனால் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய, மிகவும் முக்கியமான பல விடயங்கள் எங்களை அறியாமலே முக்கியத்துவம் அற்றவையாக ஆகிப்போவதை பலர் மரணிக்கும் வரை புரிந்து கொள்வதில்லை.
⏰⏰⏰⏰

✒️அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

*நல்ல உறக்கம்*     😴😴😴😴'நல்ல' உறக்கம் என்றால் என்ன?பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் உ...
16/10/2024

*நல்ல உறக்கம்*
😴😴😴😴

'நல்ல' உறக்கம் என்றால் என்ன?

பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் உறக்கம் தேவை என்று அடிக்கடி சொல்லக் கேட்கிறோம்.
ஆனால் நல்ல உறக்கம் என்பது எத்தனை மணிநேரம் உறங்குகிறோம் என்பதைப் போலவே எமது உறக்கத்தின் தரத்தை பொருத்தும் இருக்கிறது. ஒவ்வொரு செயலில் ஒவ்வொரு பொருளில் தரம் இருப்பது போன்று உறக்கம் அதன் தரத்தில் தீர்மானிக்க படுகிறது.

தரமான உறக்கம் அல்லது நல்ல உறக்கத்தின் தன்மை பெரும்பாலான மக்கள் படுக்க ஆரம்பித்து (சுமார் 30 நிமிடங்களுக்குள்) உறக்கம் வருவதில் தொடங்குகிறது.

▪️உறங்கிய பிறகு இடைக்கிடையே எழுந்திருக்காமல் நீண்ட நேரம் உறங்குவது,
▪️ஆரோக்கியமாக விழித்தெழுவது,
▪️விழித்தெழுந்ததும் நல்ல புத்துணர்வை பெறுவது,
▪️அன்றைய நாளுக்கு சுறுசுறுப்புடன் தயாராகுவது
போன்ற எல்லாம் நல்ல உறக்கத்தின் சில முக்கியமான அறிகுறிகளாகும்.

நீங்கள் ஒரு இரவில் குறைந்தது ஏழு மணிநேரம் புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தைப் பெறுகிறீர்கள் என்றால் குறிப்பாக பகல் காலங்களில் அதிக தூக்கத்தை அல்லது தூக்க மயக்கத்தை உணரும் நிலையை அனுபவிக்க மாட்டீர்கள். பகல் நேரங்கள் எப்பொழுதும் ஊக்கம் உற்சாகம் கொண்டதாக இருக்கும்.

ஆனால்
▪️நீங்கள் பகல் நேரத்தில் உடல் ரீதியாக சோர்வை உணர்கிறீர்கள் என்றால்....
▪️பகல் நேரங்களில் தூங்க வேண்டும் என்ற உணர்வை அடிக்கடி உணர்கிறீர்கள் என்றால்..
▪️அப்படியே உறங்கினாலும் உங்கள் உறக்கம் புத்துணர்ச்சி தருவதாக இல்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால்...
உங்கள் இரவுறக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஒழுங்கீனங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம்.

இங்கு குறிப்பிட்டது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் அனுபவிப்பதாக இருந்தால் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை நாடி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது என்பதை கரிசனையுடன் கருத்தில் நினைவுபடுத்துகிறோம்.
➖➖➖➖

✒️ *அஸ்ஹர் அன்ஸார்*
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

06/09/2024

எம்மை நகர்த்துவோம் ஆம்..! எம்மை முன்னோக்கி நகர்த்துவது எப்படி? அல்லது இலக்கை அடைவது எப்படி? அது ஒன்றும் பெரிய வி.....

Address

Kandy
11144

Alerts

Be the first to know and let us send you an email when மன நலமும் ஆலோசனையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to மன நலமும் ஆலோசனையும்:

Shortcuts

Share