MIND FLOW

Directions

MIND FLOW Professional counseling and therapy center in Nintavur, Sri Lanka, dedicated to guiding you toward mental clarity, emotional well-being, and personal growth.

"Bloom your mind, win your life."

🧠 மனநலம் என்பது ஆடம்பரமல்ல; அது நம் வாழ்வின் அடிப்படைத் தேவை!உடல் நலத்தைப் பேணுவதுபோல் மனநலத்தையும் பேணுவோம். மனதில் உள்...
10/10/2026

🧠 மனநலம் என்பது ஆடம்பரமல்ல; அது நம் வாழ்வின் அடிப்படைத் தேவை!

உடல் நலத்தைப் பேணுவதுபோல் மனநலத்தையும் பேணுவோம். மனதில் உள்ளதைப் பேசுவோம்; தேவைப்படும்போது உதவி கேட்போம். மனநலத்தைப் பற்றிப் பேசுவது பலவீனமல்ல, அது தைரியம்! 🌿

🌍 உலக மனநல தின நல்வாழ்த்துகள்!

✍️ Ahsan Ina’amy | உளவியலாளர்
Mind Flow Counseling & Therapy Center 💚

#மனநலம் #மனநலவிழிப்புணர்வு

Happy Children's Day
30/09/2026

Happy Children's Day

ஒரே முடிவு அல்ல, சரியான முடிவு: Heuristic Problem Solving என்றால் என்ன? குறுக்கு வழி சிந்தனை என்றால் என்ன? அது எப்போது எ...
10/09/2026

ஒரே முடிவு அல்ல, சரியான முடிவு: Heuristic Problem Solving என்றால் என்ன?

குறுக்கு வழி சிந்தனை என்றால் என்ன? அது எப்போது எமக்கு உதவுகிறது? எப்போது ஏமாற்றுகிறது? என்பதை பற்றி பார்ப்போம்.

“மனித மூளை ஒவ்வொரு பிரச்சினையையும் கணிதம் போல தீர்ப்பதில்லை; பல நேரங்களில் அது அனுபவத்தின் பார்வையில் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறது.”

உளவியலில் Heuristic Problem Solving என்பது மிகவும் முக்கியமான சிந்தனை முறை. ஒரு பிரச்சினைக்கு முழுமையான ஆய்வு அல்லது அனைத்து தகவல்களையும் பகுப்பாய்வு செய்யாமல், அனுபவம், எம்முடைய உள்ளுணர்வு, பழக்கம் அல்லது எளிய விதிமுறைகளை வைத்து விரைவாக ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் முறையையே Heuristic Problem Solving என்று அழைக்கிறோம்.

எளிமையாகச் சொன்னால், “வேகமாக முடிவெடுப்பதற்கு மூளை பயன்படுத்தும் குறுக்கு சிந்தனை பாதை” என்பதே Heuristic.

இது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று பார்க்கும் போது, நாம் தினமும் நூற்றுக்கணக்கான முடிவுகளை எடுக்கிறோம். ஒவ்வொரு முடிவையும் ஆழமாக ஆராய நேரமோ, மன ஆற்றலோ இருக்காது. எனவே, மூளை முந்தைய அனுபவங்களையும், எளிய மன விதிகளையும் பயன்படுத்தி உடனடியாக முடிவெடுக்கிறது. இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது; ஆனால் சில நேரங்களில் தவறான முடிவுகளுக்கும் வழிவகுக்க கூடும்.

ஒரு மாணவர் தேர்வில் மிகவும் கடினமான கேள்வியைப் பார்த்தவுடன் அதை விட்டுவிட்டு, முதலில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதத் தொடங்குகிறார். இது Heuristic க்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.

ஒருவர் மழை மேகங்களைப் பார்த்தவுடன் குடையை எடுத்துச் செல்கிறார். முழு வானிலை அறிக்கையைப் பார்க்காமல், அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். இதுவும் Heuristic.

கடையில் “இந்த பிராண்ட் நல்லது” என்று நினைத்து மீண்டும் அதையே வாங்குவது கூட Heuristic சிந்தனைதான்.

Heuristic இன் நன்மைகள்:

* வேகமாக முடிவெடுக்க உதவுகிறது.

* மன அழுத்தத்தை குறைக்கிறது.

* அன்றாட வாழ்க்கையில் நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்கிறது.

* அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட உதவுகிறது.

# # # Heuristic இன் குறைபாடுகள்:

சில நேரங்களில் இந்த குறுக்கு வழி நம்மை தவறாக வழிநடத்தலாம்.

* ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரின் குணத்தை முடிவு செய்தல்.

* சமூக ஊடகத்தில் பலர் பகிர்ந்ததால் அது உண்மை என்று நம்புதல்.

* ஒரு மோசமான அனுபவத்தை வைத்து எல்லோரையும் ஒரே மாதிரி நினைத்தல்.

இவை அனைத்தும் Heuristic-ன் காரணமாக உருவாகும் Cognitive Bias-களின் உதாரணங்களாக கூற முடியும்.

உளவியலாளர்கள் Daniel Kahneman மற்றும் Amos Tversky ஆகியோரின் ஆய்வுகள், மனிதர்கள் முடிவெடுக்கும் போது Heuristic முறைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது வேகமான சிந்தனையை உருவாக்கினாலும், முக்கியமான முடிவுகளில் தவறுகளுக்கும் காரணமாகலாம்.

ஒரு உளவியலாளராக என்னுடைய செய்தி என்னவென்றால், விரைவாக முடிவு செய்வது எப்போதும் புத்திசாலித்தனம் அல்ல. சரியான தகவல், அமைதியான சிந்தனை, மற்றும் விழிப்புணர்வுடன் எடுக்கப்படும் முடிவுகள்தான் வாழ்க்கையை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்கின்றன.

“Heuristic என்பது சிந்தனையின் குறுக்கு வழி; ஆனால் வாழ்க்கையின் பெரிய முடிவுகளில் குறுக்கு வழியை விட, தெளிவான சிந்தனையே பாதுகாப்பான வழியாகும்.”

✍️ அஹ்ஸன் இன்ஆமி Counselor | Mind Flow Counseling & Therapy Center
071 254 9673

 #மகுடம்_சூட்டப்பட்ட_வெற்றியும்,  #ஓரத்தில்_அமுக்கப்பட்ட_மௌனமும்:  #ஐந்தாம்_தரப்_புலமைப்பரீட்சையும்_பின்தங்க_நேர்ந்த_பச்...
05/09/2026

#மகுடம்_சூட்டப்பட்ட_வெற்றியும், #ஓரத்தில்_அமுக்கப்பட்ட_மௌனமும்: #ஐந்தாம்_தரப்_புலமைப்பரீட்சையும்_பின்தங்க_நேர்ந்த_பச்சிளம்_உள்ளங்களின்_உளவியலும்.

எங்கள் கல்வி முறையில், பத்தாண்டுகள் கூட நிரம்பாத பிஞ்சுக் குழந்தைகளை ஒரு பெருந்துருப்புக்குள்ளோ அல்லது பெரும் போட்டிக்குள்ளோ தள்ளும் ஒரு மாபெரும் சமூகச் சடங்குதான் ஐந்தாம் தரப் புலமைப்பரீட்சை. பல மாத கால பகலிரவு விழித்திருப்புகள், தனியார் வகுப்புகளின் நெரிசல்கள், பெற்றோர்களின் கனவுகள் என எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அந்தச் சின்னஞ்சிறு மண்டபத்திற்குள் நுழைந்த குழந்தைகள், இன்று அதற்கான பரிசுகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டி, ஊரே திரண்டு கொண்டாடும் காட்சிகள் இன்று சமூக ஊடகங்களிலும் நிஜ உலகிலும் நிறைந்திருக்கின்றன. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களின் ஆரவாரத்திற்குப் பின்னால், இந்தச் சமூகத்தின் ஒளியில் படாமல் இருளில் தள்ளப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்ததுண்டா? அந்தப் பரீட்சையில் சித்தியடையாத, அல்லது புள்ளிகள் குறைந்த பச்சிளம் குழந்தைகளின் குமுறும் மனங்களைப் பற்றி இந்தச் சமூகம் எதைத்தான் சிந்தித்திருக்கிறது? ஒரு உளவியலாளனாக, இச்சூழலை ஆழமாகப் பார்க்கும்போது, இது கொண்டாட்டங்களை விட பல மடங்கு அதிகமான விழிப்புணர்வும், கவலையும் கொள்ள வேண்டிய ஒரு உளவியல் அவலமாகும்.

ஒரு குழந்தை இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டம் இந்த ஐந்தாம், ஆறாம் வகுப்புகள். இக்காலகட்டத்தில் அக்குழந்தையின் சுயமரியாதை (Self-esteem) என்பது முழுக்க முழுக்க வெளிப்புற மதிப்பீடுகளைச் சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சமூகம் தன்னை எப்படிக் கருதுகிறது என்பதைக் வைத்தே அக்குழந்தை தன்னைத் தானே அளவிடுகிறது. 'சித்தி' என்ற ஒற்றை வார்த்தை கிடைக்காதபோது, அல்லது தான் எதிர்பார்த்த புள்ளிகள் வராதபோது, அக்குழந்தை அடையும் முதல் அதிர்ச்சி இயலாமை அல்ல; மாறாக, தான் தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு 'தோல்வியாளர்' (Failure) என்ற முத்திரையைப் பெற்றுவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிதான். ஊரே கூடி வெற்றி பெற்ற பிள்ளைகளைக் கொண்டாடும்போது, அந்த விழாக்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனாகவோ, வகுப்பறைக் கூட்டாளியாகவோ செல்லும் தோல்வியடைந்த குழந்தை, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது. "நான் எதற்கும் உதவாதவன்", "அப்பா அம்மாவின் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்" என்ற தாழ்வுமனப்பான்மை (Inferiority complex) அதன் பிஞ்சுக் மனத்தின் ஆழத்தில் வேரூன்ற ஆரம்பிக்கிறது.

இந்த உளவியல் தாக்கம் வெறும் தற்காலிக சோகத்தோடு நின்றுவிடுவதில்லை. மனித உளவியலில் 'தவறான ஒப்பீடு' (Social Comparison Theory) என்பது ஒரு மனிதனின் மனதைச் சுக்குநூறாக உடைக்கக்கூடிய வல்லமை கொண்டது. ஒரு வகுப்பறையில் நேற்று வரை ஒன்றாக விளையாடிய நண்பன், இன்று கழுத்தில் மாலையுடன் மேடையேறுகையில், இவன் மட்டும் கைகளைக் கட்டிக்கொண்டு பார்வையாளர்களின் வரிசையில் நிற்பது அவனது சுயமரியாதைக்குக் கொடுக்கப்படும் மரண அடியாகும். இந்த நேரத்தில் பெற்றோரின் அல்லது ஆசிரியர்களின் எதிர்வினைகள் மிக முக்கியமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது சமூகம் தோல்வியுற்ற பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வதைத் தாண்டி, மறைமுகமாகவோ நேரடியாகவோ அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது. "நீ சரியாகப் படிக்கவில்லை", "அவன் வாசித்தது போல நீ வாசித்தாயா?", "எங்கள் மானத்தைக் காப்பாற்றிவிட்டாய்" என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அக்குழந்தையின் பலவீனமான நரம்பு மண்டலத்தைத் தாக்கி, கவலை (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. சில குழந்தைகள் பேச மறுத்து மூலைக்கு முடங்குவதும், எதற்கெடுத்தாலும் அழுவதும், உணவு உண்பதைத் தவிர்ப்பதும் இத்தகைய உளவியல் சிதைவுகளின் வெளிப்பாடுகள்தாம்.

இச்சூழலின் உச்சக்கட்ட கொடூரம், ஒரு குடும்பத்திற்குள்ளேயே நிகழும்போது இன்னும் பன்மடங்கு வலியை ஏற்படுத்துகிறது. ஒரே வீட்டின் வெவ்வேறு அறைகளில் அல்லது ஒரே வகுப்பறையில் பரீட்சைக்குத் தோற்றிய இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளில், ஒருவன் சித்தியடைந்து மற்றவன் புள்ளிகள் குறைந்துபோகும் சந்தர்ப்பங்களைச் சிந்தித்துப் பாருங்கள். வெற்றி பெற்ற பிள்ளைக்குப் பெற்றோரும் உறவினர்களும் பிரம்மாண்டமான பரிசுகளை வாரி வழங்குவதும், கழுத்தில் மாலை அணிவித்து அழகு பார்ப்பதும் அரங்கேறுகையில்; அதே வீட்டின் மற்றொரு மூலையில், எந்தவித பாராட்டும் இல்லாமல், ஏன் முறையான ஆறுதல் வார்த்தைகளும் இன்றி ஒரு குழந்தை ஒதுக்கி வைக்கப்படுவதை இந்தச் சமூகம் சாதாரணமாகக் கடந்து செல்கிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களிலும், குடும்ப வாட்ஸ்அப் குழுக்களிலும் பாஸ் செய்த பிள்ளையின் புகைப்படங்களும், பரிசளிப்புப் படங்களும், குவியும் வாழ்த்துச் செய்திகளும் பகிரப்படும் அந்தப் பொழுதியில், அந்தத் தோல்வியுற்ற குழந்தையின் மனத்தில் என்ன மாதிரியான ஆழமான வடுக்கள் விழும்? உடன்பிறந்த ஒரு சகோதரன் அல்லது சகோதரிக்குக் கிடைக்கும் அரச மரியாதையும் பாராட்டும், தனக்கு மறுக்கப்படும்போது அக்குழந்தை தனது சொந்த வீட்டிற்குள்ளேயே ஒரு அநாதையாகவும், அன்னியராகவும் உணரத் தொடங்குகிறது. வாட்ஸ்அப் குழுக்களில் உறவினர்கள் பாஸ் செய்த பிள்ளையைப் புகழ்ந்து தள்ளும் போது, அந்தத் தோல்வியுற்ற குழந்தை தன் பெற்றோரின் முகத்தில் தனக்கான எந்தவொரு அங்கீகாரத்தையும் காண முடியாமல் தவிக்கிறது. "என் மகனும் பாஸ் பண்ணியிருக்கலாம், ஆனால் இவன் சோம்பேறித்தனத்தால் தோற்றுவிட்டான்" என்ற மறைமுகமான அல்லது நேரடியான குற்றச்சாட்டுகள் அக்குழந்தையின் சுயமரியாதையைச் சுக்குநூறாக உடைத்து விடுகின்றன. இதனால் அக்குழந்தை தன் சொந்த குடும்பத்திற்குள்ளேயே தன்னைத் தகுதி குறைந்தவராகக் கருதி, கூண்டுக்குள் அடைபட்ட பறவையைப் போலத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருக்கவும் பழகிக் கொள்கிறது.

இந்த உளவியல் வடு பிற்காலத்தில் 'பொறாமை' (Jealousy) மற்றும் 'சகோதர போட்டி மனப்பான்மை' (Sibling Rivalry) என்ற ஆரோக்கியமற்ற எல்லைகளைத் தாண்டி, ஆழ்ந்த மனச்சோர்வுக்கு (Depression) வழிவகுத்து விடுகிறது. "என் பெற்றோருக்கு என்னை விட என் தம்பி அல்லது அண்ணாதான் அதிகம் பிடிக்கும், ஏனென்றால் அவன் அறிவாளி" என்ற தவறான முடிவு அக்குழந்தையின் மனதில் வேரூன்றும்போது, அது தன் சொந்த உடன்பிறந்தவன் மீதே ஒரு வகையான வன்மத்தையும் கோபத்தையும் வளர்த்துக்கொள்ளத் தூண்டுகிறது. ஒரு தாயின் மடியும், தந்தையின் அரவணைப்பும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு பரீட்சைப் புள்ளி அந்தச் சமத்துவக் கோட்டைத் தகர்த்து, ஒரு பிள்ளையைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும்போதே, மறு பிள்ளையை இருளில் தள்ளிவிடுகிறது. பரிசுகள் கிடைக்காதது கூட ஒரு பொருட்டல்ல; ஆனால், "நீ என் பிள்ளைதான், உன்னால் இந்தத் தடவை முடியாவிட்டாலும் உனது முயற்சி எனக்கு முக்கியம்" என்று முதுகில் தட்டிக் கொடுக்க ஒரு கைகூட இல்லாமல், மற்ற பிள்ளைகளின் வெற்றிக் கொண்டாட்டங்களை வாட்ஸ்அப் வழியும் நேரிலும் வேடிக்கை பார்க்கும் அந்தத் தவிப்பு, ஒரு பச்சிளம் உள்ளத்திற்குத் கொடுக்கப்படும் மிகக் கொடூரமான தண்டனையாகும்.

இங்குதான் நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு பரீட்சை ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த அறிவுத்திறனையோ அல்லது அவனது எதிர்காலத்தையோ ஒருபோதும் தீர்மானித்துவிட முடியாது. எட்ட முடியாத இலக்கை நோக்கி ஒரு குழந்தையைத் துரத்திவிட்டு, அந்த ஓட்டத்தில் அது சற்றுத் தடுமாறி கீழே விழும்போது, கையைப் பிடித்துத் தூக்கி விடுவதற்குப் பதிலாக, "ஏன் விழுந்தாய்?" என்று தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? வெற்றி பெற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் அதே கவனிப்பும், அன்பும், பாராட்டும் சித்தியடையாத பிள்ளைகளுக்கும் அவசியமான தேவையாகிறது. குறிப்பாக, இந்தத் தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, மாறாக ஒரு ஆரம்பப் பாடம்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது பெற்றோர்களின் தார்மீகக் கடமையாகும். "நீ பாஸ் ஆகாவிட்டாலும் என் செல்லப் பிள்ளைதான்", "இந்த ஒரு பரீட்சை உன்னை அளவிடாது" என்ற ஒற்றை அரவணைப்பு வார்த்தை, எத்தனையோ மாபெரும் தோல்விகளைத் தாங்கும் மனவுறுதியை அக்குழந்தைக்கு வழங்கும்.

கொண்டாட்டங்கள் தேவைதான்; அது உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம். ஆனால், அந்த அங்கீகாரம் மற்றொரு பச்சிளம் உள்ளத்தின் நம்பிக்கையைக் கொன்றுவிடாத வண்ணம் இருக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடும் அதேவேளை, கைவிட்டோ அல்லது பின்தங்கியோ போன பிள்ளைகளின் கைகளைப் பற்றிக் கொள்ளும் பரந்த மனப்பான்மையை இந்தச் சமூகம் மற்றும் குடும்பங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பரீட்சை முடிவுகள் என்னவாக இருந்தாலும், மனிதர்களாகிய நாம் குழந்தைகளை அவர்களின் புள்ளிகளுக்காக நேசிக்காமல், அவர்கள் மனிதர்களாக இருப்பதற்காக நேசிக்கக் கற்றுக் கொள்ளும் நாளே நமது உண்மையான சமூக உளவியல் வளர்ச்சியின் தொடக்கமாக அமையும். தோல்வியின் பள்ளத்தில் திகைத்து நிற்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நமது ஆறுதலின் கரங்களையும், சமமான அன்பையும் பரிமாறி, அவர்களின் எதிர்கால விடியலுக்கான வெளிச்சமாய் மாறுவோம்.

✍️ Ahsan Ina'amy | அஹ்ஸன் இன்ஆமி,
உளவியலாளர்.

🧠 100 Days • 100 Psychology Posters | Day 02கவலை (Anxiety) vs பயம் (Fear)பயம் என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு உண்மை...
04/09/2026

🧠 100 Days • 100 Psychology Posters | Day 02

கவலை (Anxiety) vs பயம் (Fear)

பயம் என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு உண்மையான ஆபத்திற்கான இயல்பான பதில்.

கவலை என்பது ஆபத்து இல்லாத நேரத்திலும், “ஏதாவது நடக்குமோ?” என்ற எதிர்கால எண்ணங்களால் மனம் உருவாக்கும் பதற்றம்.

நினைவில் கொள்ளுங்கள்:

- பயம் ஒரு சூழ்நிலையுடன் தொடர்புடையது.
- கவலை பல நேரங்களில் நம் எண்ணங்களுடன் தொடர்புடையது.
- இரண்டையும் புரிந்துகொள்வதே மன அமைதிக்கான முதல் படி.

“நம் எண்ணங்களை நாம் நிர்வகிக்க கற்றுக்கொண்டால், கவலை நம்மை நிர்வகிக்க முடியாது.”

📍 MIND FLOW Counseling & Therapy Center
📞 +94 71 254 9673
📍 251/A, Imam Gazzaly Road, Nintavur 11.

Whatsapp Channel
👇🏻👇🏻👇🏻👇🏻
https://whatsapp.com/channel/0029VauNBwe6mYPSDGbaQh3S

Facebook
👇🏻👇🏻👇🏻👇🏻
https://www.facebook.com/share/1J62TB9GRr/

🌿 வாழ்த்துகள்... முன்னேறுங்கள்... 💙2026 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் ம...
02/09/2026

🌿 வாழ்த்துகள்... முன்னேறுங்கள்... 💙

2026 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹

வெற்றி பெற்ற மாணவர்களே... உங்கள் உழைப்புக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும் பாராட்டுக்கள். இந்த வெற்றி உங்கள் பயணத்தின் ஒரு அழகான தொடக்கம் மட்டுமே.

இந்த முறை வெற்றி பெறாத மாணவர்களே... தயவுசெய்து மனம் தளர வேண்டாம். ஒரு பரீட்சையின் முடிவு உங்கள் முழு வாழ்க்கையின் முடிவு அல்ல. உங்கள் திறமையும், கனவுகளும், எதிர்காலமும் இன்னும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றன.

வெற்றி பெற்றவர்கள் வாழ்த்துங்கள். வெற்றி பெறாதவர்களை தோள்கொடுத்து நிற்குங்கள். 💚
ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஊக்கப்படுத்தப்பட வேண்டியவர்களே.

Mind Flow Counseling & Therapy Center
உங்கள் மனதை புரிந்துகொண்டு, உங்கள் பயணத்தில் உங்களுடன்... 🌿

📞 +94 71 254 9673
📍 251/A, Imam Gazzaly Road, Nintavur 11

Whatsapp Channel
👇🏻👇🏻👇🏻
https://whatsapp.com/channel/0029VauNBwe6mYPSDGbaQh3S

Facebook
👇🏻👇🏻👇🏻
https://www.facebook.com/share/1HYfpypUYp/

🧠 100 Days • 100 Psychology Posters | Day 01மனஅழுத்தம் என்றால் என்ன?மனஅழுத்தம் (Stress) என்பது பலவீனம் அல்ல; நம் மனமும் ...
01/09/2026

🧠 100 Days • 100 Psychology Posters | Day 01

மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் (Stress) என்பது பலவீனம் அல்ல; நம் மனமும் உடலும் சவால்களுக்கு அளிக்கும் இயல்பான பதில்தான்.

சிறிதளவு மனஅழுத்தம் நம்மை முன்னேறச் செய்யலாம். ஆனால் அது நீண்ட நாட்கள் தொடரும்போது, தூக்கம், கவனம், உடல்நலம் மற்றும் உறவுகளையும் பாதிக்கத் தொடங்கும்.

மனஅழுத்தத்தின் சில அறிகுறிகள்:

- அதிக கவலை
- தூக்கமின்மை
- எரிச்சல்
- கவனம் சிதறுதல்
- உடல் சோர்வு

நினைவில் கொள்ளுங்கள்:
"மனஅழுத்தத்தை மறைக்காதீர்கள்; அதை புரிந்துகொண்டு நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்."

📍 MIND FLOW Counseling & Therapy Center
📞 +94 71 254 9673
📍 251/A, Imam Gazzaly Road, Nintavur 11.

Whatsapp Channel
👇🏻👇🏻👇🏻
https://whatsapp.com/channel/0029VauNBwe6mYPSDGbaQh3S

Facebook
👇🏻👇🏻👇🏻
https://www.facebook.com/share/1HYfpypUYp/

🌿 Counseling என்றால் என்ன? 🧠Counseling என்பது மனநோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமல்ல. வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், மன அழ...
18/08/2026

🌿 Counseling என்றால் என்ன? 🧠

Counseling என்பது மனநோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமல்ல. வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், மன அழுத்தம், உறவுச் சிக்கல்கள், கல்வி/தொழில் தொடர்பான குழப்பங்கள் போன்றவற்றை புரிந்துகொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்கவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் உதவும் ஒரு ஆதரவு செயல்முறை. 🤝

💚 Mind Flow Counseling & Therapy Center
உங்கள் மனநலத்தை மதித்து, பாதுகாப்பானதும், ரகசியமானதும், கருணையுடனானதுமான ஒரு சூழலில் உங்களுடன் பயணிக்கிறது.

✨ நாங்கள் உதவுகிறோம்:

• மனஅழுத்தம் & உணர்ச்சி சமநிலை
• கல்வி & தேர்வு கவலை
• தொழில் வழிகாட்டல்
• உறவுச் சிக்கல்கள்
• தன்னம்பிக்கை & தனிமுன்னேற்றம்
• வாழ்க்கைத் திட்டமிடல் & முடிவெடுப்பு

👨‍💼 Counselor – Ahsan Ina’amy
BSC in Psychology and Counseling®
Dip in Islamic Psychology
NLP SUPREME MASTER

📞 +94 71 255 9673
📍 251/A Imam Gazzaly Road, Nintavur 11

🔐 Professional • Confidential • Compassionate

Find Your Clarity • Build Your Confidence • Achieve Your Dreams 🌱

Whatsapp channel
👇👇👇👇👇👇
https://whatsapp.com/channel/0029VauNBwe6mYPSDGbaQh3S

மாணவர்கள் அவர்களின் Goal ஐ கண்டறிய சிரமப்படுகிறார்களா?
12/08/2026

மாணவர்கள் அவர்களின் Goal ஐ கண்டறிய சிரமப்படுகிறார்களா?

11/08/2026

நீங்க Counseling போகக்கூடிய வரா? அப்போ உங்களுக்கு ஏதோ மன நோய் தான்....🧐

🎤 Ahsan Ina'amy | அஹ்ஸன் இன்ஆமி,
உளவியலாளர்.

Address

Nintavur

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIND FLOW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share