Dr AMM Issadeen

Dr AMM Issadeen MBBS (Peradeniya)
PGDip in Health Development (Colombo)
Medical Doctor & Social Worker. Worked at Pottuvil, Komari, Nintavur, Addalachenai & Colombo.

25/03/2025
25/03/2025
Dr. A.M.M.Issadeen அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வானது பொத்துவில் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்...
18/03/2025

Dr. A.M.M.Issadeen அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வானது பொத்துவில் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இளைஞர்கள்,உலமாக்கள் உட்பட பெருமளவான பிரதேசவாசிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பொத்துவில் சபீலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் கையூம் மௌலவி (ஷர்க்கி) அவர்கள் மார்க்கச் சொற்பொழிவை நிகழ்த்திச் சிறப்பித்திருந்தார்.

The annual Iftar event organized by Dr. A.M.M. Issadeen was held yesterday at the Pottuvil Cultural Hall.
A large number of local residents, including youth and scholars, participated in this event. The principal of Pottuvil Sabeelur Rashad Arabic College, Ash-Sheikh Kayum Mawlavi (Sharqi), graced the occasion with a special religious sermon.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு!அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி...
02/03/2025

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு!

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (27) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, முன்பள்ளி பாடசாலை எவ்வாறு அமையவேண்டும், அப்பாடசாலையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் வழங்கி வைத்தார்.

மேலும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் போன்றவற்றை எவ்வாறு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நற்பண்புகள், நல்லெண்ணங்கள், நற்சிந்தனைகள் போன்றவற்றை எவ்வாறு போதிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அத்துடன் அவர்களுக்குத் தேவையான போசாக்கு நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் எடுத்துரைத்தார்.

Address

Pottuvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr AMM Issadeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr AMM Issadeen:

Share

Category