08/04/2026
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை இயந்திரம் வழங்கல்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தேவைக்காக Colombo Mid City Rotary Club மற்றும் Australia Medical Aid Foundation ஆகிய நிறுவனங்களின் நிதி பங்களிப்பின் மூலமாக ரூபா 47 மில்லியன் பெறுமதியான கண் சத்திர சிகிச்சை இயந்திரம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி, Colombo mid city Rotart Club கௌரவ உறுப்பினர்கள், Australia Medical Aid Foundation நிறுவன பிரதிநிதிகள், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.J.M.Nilakshan, ஏனைய மருத்துவர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் இயந்திரம் மூலமான சிகிச்சைகள் வாயிலாக
வவுனியா மட்டுமல்லாது அயல் மாவட்டங்களில் இருந்தும் வந்து மருத்துவ சேவை பெறும் நோயாளர்களுக்கு, பொது மக்களுக்கும் இதனூடாக மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கமுடியும் என்பதுடன் கண் சிகிச்சை தொடர்பான நோய்களின் நிவாரணத்திற்கு பெரும் உபயோகமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை வழங்கி வைத்த குறித்த சமூகசேவை நிறுவனத்தாருக்கு வைத்தியசாலை சமூகம் சார்பாக நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.