IMHO UK

IMHO UK International Medical Health Organization

💧 தூய்மையான குடிநீர் – ஆரோக்கியமான குழந்தைகள்International Medical Health Organization – UK (IMHO-UK) அமைப்பின் அனுசரணைய...
31/08/2026

💧 தூய்மையான குடிநீர் – ஆரோக்கியமான குழந்தைகள்

International Medical Health Organization – UK (IMHO-UK) அமைப்பின் அனுசரணையில், மட்டக்களப்பு கிராமப்புறப் பகுதியில் தூய்மையான குடிநீர் பெறுவதற்கான Water Filter வசதி வழங்கப்பட்டது. 💙

குழந்தைகள் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. 😊

தூய்மையான நீர் • ஆரோக்கியமான குழந்தைகள் • வலிமையான சமூகம் 🌱

🙏 IMHO-UK அமைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!

🌟 இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை வளர்ச்சிக்காக,ஒரு சிறப்பான நற்பணி நிகழ்வு! 🌟உங்களை அன்புடன் அழைக்கிறது – IMHO UK✨ IMHO U...
26/08/2026

🌟 இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை வளர்ச்சிக்காக,
ஒரு சிறப்பான நற்பணி நிகழ்வு! 🌟

உங்களை அன்புடன் அழைக்கிறது – IMHO UK

✨ IMHO UK Annual Gala 2026 ✨
நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான மாலை நிகழ்வு.

📅 21 நவம்பர் 2026 – சனிக்கிழமை
📍 Crystal Grand Slough
3 Bath Road, Slough, SL1 3UA
🕔 மாலை 5:00 மணி முதல்

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை வளர்ச்சிக்கும்,
ஆன்லைன் கல்வி மேம்பாட்டிற்கும் பங்களிக்கும்
இந்த மகத்தான முயற்சியில் நாமும் ஒன்றிணைவோம்.

💙 உங்கள் ஆதரவு… ஒரு மாற்றத்தை உருவாக்கும்!

✨ 21 நவம்பர் 2026 – SAVE THE DATE! ✨

IMHO UK Annual Gala 2026
Together for a healthier and better Sri Lanka

30/07/2026

# IMHO

IMHO UK அமைப்பின் கல்வி உதவியால் கிளி/சிவபாதகலையகம் அதக பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்கிளிநொ...
27/07/2026

IMHO UK அமைப்பின் கல்வி உதவியால் கிளி/சிவபாதகலையகம் அதக பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள்

கிளிநொச்சி மாவட்டம், பொன்னகர் பகுதியில் அமைந்துள்ள கிளி/சிவபாதகலையகம் அதக பாடசாலை (KN/Sivapathakalaiyakam G.T.M.S), 2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளைப் பதிவு செய்து கல்வித்துறையில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் நோக்கில் IMHO UK அமைப்பினால் மடிக்கணினி (Laptop), பல்லூடக ஒளிக்காட்டி (Projector) மற்றும் ஒலிபெருக்கி (Speaker) உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. இவ்வுதவிகள் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும், தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் சூழலை உருவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், 36 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 21 மாணவர்கள் சித்தி பெற்று 58.3% மொத்த சித்தி வீதத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், 16 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 44.4% என்ற சிறப்பான பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

இச்சிறப்பான கல்விச் சாதனைக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு பாடசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் IMHO UK அமைப்பிற்கும் பாடசாலை சமூகத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

கிளி/வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு IMHO UK அமைப்பின் கல்வி உதவிகிளிநொச்சி, வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு...
25/07/2026

கிளி/வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு IMHO UK அமைப்பின் கல்வி உதவி

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு IMHO UK அமைப்பினால் மடிக்கணினி (Laptop), பல்லூடக ஒளிக்காட்டி (Projector) மற்றும் ஒலிபெருக்கி (Speaker) ஆகிய கல்வி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வுதவி மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த பெரும் பங்களிப்பாக அமையும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்ததுடன், IMHO UK அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளது.

BD/ PINGARAWA TAMIL VIDYALAYA த்திற்கு IMHO (UK) அமைப்பின் அன்பளிப்பு சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு IMHO (UK) வழங்கிய...
25/07/2026

BD/ PINGARAWA TAMIL VIDYALAYA த்திற்கு IMHO (UK) அமைப்பின் அன்பளிப்பு

சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு IMHO (UK) வழங்கிய Ricoh - M2510 நகலெடுக்கும் இயந்திரம், டோனர் மற்றும் A4, A3 நகலெடுக்கும் தாள்கள் பிங்கரவ தமிழ் வித்தியாலயத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்நன்கொடை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்ததுடன், அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளது.

இலவச கண் மருத்துவ முகாம்சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு (IMHO) ஏற்பாட்டில், பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்...
24/07/2026

இலவச கண் மருத்துவ முகாம்

சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு (IMHO) ஏற்பாட்டில், பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாம் 2026 ஜூலை 25 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மத்திய சனசமூக நிலையம், அச்சுவேலி வளாகத்தில் நடைபெறும். இதில் தகுதியான கண் மருத்துவ நிபுணர்கள் மூலம் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் கண் ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு:
📞 077 940 5877 | 076 169 9813

யாழ்ப்பாண ஜெய்ப்பூர் மையத்தின் மீள் திறப்பு விழாவும் செயற்கை அவயங்கள் வழங்கும் திட்டமும் - 2026
27/06/2026

யாழ்ப்பாண ஜெய்ப்பூர் மையத்தின் மீள் திறப்பு விழாவும் செயற்கை அவயங்கள் வழங்கும் திட்டமும் - 2026

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டனகிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களி...
23/06/2026

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில், International Medical Health Organization – UK (IMHO-UK) அமைப்பின் அனுசரணையில் 23.06.2026 அன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் IMHO-UK அமைப்பின் தலைவர் Dr. சிவகுமார், செயலாளர் Dr. ராஜ்குமார், பொருளாளர் திரு. அன்ரன் மார்க்ஸ்வெல் மற்றும் கல்விக் காப்பாளர் திரு. ஸ்ரீதரன் ஆகியோரினால் நிறுவனத்தின் ஊடாக .துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் கிளி/ பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் கிளி/ சிவபாதகலையகம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டன.

மாணவர்களின் பாடசாலை வருகையை இலகுபடுத்துவதற்கும், கல்வி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி மற்றும் நலனில் அக்கறை கொண்டு சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றது.

கிளிநொச்சியில் இலவசமாக தொழிற் கல்லியை வழங்கி வரும் நிறுவனமான Little Tech Academy மாணவர்களுக்கான   விளையாட்டு உபகரணங்கள் ...
18/06/2026

கிளிநொச்சியில் இலவசமாக தொழிற் கல்லியை வழங்கி வரும் நிறுவனமான Little Tech Academy மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.

கிளிநொச்சி திருநகரில் கடந்த 16 வருடங்களுக்கு மேலாக இலவச தொழிற் கல்வியை வழங்கிவரும் நிறுவனமான Little Tech Academy மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் 15.06.2026 அன்று
International Medical Health Organization - UK (IMHO-UK) )அமைப்பின் அனுசரணையில் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன.

Address

Croydon
Purley
CR84JB

Alerts

Be the first to know and let us send you an email when IMHO UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to IMHO UK:

Shortcuts

Featured

Share