Dr.Ahamed Mufeek

Dr.Ahamed Mufeek Doctor 👨🏻‍⚕️
University of Colombo - Sri lanka
Independent Medical Practice & Consultation.

Plantar Fascia என்றால் என்ன?பாதத்தின் அடிப்பகுதியில், குதிகால் (Heel) முதல் கால் விரல்கள் வரை நீளமாக இருக்கும் வலுவான தி...
18/07/2026

Plantar Fascia என்றால் என்ன?

பாதத்தின் அடிப்பகுதியில், குதிகால் (Heel) முதல் கால் விரல்கள் வரை நீளமாக இருக்கும் வலுவான திசு நார் (Ligament) ஆகும். இது பாதத்தின் வளைவை (Arch) தாங்கி கொள்கிறது; நடப்பது, ஓடுவது மற்றும் நிற்பது போன்ற செயல்களில் உதவுகிறது.

Plantar Fasciitis என்பது இந்த நார் திசுவில் ஏற்படும் அழற்சி அல்லது சிறிய கிழிவுகளால் ஏற்படும் ஒரு நிலை.

அறிகுறிகள்:

●காலையில் எழுந்து முதல் சில அடிகள் நடக்கும்போது குதிகாலில் கடுமையான வலி.
●நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் அல்லது நடந்தால் வலி அதிகரித்தல்.
●பாதத்தின் அடிப்பகுதியில் இறுக்கம் அல்லது வலி.

காரணங்கள்:

●நீண்ட நேரம் நிற்பது.
●அதிக உடல் எடை.
●தவறான காலணி அணிவது.
●அதிக நடை, ஓட்டம் அல்லது உடற்பயிற்சி.

சிகிச்சை:

●பாதத்திற்கு ஓய்வு கொடுங்கள்.
●Ice pack 15–20 நிமிடங்கள், தினமும் 3–4 முறை.
●பாதம் மற்றும் கால் தசைகளுக்கான நீட்டிப்பு (Stretching) பயிற்சிகள்.
●மென்மையான குதிகால் ஆதரவு கொண்ட காலணிகள் அல்லது Heel pad பயன்படுத்துதல்.
●வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகள் அல்லது உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy).

Dr.A.S.A.Mufeek

Paronychia Paronychia என்பது கை அல்லது கால் நகத்தின் ஓரத்தில் உள்ள தோலில் ஏற்படும் தொற்று ஆகும். இது பொதுவாக பாக்டீரியா ...
02/07/2026

Paronychia

Paronychia என்பது கை அல்லது கால் நகத்தின் ஓரத்தில் உள்ள தோலில் ஏற்படும் தொற்று ஆகும். இது பொதுவாக பாக்டீரியா அல்லது பங்கசு தொற்றால் ஏற்படுகிறது.

காரணங்கள்

நகம் கடிக்கும் பழக்கம்
நகத்தை அதிகமாக வெட்டுதல்
விரல் நுனியில் ஏற்பட்ட சிறிய காயம்
முள் அல்லது கூர்மையான பொருளால் ஏற்பட்ட காயம்
கைகளை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பது
சர்க்கரை நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

அறிகுறிகள்

நகத்தின் ஓரத்தில் சிவப்பு
வீக்கம்
கடுமையான வலி
சூடாக உணர்தல்
சலம் உருவாகுதல்
சில நேரங்களில் காய்ச்சல்

தடுக்கும் வழிகள்

நகங்களை சுத்தமாகவும் குறுகியதாகவும் வைத்திருங்கள்.
நகம் கடிப்பதைத் தவிர்க்கவும்.
கைகளைக் நீண்ட நேரம் ஈரமாக வைத்திருக்க வேண்டாம்.
நகத்தைச் சுற்றிய தோலை கிழிக்கவோ வெட்டவோ வேண்டாம்.

குறிப்பு

உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய நிலைகள்
சலம் அதிகமாக இருப்பது
சிவப்பு கை அல்லது காலில் பரவுவது
கடுமையான வலி அல்லது காய்ச்சல்
சர்க்கரை நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது.

Dr.A.S.A.Mufeek

CellulitisCellulitis என்பது தோல் மற்றும் தோலின் அடிப்புற மென்மையான திசுக்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும். இது பொத...
01/07/2026

Cellulitis

Cellulitis என்பது தோல் மற்றும் தோலின் அடிப்புற மென்மையான திசுக்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக காயம், வெட்டு, பூச்சிக்கடி, பிளந்த தோல், அல்லது நீரிழிவு நோயாளிகளின் பாதப் புண்கள் வழியாக கிருமிகள் உடலுக்குள் நுழைவதால் ஏற்படுகிறது.

காரணங்கள்

பாக்டீரியாக்கள் தொற்று
காயம், வெட்டு, சிராய்ப்பு
பூச்சிக்கடி
நீரிழிவு நோய்
காலில் பூஞ்சைத் தொற்று
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

இதன் அறிகுறிகள்

தோல் சிவந்து காணப்படுதல்
வீக்கம்
கடுமையான வலி அல்லது தொடும்போது வலி
தோல் சூடாக உணரப்படுதல்
காய்ச்சல் மற்றும் நடுக்கம்
சிலருக்கு சீழ் உருவாகலாம்

இது அதிக ஆபத்து ஏற்படுதுவது

நீரிழிவு நோயாளிகள்
முதியவர்கள்
உடல் பருமன் உள்ளவர்கள்
இரத்த ஓட்டக் குறைபாடு உள்ளவர்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

சிகிச்சை

மருத்துவர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
பாதிக்கப்பட்ட உறுப்பை உயர்த்தி ஓய்வெடுத்தல்
வலி மற்றும் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள்
சீழ் இருந்தால் மருத்துவரால் வடிகட்டுதல் (Drainage)
நீரிழிவு இருந்தால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்

இதன் ஆபத்துகள்

சிகிச்சை தாமதமானால் சீழ்க்கட்டி உருவதல்
தொற்று இரத்தத்தில் பரவுதல்
தோல் சேதம்
உயிருக்கு ஆபத்தான நிலை

தடுக்கும் முறைகள்

காயங்களை உடனே சுத்தம் செய்து கட்டுப் போடுதல்
கால்களை தினமும் பரிசோதித்தல் (குறிப்பாக நீரிழிவு நோயாளிகள்)
தோலை சுத்தமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்தல்
பூஞ்சைத் தொற்றுகளுக்கு உடனடி சிகிச்சை பெறுதல்

முக்கிய குறிப்பு: தோல் திடீரென சிவந்து, வீங்கி, சூடாக இருந்து காய்ச்சலுடன் இருந்தால்,உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Dr.A.S.A.Mufeek

வீனஸ் அல்சர் (Venous Ulcer) வீனஸ் அல்சர் என்பது கால்களில் உள்ள இரத்த குழாயில்(Vein) இரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் ஏற்பட...
30/06/2026

வீனஸ் அல்சர் (Venous Ulcer)

வீனஸ் அல்சர் என்பது கால்களில் உள்ள இரத்த குழாயில்(Vein) இரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் ஏற்படும், நீண்ட காலம் ஆறாமல் இருக்கும் புண் ஆகும்.
இது பெரும்பாலும் கணுக்காலின் உள் பகுதியில் தோன்றுகிறது.

இவை ஏற்பட காரணங்கள்

கால்களில் இரத்த குழாயில் உள்ள வால்வுகள் செயலிழத்தல்
இரத்த குழாயில் ஏற்படும் இரத்த உறைவு
உடல் பருமன் அதிகமாக இருதல்
நீண்ட நேரம் நின்று வேலை செய்தல்
வயது அதிகரித்தல்
இரத்த குழாய் நாளங்கள் வீங்குதல்

இதன் அறிகுறிகள்

கணுக்காலின் உள் பகுதியில் புண்
கால்களில் வீக்கம்
காலில் கனமாக உணர்தல்
வலி (காலை உயர்த்தி வைத்தால் குறையலாம்)
தோல் கருமையாக மாறுதல்
அரிப்பு மற்றும் தோல் தடிப்பாகுதல்
புண்ணில் மஞ்சள் நிற சுரப்பு இருக்கலாம்

சிகிச்சை முறைகள்

Compression bandage / Compression stockings (ABPI சாதாரணமாக இருந்தால்)
கால்களை இதய மட்டத்தை விட உயரமாக வைத்தல்
புண்ணை சுத்தம் செய்து பொருத்தமான டிரெசிங் செய்தல்
தொற்று இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக்
வலி நிவாரண மருந்துகள்
Endovenous ablation அல்லது அறுவை சிகிச்சை (தேவைப்பட்டால்)

இதன் ஆபத்துகள்

புண் நீண்ட காலம் ஆறாமல் இருத்தல்
தொற்று
Cellulitis
மீண்டும் மீண்டும் புண் வருதல்

தடுப்பு முறைகள்

நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கவும்.
தினமும் நடைப்பயிற்சி செய்யவும்.
உடல் எடையை கட்டுப்படுத்தவும்.
மருத்துவர் பரிந்துரைத்தால் compression stockings அணியவும்.
கால்களை தினமும் பரிசோதித்து சுத்தமாக வைத்திருக்கவும்.
நினைவில் கொள்ளுங்கள்: காலில் நீண்ட நாட்களாக ஆறாத புண் இருந்தால், அது வீனஸ் அல்சரா அல்லது வேறு காரணமா என்பதை உறுதிப்படுத்த மருத்துவரை அணுகுவது அவசியம்.

Dr.A.S.A.Mufeek

சர்க்கரை/சீனி நோயால் ஏற்படும் புண்/கட்டி (Diabetic Abscess)சர்க்கரை/சீனி நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு உடலில் தொற்று ஏற...
28/06/2026

சர்க்கரை/சீனி நோயால் ஏற்படும் புண்/கட்டி (Diabetic Abscess)

சர்க்கரை/சீனி நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு உடலில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும். இதனால் தோலின் கீழ் பாக்டீரியா தொற்று(infection) ஏற்பட்டு சீழ்(சலம்) நிரம்பிய கட்டி (Abscess) உருவாகலாம். இதை பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சீழ்க்கட்டி அல்லது Diabetic Abscess என்று கூறுவர்.

நோய் அறிகுறிகள்:

பாதிக்கப்பட்ட இடத்தில் வீக்கம்
கடுமையான வலி
சிவப்பு மற்றும் சூடு
சீழ் வெளியேறுதல்
காய்ச்சல் அல்லது உடல் சோர்வு
காயம் தாமதமாக ஆறுதல்

ஏன் ஏற்படுகிறது?

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது
சிறிய காயங்கள் அல்லது தோல் தொற்றுகள்
சுகாதார பராமரிப்பு குறைபாடு

சிகிச்சை:

மருத்துவர் சீழை/சலத்தை வெளியேற்றுவது (Incision and Drainage)
பொருத்தமான ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
காயத்தை தினமும் சுத்தமாக பராமரித்தல்

கவனிக்க வேண்டியது:

சீழ்க்/சலக்கட்டியை வீட்டிலேயே அழுத்தி உடைக்க முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளில் இது தீவிர தொற்றாக மாறக்கூடும். வலி, காய்ச்சல் அல்லது சீழ் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.

Dr.A.S.A.Mufeek

Address

Colombo

Telephone

0752292368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ahamed Mufeek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share